Tuesday, 13 May 2025

அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாக வாய்ப்பு- அண்ணாமலை x தளத்தில் பதிவு .

 


அண்ணாமலை  தனது  x தள பதிவில்,  தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாக வாய்ப்பு உள்ளதாக  பதிவு செய்துள்ளார் . 

விவரமாக :

தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில், 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு, பேராசிரியர் வருகைப் பதிவு போதிய அளவு இல்லாதது, காலிப் பணியிடங்களை நிரப்பாமல் இருத்தல் உள்ளிட்ட குறைபாடுகளை சுட்டிக்காட்டி, தேசிய மருத்துவ ஆணையம் (NMC) விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. 

அதிலும், 24 மருத்துவக் கல்லூரிகள் விளக்கமளிப்பதற்கான காலக்கெடு முடிவடைந்து விட்டதும், மீதமுள்ள 10 கல்லூரிகளுக்கு, வரும் வாரத்தில், காலக்கெடு நிறைவடைய உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. உரிய விளக்கம் அளிக்காததாலும், குறைபாடுகளை நிவர்த்தி செய்யாமல் இருப்பதாலும், இந்த அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாக வாய்ப்பு இருக்கிறது. 

இதனால், மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்த முடியாத நிலை ஏற்படும். ஏற்கனவே, கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதமும், இதே காரணங்களுக்காக, புகழ்பெற்ற ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி உட்பட மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் நிலை ஏற்பட்டது. ஆனால், திமுக அரசு தனது தவறுகளிலிருந்து பாடம் கற்கவில்லை. தற்போது 34 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடக்கவில்லை என்றால், தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்பு, அடியோடு சிதைந்து போய் விடும். ஆனால், தினமும் வீண் விளம்பர நாடகங்கள் நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சருக்கு இது குறித்து எந்தக் கவலையும் இல்லை. 

தமிழக சுகாதாரத்துறை அமைச்சரோ, முதலமைச்சர் குடும்பத்தினருக்கு யார் சிறந்த பணியாளாக இருப்பது என்ற மற்ற அமைச்சர்களுடனான போட்டியில், முதல் வரிசையில் ஓடிக் கொண்டிருக்கிறார். உங்கள் விளம்பர ஆசைக்கு, தமிழக மாணவர்கள் மருத்துவக் கல்விக் கனவைப் பறிகொடுக்க முடியாது என்பதை முதலமைச்சர் உணர வேண்டும். உடனடியாக, தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து, தேசிய மருத்துவ ஆணையத்தின் அங்கீகாரம் தொடர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். என  பதிவு செய்துள்ளார் 

 

"ஞானசேகரன் வீட்டில் பிரியாணி சாப்பிட்ட அமைச்சர், சென்னை துணை மேயர் மீது விசாரணை நடத்தாத நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்" - முதலமைச்சருக்கு இபிஎஸ் பதில்



பொள்ளாச்சி வழக்கில் CBI விசாரணைக்கு உத்தரவிட்டவன் நான்... "ஞானசேகரன் வீட்டில் பிரியாணி சாப்பிட்ட அமைச்சர், சென்னை துணை மேயர் மீது விசாரணை நடத்தாத நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்" - முதலமைச்சருக்கு இபிஎஸ் பதில்

 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், பொல்லாத அதிமுக நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது. அதிமுக குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த 'சார்'கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும் என்று பதிவிட்டிருந்தார். 


இதற்கு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார். அதில்,அந்த குற்றவாளிக் கூடாரத்தை கைது செய்தது எனது அரசு. உங்களைப் போல் திமுக அனுதாபி என்பதால் காப்பாற்றத் துடிக்கவில்லை. நடுநிலையோடு CBI விசாரணைக்கு உத்தரவிட்டேன். அதற்கான நீதியே இன்று கிடைத்துள்ளது. வழக்கம் போல உங்கள் ஸ்டிக்கரைத் தூக்கிக் கொண்டு வராதீர்கள்

! யார் வெட்கித் தலை குனிய வேண்டும்? -அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் குற்றவாளி ஞானசேகரன் வீட்டில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட உங்கள் அமைச்சர் மீதும், சென்னை துணை மேயர் மீதும் விசாரணை நடத்த துப்பில்லாத நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! -#யார்_அந்த_SIR என்ற கேள்விக்கு இன்று வரை பதில் சொல்லாமல், அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! 

-அண்ணா நகர் 10 வயது சிறுமி பாலியல் வழக்கில், CBI விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று, மூத்த வக்கீல்களை நியமிக்க , மக்கள் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக செலவழித்து, 10 வயது சிறுமிக்கும், அச்சிறுமியின் பெற்றோருக்கும் கிடைக்க வேண்டிய நீதிக்கு எதிராக வாதாடிய நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! நீட் ரகசியம் என்று நீங்களும், உங்கள் மகனும் மாணவர்களை ஏமாற்றிய போதே, உங்களுக்கு வெட்கம், மானமெல்லாம் இல்லை என்பது தெரிந்துவிட்டது. இருப்பினும், கொஞ்சமாவது மனசாட்சி இருந்தால், உங்கள் ஆட்சியில் பெண்கள் வெளியிலேயே வர முடியாத அவல நிலை இருப்பதையும், நாள்தோறும் பதியப்படும் POCSO வழக்குகளையும் பார்த்து கொஞ்சமாவது வெட்கித் தலைகுனியுங்கள்! என்று பதில் அளித்துள்ளார்









பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு பற்றி பா ஜ க அண்ணாமலை கருத்து




பொள்ளாச்சி பாலியல் வழக்கில், குற்றவாளிகள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டிருக்கும் தீர்ப்பு பற்றி பா ஜ க முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை தனது x தளத்தில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார் .
 
 

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில், குற்றவாளிகள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டிருக்கும் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
 

கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேல், துணிச்சலாகப் போராடி, குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை பெற்றுத் தந்துள்ள பாதிக்கப்பட்ட சகோதரிகள் அனைவருக்கும், இந்தத் தீர்ப்பு ஓரளவாவது மன ஆறுதல் அளிப்பதாக அமையும் என்று நம்புகிறேன்.

இந்த வழக்கில் நியாயம் கிடைக்கப் பாடுபட்ட அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு எதிரான வழக்குகளில், தாமதமின்றிச் செயல்படவும், அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வன்முறைக்கும், விரைவாக நியாயம் கிடைக்கவும், தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
என்று பதிவு செய்துள்ளார் .
 




பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை..கோவை மகளிர் நீதிமன்றம் நீதிபதி நந்தினி அதிரடி தீர்ப்பு

 


குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நிதிபதி உத்தரவிட்டார்.பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.85 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2019-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று உறுதி செய்த கோவை மகளிர் நீதிமன்றம், அவர்கள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.85 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அண்ணா அடிக்காதீங்க என்ற இளம்பெண்ணின் அலறல் சத்தம் அடங்கிய வீடியோ தமிழ்நாட்டையே நடுங்க செய்திருந்தது.  பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்த நிலையில், கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

  இன்று இந்த வழக்கின் குற்றவாளிகள் முன்னதாக சேலம் சிறையில் இருந்து குற்றவாளிகள் 9 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றம் அழைத்து வரப்பட்டனர். மேலும் நீதிமன்றம் வளாகத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நாட்டையே உலுக்கும் வகையில் அதிர்ச்சிகரமான ஒரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அதாவது, பல குடும்ப பெண்கள் ,கல்லூரி மாணவிகள் ,சிறுமிகள் என பலவிதங்களில் இளம்பெண்களைக் குறி வைத்து   பெண்ககளை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

 "குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 376 D (கூட்டுப் பாலியல் வன்கொடுமை) மற்றும் 376 (2)(N) (தொடர்ந்து பாலியல் குற்றத்தில் ஈடுபடுவது) ஆகிய பிரிவுகளின் கீழ் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது, மற்ற பிரிவுகளின் கீழ் 10 ஆண்டுகள், 7 ஆண்டுகள், மூன்று ஆண்டுகள் என தனித்தனியாகவும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது." .

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ. 85 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றம்உத்தரவு 

வழக்கின் விவரம் :

2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது பொள்ளாச்சி பாலியல்  வழக்கு.

கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் இளம் பெண்களை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, அதனை காணொளி ஆக பதிவு செய்து பாதிக்கப்பட்டவர்களை ஒரு கும்பல் மிரட்டி வந்துள்ளது.

இவர்களால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர், தனது சகோதரரிடம் அது பற்றி கூறவே, தங்கையை பாலியல் சீண்டல் செய்த இளைஞர்களை சுற்றி வளைத்த அவரது சகோதரர் அவர்களை விசாரித்திருக்கிறார்.அப்போது  அந்த மாணவி மற்றும் அவரது சகோதரரும் தாக்கப்பட்டார், அந்த இளைஞர்கள் வைத்திருந்த செல்போன்களில் ஏராளமான இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு துன்புறுத்தப்படும் காணொளிகள் இருந்துள்ளன. இதனையடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண் மற்றும் அவரது சகோதரரும்    பிப்ரவரி 12- 2019பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்,அந்தப் புகாரி அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்ட நாள் 2019 பிப்ரவரி 24 அதன் அடிப்படையில் சபரிராஜன் என்கிற ரிஷ்வந்த், வசந்தகுமார், சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

 அந்த நேரத்தில் திருநாவுக்கரசு என்பவர் தலைமறைவாகி இருந்த நிலையில் போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். பின்னர்  தனக்கும் இந்த வழக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஒரு நாள் திருநாவுக்கரசு  வீடியோ வெளியிட்டார். 2019 மார்ச் 5 அன்று அவரும் கைது செய்யப்பட்டார். 

திருநாவுக்கரசு ஐபோனில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் பதியப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.  அதுவே வழக்கின் முதல் முக்கியமான ஆதாரமாக இருந்தது. வழக்கு பதியப்பட்ட ஒரே மாதத்திற்குள் 2019 மார்ச் மாதத்தில் சிபிசிஐடிக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. அப்போது ஆளுங்கட்சியாக இருந்த அஇஅதிமுக இந்த வழக்கை CBI க்கு மாற்றியது. இந்த வழக்கு அப்போது மிகப் பெரிய பேசும் பொருளாக இருந்தது எதிர்க்கட்சி தி மு க  ஆளுங்கட்சி மீது இதனை வைத்தே  குற்றம் சாட்டி  கொண்டே இருந்தது. 


 இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதல் நபரான சபரி ராஜன் வீட்டில் கைப்பற்றப்பட்ட லேப்டாப் இந்த வழக்கின் மிக முக்கியமான மற்றொரு ஆதாரமாக பிடிபட்டது. 2019 ஏப்ரல் 25 அன்று இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. 

 செல்போன்கள் லேப்டாப் போன்றவற்றிலிருந்து கைப்பற்றப்பட்ட வீடியோக்கள் மின்னணு ஆதார் ஆவணங்களாக பதிவு செய்யப்பட்டன. பாதிக்கப்பட்ட 20 பெண்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் முதல் கட்டமாக கைதான சபரிராஜன், சதீஷ்குமார், வசந்தராஜன், திருநாவுக்கரசு, மணிவண்ணன்,அருண்குமார்  ஆகியோருக்கு எதிராக 2019 மே 24 அன்று முதல் கட்ட குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த வழக்கு சிபிஐ  வசம் வந்த  பின்  விசாரணையில் இந்த வழக்கில் அருளானந்தம், ஹரன்பால் மற்றும் பாபு ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர் இவர்கள் மூவருமே அதிமுகவை சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டுடன்  அரசியல் அளவில்  பேசும் பொருளானது. இந்த மூன்று குற்றவாளிகள் மீதும் 22 ஆம் தேதி பிப்ரவரி 2021 கூடுதல் குற்றப்பத்திரிக்கை  கோவை மகிளா நீதிமன்றத்தில் இரண்டாவதாக தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையில் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர், அவர்களின் 48 பேர் மட்டுமே சிபிஐ அதிகாரிகளால் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர் படுத்தப்பட்டனர்.


பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவின்போது காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திர பிரகாஷ் முதல் விசாரணை அதிகாரியாக இருந்தார்.  சி பி சி ஐ டி இடம் மாற்றப்பட்ட பின்பு எஸ் பி நிஷா பார்த்திபன் விசாரணை நடத்தினார்.  அதன் பின் சிபிஐ அதிகாரிகள் விஜய் வைஷ்ணவி ஆய்வாளர் பச்சையம்மாள் ஆகியோர் விசாரணை நடத்தியுள்ளனர். 

இந்த வழக்கில் எலக்ட்ரானிக் பொருட்களை முக்கிய ஆதாரங்களாக சேர்க்கப்பட்டுள்ளன iphone-ல் எடுக்கப்பட்ட வீடியோ புகைப்படங்கள் ஆகியவற்றை வைத்து குற்றம் நடந்த தேதி நேரம் ஆகியவை எடுக்கப்பட்டுள்ளன. whatsapp குழுவை தொடங்கி அதில் ஆபாச வீடியோக்கள்  பகிர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் புகார் கொடுக்க அச்சப்பட்டுள்ளனர், இவர்களை அச்சுறுத்துவதற்காகவே சில ஆபாச வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் இவர்கள் பதிவிட்டிருந்தனர் விசாரணையின் போது அவை முழுவதுமாக நீக்கப்பட்டன, 

இந்த வழக்கின் தீவிர தன்மையை கருத்தில் கொண்டு வழக்குப் பதியப்பட்ட நாளிலிருந்து குற்றம் சாட்டப்பட்ட யாருக்கும் பிணை வழங்கப்படவில்லை, பாதிக்கப்பட்ட 8 பேர்களில் 7  பேர் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகி சாட்சியம் கூறினார். 

