சென்னை: பாமகவுக்குள் நடப்பது உட்கட்சி விவகாரம் என்றும், இதனை எங்களுக்குள் பேசிக் கொள்வோம் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இனி அன்புமணி ராமதாஸ் பாமகவின் செயல் தலைவராக செயல்படுவார். பாமகவின் தலைவர் பொறுப்பை நானே எடுத்து கொள்கிறேன். 2026 சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்களை வழிநடத்தவே இந்த முடிவு எடுத்துள்ளேன். பாமக தலைவராக நான் பொறுப்பேற்றதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு.
அனைத்தையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது. கூட்டணி உள்ளிட்ட விஷயங்கள் குறித்து கட்சியின் நிர்வாகிகளை அழைத்து பேசி முடிவெடுப்போம் என்று தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதனைத் தொடர்ந்து தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் வீட்டிற்கு பாமக நிர்வாகிகள் பலரும் படையெடுத்தனர். ஆனால் ராமதாஸ் எடுத்த முடிவில் பிடிவாதமாக இருந்து வருகிறார்.
இதனிடையே பாமக தொண்டர்கள் யாரும் தன்னை பார்க்க வர வேண்டும் என்று கேட்டு கொண்டதாக தகவல் வெளியாகியது. நேற்று இரவு அன்புமணி ராமதாஸ் தரப்பில், பாமகவின் தலைவராக தொடர்ந்து செயல்படுவேன் என்று பதிலடி கொடுத்தார். அதேபோல் மே 11ஆம் தேதி மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டை வெற்றிகரமாக நடத்த பணிகள் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
பாமகவில் தந்தை மற்றும் மகனுக்கு இடையிலான மோதல் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் 12 ஆண்டுகளுக்கு பின் நடக்கவுள்ள சித்திரை நிலவு மாநாட்டு பணிகளை அன்புமணி ராமதாஸ் ஆய்வு செய்தார். அவருடன் பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் இருந்தனர்.
அன்புமணி ராமதாஸ் பேட்டி
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து அன்புமணி ராமதாஸ் பேசுகையில், வரும் மே 11ஆம் தேதி மாமல்லபுரம் அருகே சித்திரை நிலவு வன்னியர் இளைஞர் திருவிழா மாநாடு நடக்கவுள்ளது. இந்த மாநாட்டின் முக்கிய கோரிக்கைகள் சமூக நீதி அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்டவை உள்ளன. இந்த மாநாட்டிற்கு இளைஞர்கள், பெண்கள் பங்கேற்க உள்ளனர்.
உட்கட்சி விவகாரம்
இந்த மாநாடு மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடக்கவுள்ளது. அதேபோல் தற்போது பாமகவுக்குள் நடப்பது உட்கட்சி விவகாரம். எங்களுக்குள் பேசிக் கொள்வோம். ராமதாஸ் வழிகாட்டுதலில் பாமகவை தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியாக மாற்றுவதற்கு கடுமையாக உழைப்போம் என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment