கடந்த ஆண்டு (2024) ஜூன் மாதம் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் அவர்களுடைய சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது. இதையடுத்து தஞ்சை மாவட்டத்துக்கு 53 கிராம நிர்வாக அதிகாரிகள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்டார்கள்.
அதன்படி நேற்று முன்தினம் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து, தங்கள் பணியாற்ற உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான ஆணையை பெற்றுக் கொண்டு, கலெக்டர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகளிடம் வாழ்த்துகளை பெற்றுச் சென்றார்கள்.
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு மூலம் கிராம நிர்வாக அதிகாரியாக பணியில் சேர்ந்துள்ள பலர் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.. தஞ்சை மாவட்டத்தில் தற்போது ஒரே நாளில் கிராம நிர்வாக அதிகாரிகள் பணியில் சேர்ந்துள்ளார்கள். 10 பெண்கள் உள்பட 53 பேர் பணியில் சேர்ந்துள்ளதாக தகவல்.
No comments:
Post a Comment