இவர்களிடம் நீதிமன்ற அறையில் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது குற்ற பத்திரிக்கையில் குற்றவாளிகள்  மீது 76 விதமான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன . அரசு தரப்பில் 25 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 12 ஆவணங்கள் குறித்து தரப்பட்டன, இவற்றைத் தவிர்த்து நீதிமன்றம் தானாக 11 ஆவணங்களை எடுத்துக் கொண்டுள்ளது, வழக்கு விசாரணையில் கைப்பற்றப்பட்ட செல்போன்கள் லேப்டாப் ஹார்டிஸ்க் உள்ளிட்ட முக்கியமான 30 பொருட்கள் ஆதாரமாக ஆவணமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 


பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் இறுதிவரை பிறர் சாட்சியாக மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது முதல் குற்ற பத்திரிக்கை துவங்கி இன்று வரை மொத்தம் 1500 பக்கங்களில் குற்ற பத்திரிக்கையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது சாட்சிகளிடம் 236 கேள்விகள் கேட்கப்பட்டு அவை பதிவு செய்யப்பட்டுள்ளன இந்த வழக்கை கோவை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தொடர்ந்து ஐந்தாண்டுகளாக விசாரித்து வந்தார் இடையில் அவருக்கு பணியிடை மாற்றம் வழங்கப்பட்டு மீண்டும் உயர்நீதிமன்ற உத்தரவால் அது தடுத்து நிறுத்தப்பட்டது.  இந்த வழக்கில் இன்று தீர்ப்புகள் வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பே பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோ எடுத்து மிரட்டிய ஒன்பது குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூபாய் 85 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தண்டனை விவரங்கள் 

  • முதல் குற்றவாளி சபரிராஜனுக்கு 4 ஆயுள் தண்டனைகள்
  • இரண்டாம் குற்றவாளி திருநாவுக்கரசுக்கு 5 ஆயுள் தண்டனைகள்
  • மூன்றாம் குற்றவாளி சதீஷுக்கு 3 ஆயுள் தண்டனைகள்
  • நான்காம் குற்றவாளி வசந்தகுமாருக்கு 2 ஆயுள் தண்டனைகள்
  • ஐந்தாம் குற்றவாளி மணி எனும் மணிவண்ணனுக்கு 5 ஆயுள் தண்டனைகள்
  • ஆறாம் குற்றவாளி பாபுவுக்கு ஒரு ஆயுள் தண்டனை
  • ஏழாம் குற்றவாளி ஹெரன்பாலுக்கு 3 ஆயுள் தண்டனைகள்
  • எட்டாம் குற்றவாளி அருளானந்தத்துக்கு ஒரு ஆயுள் தண்டனை
  • ஒன்பதாம் குற்றவாளி அருண்குமாருக்கு ஒரு ஆயுள் தண்டனை
இந்த வழக்கில் பார் நாகராஜன் ,பொள்ளாச்சி அதிமுக இளைஞரணி நிர்வாகி, ஜெயராமன் மகன்கள் பெயர்களை FIR ல் சேர்க்காமல் காப்பாற்றப்பட்டனர் என சமூக ஆர்வலர்கள்  குமுறல் இருக்கிறது  .

Monday, 12 May 2025

கும்பகோணத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கெடு




சென்னை கும்பகோணத்தில் உள்ள 44 குளங்கள், 11 கால்வாய்களி ஆக்கிரமிப்பு நடைபெற்றுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கடந்த 2018ம் ஆண்டு கும்பகோணம் மாநகராட்சி, தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், ஐகோர்ட்டு உத்தரவு மீது எந்த நடவடிக்கையும்எடுக்கவில்லை என வழக்கறிஞர் ராஜேந்திரன் சென்னை ஐகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.


இந்த வழக்கை இன்று விசாரித்த ஐகோர்ட்டு கும்பகோணத்தில் கோவில் குளங்கள், கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, 4 மாதங்கள் கெடு விதித்தது. ஆக்கிரமிப்புகளை 4 மாதங்களுக்குள் அகற்ற தவறினால் கும்பகோணம் மாநகராட்சிக்கும், தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்துக்கும் தலா ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும்என்று எச்சரிக்கை விடுத்தது.

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன், அப்துல் குத்தூஸ் அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரம் குறித்து ஆய்வு செய்த ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி உயர் நீதிமன்றத்தில் அளித்த அறிக்கையில், "கும்பகோணத்தில் உள்ள 44 குளங்களில், ஏழு குளங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன. மூன்று குளங்களில் மரங்கள் உள்ளன, நான்கு குளங்கள் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 26 குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சியோ, மாவட்ட நிர்வாகமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,"எனக் கூறப்பட்டிருந்தது.

ஓய்வு பெற்ற நீதிபதியின் அறிக்கையைப் பதிவு செய்து கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள், அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். 

மேலும், "கும்பகோணத்தில் குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை நான்கு மாதங்களுக்குள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய கெடுவுக்குள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாவிட்டால் கும்பகோணம் மாநகராட்சி, தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றுக்கு தலா ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும். காலக்கெடுவுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்க கோரி, மாவட்ட நீதிபதி விண்ணப்பிக்கலாம். நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் குளங்கள், வாய்க்கால்களில் எந்த கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது. பொற்றாமரை குளத்தின் வரத்துக் கால்வாய்களை கண்டறிந்து, அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மாவட்ட நிர்வாகத்துக்கும், கும்பகோணம் மாநகராட்சிக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


எல்லையில் தணிந்தது பதற்றம்; மூடப்பட்ட 32 விமான நிலையங்களை திறக்க உத்தரவு.


 எல்லையில் தணிந்தது பதற்றம்; மூடப்பட்ட 32 விமான நிலையங்களை திறக்க மத்திய அரசு உத்தரவுஅந்த விமான நிலையங்கள்  பின்வருமாறு:

1. அதம்பூர்,2. அம்பாலா,3. அமிர்தசரஸ்,4. அவந்திபூர்,5. பதின்டா,6. புஜ்,

7. பிகானிர், 8. சண்டிகர்,9. ஹல்வாரா, 9. ஹல்வாரா,11. ஜெய்சால்மர்

12. ஜம்மு,13. ஜாம் நகர்,14. ஜோத்பூர்15. காண்ட்லா,16. காங்ரா,17. கேஷூட்

18. கிஷாங்கர்,19. குலு மணாலி,20. லே,21. லூதியானா,22. முந்த்ரா,23. நாலியா

24. பதான்கோட்,25. பட்டியாலா,26. போர்பந்தர்,27. ராஜ்கோட்,28. சார்சவா

29. ஷிம்லா,30. ஸ்ரீநகர்,31. தோய்ஷ், 32. உத்தர்லாய்

விவரம்

பஹல்காமில் இந்திய சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இந்த தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே மோதல் அதிகரித்தது.

