தருமபுரி: தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே மோதூர் கிராமத்தில் அமைந்துள்ள வேளாண்மை கூட்டுறவு வங்கியில், அடகு வைக்கப்பட்ட நகைகளை திருப்பி கொடுக்கவில்லை என்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே மோதூர் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி 1952 முதல் இயங்கி வருகிறது. இந்த வங்கியில் இப்பகுதியை சேர்ந்த 3300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது வங்கிக் கணக்கினை தொடங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
வங்கியில் விவசாயம், மகளிர்குழுகடன், பயிர் கடன், விவசாய பொருட்கள் கடன், மேலும் தங்க நகை கடன் உள்ளிட்டவைக்கு, இந்த வங்கியில் இருந்து பொதுமக்கள் கடன்பெற்று தங்களது அவசர தேவைக்கு பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டில் தங்க நகை கடன் ஐந்து பவுனிற்கும் குறைவாக உள்ளவர்கள் அனைவருக்கும் தமிழக அரசால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த தங்க நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு தற்போது 15 ஆண்டுகள் ஆகியும் இதுவரை உரிய நகை வழங்கவில்லை என கூறி, வாடிக்கையாளர்கள் வங்கி முன்பு இன்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டு வங்கி அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதுகுறித்து வாடிக்கையாளர்களிடம் கேட்டபோது வங்கியில் தங்களது நகையை வங்கி அதிகாரிகள் ஊழல் செய்து, தங்களது நகையை தர மறுப்பதாகவும், மேலும் தங்க நகைக்கு பதிலாக பணம் பெற்றுக் கொள்ளுமாறு வங்கி அதிகாரிகள் கூறியதாகவும் வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய மேலதிகாரிகளை இந்த வங்கியில் பணி அமர்த்தி தங்களது கோரிக்கையை நிறைவேற்றாமல், 15 ஆண்டுகளாக விசாரணை என்ற பெயரில் நாடகம் நடத்தி வருவதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வங்கி மேலார்களிடம் கேட்டபோது, இந்த வங்கியில் 2015-ஆம் ஆண்டில் வேலை செய்த ஊழியர்கள் சிலர் இங்கே விவசாயிகள் அடகு வைத்த சுமார் 1-கோடி மதிப்புள்ள 134 கிராம் நகைகளை கையாடல் செய்துள்ளதாகவும், அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு தற்போது அந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதாகவும் விளக்கம் கூறினர். தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து தங்களது நகையை பெற்றுத் தரும்படி தள்ளுபடி செய்யப்பட்ட வங்கி வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
No comments:
Post a Comment