Thursday, 17 April 2025

தவெக கட்சிக் கொடியில் யானை சின்னம்.. விஜய் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு!




தவெக கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்தை பயன்படுத்த பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தடை கோரிய வழக்கில் அக்கட்சியின் தலைவர் விஜய் பதில் அளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தவெக கொடியில் இருபுறமும் யானை, வாகை மலர் இடம்பெற்றிருந்தது. கட்சிக் கொடி சிவப்பு, மஞ்சள் நிறத்தில் அமைந்திருந்தது. இந்நிலையில் விஜய் அறிமுகப்படுத்தியதவெக கொடியில் பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் சின்னமான யானை இடம்பெற்றிருந்தது சர்ச்சை ஏற்படுத்தியது. 

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் பெரியார் அன்பன் என்கிற இளங்கோவன் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் விஜய் தலைமையிலான தவெக கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனு சென்னை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சக்திவேல் முன் விசாரணைக்கு வந்தது. 

அப்போது பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.ஆனந்தன், பகுஜன் சமாஜ் கட்சி தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்றும் அந்தக் கட்சிக்கு யானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த சின்னத்தை அசாம் தவிர மற்ற மாநிலங்களில் பகுஜன் சமாஜ் கட்சி மட்டுமே இந்த சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார்.

No comments:

Post a Comment