இதன் காரணமாக இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதில் 50க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் இறந்ததாக கூறப்பட்டது. 


இதனையடுத்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லை மாநிலங்களான ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் மீது ட்ரோன் மற்றும் ஏவுகனைகளை கொண்டு தாக்கியது. இதனை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக முறியடித்தது.

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக, எல்லையோர மாநிலத்தில் உள்ள 32 விமான நிலையங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மே 9ம் தேதி முதல் வரும் மே 15ம் தேதி காலை 5.29 மணி வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.

தற்போது போர் பதற்றம் தணிந்துள்ள நிலையில், மேலே குறிப்பிட்டுள்ள மூடப்பட்ட 32 விமான நிலையங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. 









































x













பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நாளை தீர்ப்பு



கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக உள்ளது. இந்த வழக்கில் சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், ஹேரன்பால், பாபு மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர். சாட்சி விசாரணைகள் முடிவடைந்த நிலையில் கோவை மகளிர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கிறது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏராளமான கல்லூரி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இளம்பெண்களைக் குறி வைத்து பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டிய கும்பலின் கொடூரம் பெண் ஒருவரின் புகாரின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது.

பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில், சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், ஹேரன்பால், பாபு, அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் கோவை மகளிர் நீதிமன்றத்தில் இது சிறப்பு வழக்காக நடத்தப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், கோவை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முழுவதும் வீடியோ கான்பரன்சிங் முறையில் நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையில் ஆஜராகும் சாட்சிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனைவரும் மூடப்பட்ட நீதிமன்ற அறைகளில் விசாரணையில் பங்கெடுத்தனர்.

9 பேர் மீது 2019 மே 21ஆம் தேதி கோவை மகளிர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதன்பிறகு வழக்கு விசாரணை தாமதம் ஆனது. அதைத்தொடர்ந்து உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் கோவை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் தனியாக அறை ஒதுக்கி விசாரணை தொடங்கப்பட்டது.

இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சி விசாரணை முடிந்த நிலையில், இதுதொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் கேள்விகள் கேட்பதற்காக, 9 பேரும் மகளிர் நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியங்கள் முடிவடைந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் தரப்பில் விசாரணை நடைபெற்றது. இதில் குற்றம்சாட்டப்பட்ட ஒவ்வொரு நபரிடமும் சுமார் 50 கேள்விகள் வரை கேட்கப்பட்டது. சாட்சி விசாரணைகள் முடிவடைந்து இறுதிக்கட்டமாக அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. இதனை தொடர்ந்து பொள்ளாச்சி காவல் உதவி ஆய்வாளர், பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மருத்துவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து வழக்கறிஞர்கள் இடையே குறுக்கு விசாரணையும் நடைபெற்றது. சாட்சி விசாரணைகள் முடிவடைந்த நிலையில் மே 13ஆம் தேதி பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு வெளியாகும் என கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார். அதன்படி நாளை இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாக இருக்கிறது.

தீர்ப்பு அறிவிக்கப்படும் என உத்தரவிடப்பட்டு இருப்பதால் குற்றவாளிகள் அனைவரும் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். தீர்ப்பு விவரங்களை நாளை காலையோ அல்லது மதியத்துக்கு பிறகோ நீதிபதி அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




Saturday, 10 May 2025

போர் நிறுத்தம் ஏற்பட்டாலும் பயங்கரவாதத்திற்கு எதிரான கொள்கையில் மாற்றமில்லை: ஜெய்சங்கர்.

இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் இன்று மே 10ம் தேதி மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இதனை  தொடர்ந்து மத்திய வெளியுறவுத்துறை செயலர் ஜெய்சங்கர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியாவும், பாகிஸ்தானும், இரு நாடுகளுக்கு இடையே நடந்து வரும் துப்பாக்கிச்சூடு மற்றும் ராணுவ நடவடிக்கையை நிறுத்துவதற்காக பரஸ்பரம் ஒரு ஒப்பந்தத்தை போட்டு உள்ளன. அனைத்து வடிவிலும் பயங்கரவாதம் மற்றும் அதன் செயல்பாடுகளுக்கு எதிராக உறுதியான மற்றும் சமரசம் இல்லாத கொள்கையை இந்தியா கடைபிடித்து வருகிறது. அது எதிர்காலத்திலும் தொடரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம்; மே 12ல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை!

 இரு நாடுகளும் போர் நிறுத்தம் செய்ய ,  ஒப்புக்கொண்டதாக ஏற்கனவே            அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டது  இங்கே  குறிப்பிடத்தக்கது.

புதுடில்லி; '' இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தத்தை அமல்படுத்த இந்தியாவும், பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டன. வரும் 12ம் தேதி இரு நாட்டுராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள், '' என வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரிகூறியுள்ளார் .

இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியுள்ளதாவது: பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைக்கான இயக்குநர் ஜெனரல் (டிஜிஎம்ஓ) நமது நாட்டு டிஜிஎம்ஓ., வை இன்று மாலை 3: 35 மணிக்கு அழைத்து பேசினார். அப்போது, இன்று மாலை 5:00 மணி முதல் தரை, வான் மற்றும் கடல் வழியாக அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும், துப்பாக்கிச்சூட்டையும் நிறுத்தி கொள்வது என இருதரப்பும் ஒப்புக்கொள்ளப்பட்டது. 

இது குறித்து இரு தரப்பும் உரிய அறிவுரைகளை வழங்கி உள்ளது. இருநாட்டு டிஜிஎம்ஓ.,க்களும் வரும் 12ம் தேதி நண்பகல் 12 மணிக்கு பேசுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.





-நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு -கலப்பையுடன் விவசாயி இருப்பதுபோன்ற சின்னம் ஒதுக்கீடு





சென்னை, மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு

மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.  கலப்பையுடன் விவசாயி இருப்பதுபோன்ற சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சின்னத்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ள சீமான், "மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து 10-05-2025 அன்று அறிவித்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

 சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி 2016-ல் மெழுகுவர்த்தி சின்னத்திலும், 2019 முதல் 2021 வரை கரும்பு விவசாயி சின்னத்திலும் தேர்தலை சந்தித்தது.

2024 நாடாளுமன்ற தேர்தலின்போது தேர்தல் ஆணையத்திடம் தாமதமாக விண்ணப்பித்ததால் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைக்கவில்லை. இதையடுத்து,தேர்தல் ஆணையம் வைத்துள்ள சின்னங்கள் பட்டியலில் இருந்து மைக் சின்னத்தை தேர்வு செய்து நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது. நாடாளுமன்ற தேர்தலில் 8.22 சதவீத வாக்குகளை பெற்ற நாம் தமிழர் கட்சி, மாநில கட்சி என்ற அங்கீகாரத்தைப் பெற்றது.

மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. 



மதுரை வந்தது கள்ளழகர் தங்கக்குதிரை வாகனம்; மே 12 வைகையில் இறங்குகிறார் அழகர்.

 மே 12 வைகையில் இறங்குகிறார் கள்ளழகர்; அழகர்கோவில் சித்திரைத்திருவிழா நேற்று ஆரம்பமானது. நாளை (மே 10) மாலை 6:00 மணி முதல் 6:15 மணிக்குள் கள்ளழகர் மதுரைக்கு புறப்படுகிறார். மே 11ல் மூன்று மாவடியில் அவரை பக்தர்கள் வரவேற்கும் எதிர்சேவை நடக்கிறது. மே 12ல் அதிகாலை 5:45 மணி முதல் 6:05 மணிக்குள் வைகையாற்றில் லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் தங்கக்குதிரை வாகனத்தில் வைகையில் எழுந்தருளுகிறார். மதியம் ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி உற்ஸவம் நடக்கிறது. 

இரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் எழுந்தருளுகிறார்.மே 13 காலை சேஷ வாகனத்தில் புறப்பட்டு வைகையாறு தேனுார் மண்டபம் வருகிறார். மதியம் கருடவாகனத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுக்கிறார். அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நடக்கிறது. மே 14 மதியம் அனந்தராயர் பல்லக்கில் சேதுபதி மண்டபத்திற்கு புறப்படுகிறார். இரவு பூப்பல்லக்கில் அழகர்கோவிலுக்கு புறப்படுகிறார். மே 16 காலை 10:00 மணி முதல் 10:25 மணிக்குள் இருப்பிடம் சேருகிறார்.



மே 12 ஆம் தேதி வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம்.அழகர் என்ன நிற ஆடை உடுத்துவாரோ? பட்டாடை மர்மம் என்னவோ ?

 

மே 12 ஆம் தேதி வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் .ஆனால்  அழகர் என்ன நிற ஆடை உடுத்துவாரோ என்ற எதிர்பார்ப்பு  பெரிதாக பக்தர்களிடம்  இருக்கிறது .

அழகர் என்ன நிற ஆடை உடுத்துவாரோ? பட்டாடை   மர்மம் என்னவோ ?அது என்ன?. விவரமாக பார்க்கலாம்  மிகவும் ஆச்சர்யம் !

 மதுரை சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக கடந்த வியாழக்கிழமை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று  வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. 

இந்த நிலையில் நாளை11 ந்தேதி கள்ளழகர் எதிர்சேவை நடைபெறுவதால் மதுரை அழகர்கோவிலிலிருந்து மதுரைக்கு கள்ளழகர் புறப்படுகிறார். வரும் 12 ஆம் தேதி வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நடக்கிறது. அப்போது அவர் பட்டாடை உடுத்திக் கொண்டு இறங்குவது வழக்கம். அந்த பட்டாடையின் நிறத்தை வைத்தே இந்த ஆண்டு நல்லது கெட்டதை மக்கள் தீர்மானிப்பர் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள் . இதனாலேயே அழகர் என்ன நிற ஆடை உடுத்துவாரோ என்ற எதிர்பார்ப்பு  பெரிதாக பக்தர்களிடம்  இருக்கிறது .

அழகர் உடுத்தும் ஆடைகளும் அணியும் தங்க நகைகளும் ஒரு பெரிய மரப்பெட்டியில் இருக்கும். இந்த பெட்டியில் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், ஊதா உள்ளிட்ட நிறங்களில் பட்டுப்புடவைகள் இருக்கும். அழகர் எந்த நிறத்தில் புடவை கட்டி ஆற்றில் இறங்குவாரோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பொதுவாக தலைமை பட்டர், அழகரை வேண்டிக் கொண்டு அந்த பெட்டிக்குள் கையை விட்டு துழவுவார். அப்போது எந்த நிறம் கிடைக்கிறதோ அந்த நிறத்தை கள்ளழகருக்கு உடுத்துவார்களாம். பச்சை கட்டி வந்தால் நாடு செல்வச் செழிப்பாக இருக்கும் என்பது ஐதீகம். கடந்த சில ஆண்டுகளாக அழகர் பச்சை பட்டுடுத்தி ஆற்றில் இறங்கினார். வெள்ளை மற்றும் நீலப்பட்டு கட்டி வந்தால் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும். 

மஞ்சள்பட்டு கட்டிவந்தால், அந்த வருடத்தில் மங்களகர நிகழ்வுகள் நடக்கும். அழகர் சிவப்புப் பட்டு கட்டிவந்தால் பேரழிவு ஏற்படும் என்கின்றனர். அந்த வருடம் போதிய விளைச்சலுமிருக்காது. நாட்டில் அமைதியும் இருக்காதாம். பார்க்கலாம் நாளை மறுநாள் அழகர் என்ன புடவை கட்டி வருகிறார் என்று பார்ப்பதற்காக  பக்தர்கள் மிகுந்த ஆவலாக உள்ளனர் !



Friday, 9 May 2025

காஷ்மீரில் சிக்கிய 41 தமிழக மாணவர்களை பாதுகாப்பாக மீட்டு வர முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

 சென்னை: காஷ்மீரில் பயின்று வரும் தமிழக மாணவர்கள் 41 பேரை பாதுகாப்பாக மீட்டு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை எடுக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை; இந்திய ராணுவம், எல்லைக்கோட்டருகே உள்ள பயங்கரவாத முகாம்களின் மீது தாக்குதலை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. இதன் காரணமாக ஜம்மு காஷ்மீர் மாகாணத்தில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், அங்கு உள்ள பல கல்வி நிறுவனங்களில், குறிப்பாக ஸ்ரீநகரில் உள்ள தேசிய ஆடைத் தொழில்நுட்ப நிறுவனம் (N.I.F.T.,) மற்றும் வேளாண் பல்கலைக்கழகங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 41 மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். தற்போதைய சூழ்நிலையில், அவர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக தமிழகத்திற்கு திரும்ப விரும்புவதாகவும், அதற்கான உதவியை தமிழக அரசிடம் கடிதம் மூலமாக கோரியுள்ளனர்.

மாணவர்களின் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீநகர் N.I.F.T., இயக்குநரும், உதவி இயக்குநரும் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளனர். அத்துடன், காஷ்மீர் பூர்வீகத்தையும் தமிழ்நாடு கேடரில் பணியாற்றும் அதிகாரியுமான ஆப்தாப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. நிலைமை சீரானவுடன் மாணவர்கள் பாதுகாப்பாக அழைத்து வரப்படுவார்கள் என அவர் உறுதியளித்துள்ளார்.

தமிழக முதன்மைச் செயலரும், மாணவர்களுடன் நேரடியாக பேசித் தகவல்களை பெற்றுள்ளார். முதல்வர் தொடர்ந்து நிலைமையை நன்கு கண்காணித்து வருகிறார். மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கவலையின்றி இருக்க அரசின் அனைத்து முயற்சிகளும் தொடரப்படும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


வங்கிச் சேவையில் இடையூறு கூடாது: நிர்மலா சீதாராமன் உத்தரவு




இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டு உள்ள நிலையில், வங்கிச் சேவைகள் எந்த இடையூறும் இன்றி பொது மக்களுக்கு கிடைக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டு உள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் ஏற்பட்டு உள்ள நிலையில், வங்கித்துறைகளின் செயல்பாடு குறித்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் அதிகாரிகளுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.

எந்த எதிர்பாராத சூழ்நிலையையும் எதிர்கொள்ள அனைத்து வங்கிகளும் தயாராக வேண்டும். இதற்காக அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். பொது மக்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு வங்கி மற்றும் நிதிச் சேவையில் எந்த இடையூறும் ஏற்படாமல் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மக்களுக்கு நேரடியாக வங்கி சேவையும், டிஜிட்டல் சேவைகளும் கிடைக்க செய்வதுடன் . ஏடிஎம்.,களில் போதியளவு பணம் இருக்க வேண்டும். யுபிஐ மற்றும் இணையதள சேவைகள் தங்கு தடையின்றி தொடர நடவடிக்கை தேவை. எந்த சூழ்நிலையையும் சமாளிக்க தேவையான நடவடிக்கைகளையும் செய்வது குறித்து ஒத்திகை செய்து பார்க்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும் எல்லையோரங்களில் உள்ள வங்கிக் கிளைகளில் பணியாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்த நிர்மலா சீதாராமன், அதற்கு வங்கித்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!


இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவிவரும் நிலையில், சென்னை சேப்பாக்கத்திற்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

 சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல் போட்டி நடந்தால் தாக்குதல் நடத்தப்படும் என "தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷனுக்கு  (TNCA)" மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது. 
Pakistanjkweb@gmail.com என்ற முகவரியிலிருந்து .
 
 
அந்த மெயிலில் "we do bomb blast in stadium for operation sindoor, There will be blood bath" என குறிப்பிட்டு பாகிஸ்தான் பெயர் கொண்ட மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளது.
 
தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் அதிகாரிகள் போலீசாருக்கு அளித்த புகாரின் பேரில் திருவல்லிக்கேணி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மிரட்டல் மெயிலை கைப்பற்றியுள்ளனர். மேலும், சேப்பாக்கம் மைதானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்ற விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
 
போர் காரணமாக இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒரு வாரத்திற்கு அவசரநிலை காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவிவரும் நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

 

சென்னையில் உளவுத்துறை கண்காணிப்பு தீவிரம், மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு- சென்னை காவல் ஆணையர் அருண் .

 



 சென்னையில் உளவுத்துறை கண்காணிப்பு தீவிரம், மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பு- சென்னை காவல் ஆணையர் அருண் 

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தீவிரவாத முகாம்களை அழித்தொழித்தது இந்திய ராணுவம். பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன.


    ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து வரலாறு காணாத தாக்குதல் தொடர்வதால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. நேற்று இரவு ஜம்மு - காஷ்மீர் விமான நிலையம், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ், பதான்கோட், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரை குறிவைத்து பாகிஸ்தான் படைகள் ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தின. இவற்றை இந்தியா விமானப்படை நடுவானில் சுட்டு வீழ்த்தியது. 4 பாகிஸ்தான் விமானங்கள், 8 ஏவுகணைகள் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன. 

    இந்நிலையில் போர் பதற்றம் காரணமாக நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னையிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அருண் செய்தியாளர்களை சந்தித்தார். 

    அப்போது பேசிய அவர், "சென்னையில் மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்கள் கூடும் இடங்களான மால்கள், திரையரங்குகள், கோவில்கள் மற்றும் கடற்கரை ஆகிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

Tuesday, 6 May 2025

ஆபரேஷன் சிந்தூர்!- ஸ்டாலின், எடப்பாடி, அன்புமணி ஆதரவு! இந்திய ராணுவத்துடன் துணை நிற்கும் தமிழகம்!

 



    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"பயங்கரவாதத்திற்கு எதிரான இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும். நாட்டிற்காகவும், ராணுவத்திற்காகவும் தமிழ்நாடு என்று உறுதியுடன் நிற்கும்" என கூறியுள்ளார். 

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து, ஆபரேஷன் சிந்தூர் துல்லியமாக செயல்படுத்தியதற்காக இந்திய ஆயுதப்படைகளை நான் பாராட்டுகிறேன். மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடியின் விழிப்புடன் கூடிய தலைமையின் கீழ் நீதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்க்கமான நடவடிக்கை, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கும், நமது குடிமக்களைப் பாதுகாப்பதற்கும் நமது தேசத்தின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது." என கூறியுள்ளார். 

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில்," நாட்டின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் சரியானவையே: மத்திய அரசுக்கு அனைவரும் துணை நிற்போம்! காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் கட்டமைப்புகளை அழிக்கும் வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த 9 பயங்கர முகாம்கள் மீது இந்தியாவின் முப்படைகளும் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளன. 

    நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய அனைத்து நடவடிக்கைகளும் சரியானவை; தேவையானவை. இதில் மத்திய அரசுக்கும், முப்படைகளுக்கும் அனைவரும் துணை நிற்க வேண்டும்" என கூறீயுள்ளார்.






சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத் மாரடைப்பால் மரணம்


சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத் நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். நீதிபதி சத்திய நாராயணா மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறாரக்ள். தமிழ் நாடு  சுகாதாரத்துறை அமைச்சர் அஞ்சலி செலுத்தினார் .

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 56. நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதன்  காரணமாக அவர் உயிரிழந்து இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில் மரணம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தஞ்சையை சேர்ந்த சத்திய நாராயண பிரசாத், 1997 ஆம் ஆண்டில் இருந்து 24 வருடங்கள் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெறுவதற்கு முன்பாக, பிஎஸ் என்.எல், சென்னை துறைமுகம் அறக்கட்டளை, இந்தியன் வங்கி, தெற்கு ரயில்வே உள்ளிட்ட அரசு நிறுவனங்களின் ஆலோசகராகவும் பணியாற்றி உள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக கடந்த 2021 ஆம் ஆண்டு சத்திய நாராயணா பதவி உயர்வு பெற்றார். பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக அவர் நியமனம் செய்யப்பட்டார். பல்வேறு வழக்குகளை திறம்பட கையாண்டு தீர்ப்பு வழங்கிய நீதிபதி சத்திய நாராயணா நீதிபதிகளின் அனுபவர்கள் வரிசையில் 42-வது இடத்தில் இருந்தார்.



ரேபரெலி தொகுதி எம்பி ராகுல் காந்தி "இரட்டைக் குடியுரிமை வழக்கு" -தள்ளுபடி

 காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி ரேபரெலி தொகுதியில் எம்பியாக இருக்கிறார். இவருக்கு இந்தியா மற்றும்  பிரிட்டன் நாட்டிலும்  குடியுரிமை இருப்பதாகச் சொல்லிக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக பிரமுகரும், வழக்கறிஞருமான விக்னேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்தியாவில் இரட்டைக் குடியுரிமை இல்லை என்பதால் , அவர் பிரிட்டன் குடியுரிமை வைத்திருந்தால் எம்பியாக இருக்க முடியாது. ராகுல் காந்தி பிரிட்டன் குடிமகன் என்பதால் அவரது இந்தியக் குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு விசாரித்து வந்தது.

  மே 5 அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதிகள் ராஜீவ் சிங் மற்றும் ஏ.ஆர். மசூதி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது , பின்னர்  இந்த பொது நல வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அதைத் தள்ளுபடி செய்வதாக அலகாபாத் ஐகோர்ட் அறிவித்துள்ளது.

அதேநேரம் மத்திய அரசு இந்த விஷயத்தில் இறுதி முடிவை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரு நாட்டு அரசு தொடர்பான விவகாரம் என்பதால், இந்த விவகாரம் மத்திய அரசின் அதிகார வரம்பிற்குள் உள்ளது என்பதையும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

மேலும் இந்த விசாரணையை முடித்து, ஒரு முடிவு எட்டப்பட்டதும் மனுதாரரான எஸ். விக்னேஷ் ஷிஷிருக்கு அது குறித்துத் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். பொது நல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள போதிலும், கூடுதல் சட்ட உதவிக்காக மனுதாரர் தேவையென்றால் மீண்டும் நீதிமன்றத்தை நாடும் சுதந்திரத்தையும் வழங்கியுள்ளது.

இந்த விவகாரத்தில் விசாரணையை எப்போது முடிக்க முடியும் என்பதை மத்திய அரசால் துல்லியமாகச் சொல்லவில்லை என்பதைக் குறிப்பிட்ட நீதிபதிகள், தெளிவான காலக்கெடு இல்லாததால் வழக்கை நிலுவையில் வைத்திருப்பதில் அர்த்தமில்லை என்று தெரிவித்தனர்.

 அதைத் தொடர்ந்தே மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள் வேறு சட்ட ரீதியான தீர்வுகளை நாட மனுதாரருக்கு உரிமை இருப்பாகவும் குறிப்பிட்டனர். 

முன்னதாக நடந்த விசாரணையில் இந்த விவகாரத்தில் தெளிவான அறிக்கையைச் சமர்ப்பிக்கத் தவறியதாக  குறை கூறியுள்ளது .

குறிப்பு 

ராகுல் காந்தி பிரிட்டன் குடியுரிமையைப் பெற்றுள்ளதாக மனுதாரர் குற்றஞ்சாட்டியிருந்தார். இருப்பினும், அதைப் பிரிட்டன் அரசிடம் கேட்டு உறுதி செய்ய முடியாததால் மத்திய அரசு கூடுதல் அவகாசம் கோரியிருந்தது.

தெளிவான காலக்கெடு இல்லாததால் வழக்கை நிலுவையில் வைத்திருப்பதில் அர்த்தமில்லை என்று கூறி நீதிபதிகள் வழக்கை  தள்ளுபடி செய்துள்ளனர் .




தமிழ்நாட்டில் 2 இடங்களில் போர் ஒத்திகை-பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல்!

   


        ஜம்மு காஷ்மீர் பஹல்காம்லில் ஏப்ரல் 22 ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில்    சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

    இரு நாடுகளும் தங்கள் ராணுவ பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளன. இதனால், எல்லை பகுதிகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று மே   7 நாடு முழுக்க உள்ள 259 இடங்களில் போர் கால பாதுகாப்பு ஒத்திகையை மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் கல்பாக்கம், துறைமுகம் ஆகிய 2 இடங்களை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.


 தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுரைப்படி, போர் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த ஒத்திகை நிகழ்ச்சி கல்பாக்கம் அணுமின் நிலையம் மற்றும் சென்னை துறைமுகத்தில் இன்று   4 மணிக்கு நடைபெற உள்ளது. 

    எந்த அவசரகால சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது குறித்து இந்த பயிற்சியின் போது ஆய்வு செய்யப்படும். சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில், மாநில அவசர கால செயல்பாட்டு மையம் செயல்படும். இந்த போர் ஒத்திகையின் போது, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம், போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் பங்கு கொள்வார்கள். மாலை 4 மணி முதல் 4:30 மணி வரை இப்பயிற்சி நடக்க உள்ளது.

    இந்த பயிற்சி தொடர்பாக  மத்திய மற்றும் மாநில அதிகாரிகளுடன் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை செயலர், வருவாய் பேரிடர் மேலாண்மை ஆணையர், டிஜிபி, கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் திட்ட இயக்குநர், சென்னை துறைமுகத்தின் தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

    சம்பந்தப்பட்ட இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி உள்ளன என்பதை ஆய்வு செய்வதற்காக இந்த ஒத்திகை நடக்கிறது. மற்ற இடங்களில் வழக்கம் போல் பணிகள் நடக்கும். இந்த ஒத்திகையால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை." என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.


இந்திய எல்லைப் பகுதிகளில் வான்வழித் தாக்குதல், போர் மற்றும் ஏவுகணை தாக்குதல் எதிரிகள் தாக்கும்போது பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் எப்படி தங்களைப் பாதுகாத்து கொள்வது? எதிரி நாட்டினர் திடீரென எல்லைக்குள் நுழைந்தால் சைரன் ஒலிப்பது, மின் தடை ஏற்பட்டால் எப்படி? என்பது குறித்தெல்லாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.. அதுமட்டுமல்ல, ஒருவேளை குடியிருப்பு பகுதிகளில் திடீர் தாக்குதல் நடத்தப்பட்டால், பொதுமக்கள் தங்களை எப்படி தற்காத்து கொள்வது? என்பது குறித்த பயிற்சி தரப்படுகிறது.. போர் பதற்ற சூழலின்போது மக்களை எப்படி பாதுகாப்பது? எப்படி வெளியேற்றுவது? என்பது குறித்தும் ஒத்திகைகள் நடத்தப்பட உள்ளது.

விஜய் மீது மறைமுக தாக்கு? - நேற்று கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர்.- முதல்வர் ஸ்டாலின்

 


    சென்னை அண்ணா அறிவாலயத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்தவர்கள்  மாற்றுக்கட்சியினர் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.  "நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள். நேற்று கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர்.. அரசியலுக்கு அரிச்சுவடே தெரியாதவர்கள் எல்லாம் அடுத்த முதலமைச்சர்.. என்று பேசக்கூடிய நிலைதான் இன்றைக்கு உள்ளது. நாம் அதைப்பற்றி கவலைப்பட வேண்டியதே இல்லை. திமுக கட்சி தொடங்கும்போது ஆட்சிக்கும் வரவேண்டும் என்று நினைக்கவில்லை. கட்சி தொடங்கிய உடனே நாம் தேர்தலில் களத்திற்கு வரவில்லை. 57-ல் தேர்தல் களத்திற்கு வந்தோம். திருச்சியில் அண்ணா மாநாட்டை வைத்து, ஒரு பெட்டியை வைத்து தேர்தலுக்கு போகலாமா என்று எழுதி போட சொல்லி பிறகு நாம் தேர்தல் அரசியலுக்கு வந்தோம்.

    பிறகு அண்ணா தேர்தலில் நிற்கலாம் என்று கூறினார். தேர்தலில் நின்று 15 இடங்களில் வெற்றி பெற்றோம். பிறகு இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றோம். அடுத்த தேர்தலில் ஐம்பது இடங்களில் வெற்றி பெற்றோம். அண்ணா தலைமையில் பிறகு ஆட்சி பொறுப்பேற்று தேர்தல் வாக்குறுதிகள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டது. ஏழாவது முறையாக இருமொழிக் கொள்கை தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பெயர் வைக்கப்பட்டது. அண்ணா மறைந்த பிறகு அந்த இடத்தை பூர்த்தி செய்ய கலைஞர் கருணாநிதி தனது பணிகளை தொடங்கினார். அண்ணா விட்டுவிட்டுப் போன திட்டங்களை அவர் தொடர்ந்தார். 71 தேர்தலில் நின்று வெற்றி பெற்றோம், 1975 ஆம் ஆண்டு ஆட்சி கலைக்கப்பட்டது. 13 ஆண்டு காலமாக ஆட்சிக்கு வர முடியாமல் 89 ஆம் ஆண்டு ஆட்சிக்குப் பிறகு வந்தோம். ராஜீவ் காந்தி கொலை வழக்கை வைத்து திமுக மீது குற்றம் சாட்டினார்கள். தேர்தலில் தோற்க வைத்தார்கள். மீண்டும் 2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் முடிந்து ஐந்தாம் வருடத்தை தொடங்க உள்ளோம். ஆறு முறை தமிழகத்தில் வெற்றி பெற்று ஏழாவது முறையாகவும் திமுக தான் வெற்றி பெற உள்ளது. நான் திமிராக சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம்.
 இந்தியாவில் முதல் முறையாக மாநில கட்சியாக ஆட்சி அமைத்தது தமிழ்நாடு தான், இந்தியாவிற்கு வழிகாட்டக் கூடிய கட்சி திமுக. 90% தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒரு சில வாக்குறுதிகள் தான் நிறைவேற்றப்படவில்லை, அதனையும் விரைவில் நிறைவேற்றுவோம்." எனப் பேசினார். முதல்வர் ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை மறைமுகமாக தாக்கிப் பேசியுள்ளார் என்ற பேச்சுகள் அரசியல் அரங்கில் உலவத் தொடங்கி உள்ளன. தவெக தலைவர் விஜய், பாஜகவையும், திமுக அரசையும் கடுமையாக விமர்சித்துப் பேசி இருந்தார். இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினும் அட்டாக் மோடை தொடங்கி உள்ளார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

ரூ.12 லட்சத்தில் கட்டப்பட்ட பொது கிணற்றின் கான்கிரீட் சுற்றுச்சுவர் 3 வருடத்திலேயே இடிந்து விழுந்த அவலம் ,

     திரிசூலம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.12 லட்சத்தில்கட்டப்பட்ட. பொது கிணற்றின் கான்கிரீட் சுற்றுச்சுவர் lதரமற்ற முறையில் கட்டப்பட்டதாலேயே  விழுந்ததாக  பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்

     சென்னை பல்லாவரத்தை அடுத்த திரிசூலம் பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கென பொது கிணறு ஒன்று உள்ளது. அந்த பகுதி பொதுமக்கள் இந்த கிணற்று நீரைத்தான் தினமும் பருகுகிறார்கள். இந்நிலையில் திரிசூலம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.12 லட்சத்தில் பொது கிணற்றின் கான்கிரீட் சுற்றுச்சுவர் கட்டப்பட்டிருந்தது. இந்த சுவர் கட்டிய வெறும் 3 ஆண்டுகளில் அடியோடு இடிந்து விழுந்தது. தரமற்ற முறையில் கட்டப்பட்டதாலேயே இடிந்து விழுந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

.
 சென்னை விமான நிலையம் எதிரே உள்ள திரிசூலம் பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கென உள்ள  பொது கிணறு இருக்கிறது  . அந்த பகுதி பொதுமக்கள்  நெடுங்காலமாக இந்த கிணற்று நீரைத்தான் தினமும் தங்களது அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் திரிசூலம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 2022-ம் ஆண்டு சுமார் ரூ.12 லட்சத்து 25 ஆயிரத்தில் இந்த கிணற்றின் பக்கவாட்டு சுவர்கள் கான்கிரீட்டால் கட்டப்பட்டிருந்தது. பொது கிணற்றின் ஓரங்களில் கட்டப்பட்டு இருந்த கான்கிரீட் சுற்றுச்சுவர்கள் 5.5.2025அன்று   திடீரென பயங்கர சத்தத்துடன் இடிந்து கிணற்றின் உள்ளே விழுந்து விட்டது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த கிணற்றை ஒட்டியுள்ள ரேஷன் கடையின் சுவரும் கிணற்றின் பக்கம் சரிந்து விழுந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் திரிசூலம் ஊராட்சி மன்ற நிர்வாகம் அவசர அவசரமாக அந்த கிணற்றை பொக்லைன் எந்திரம் மூலம் மண்ணை கொட்டி மூடும் பணியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் அந்தப்பகுதி  பொதுமக்கள்  கோபம் கொண்டு பொதுக்கிணற்றை சுற்றி கட்டப்பட்ட கான்கிரீட் சுற்றுச்சுவர் கட்டி முடிந்து 3 ஆண்டுகள் கூட ஆகவில்லை. அதற்குள் கிணற்றின் பக்கவாட்டு சுவர்கள் இடிந்து விழுந்துள்ளதை கண்டு கோபத்தில் உள்ளனர் .
 

தரமற்ற முறையில் பணி நடைபெற்றதால் தான் கிணறு இடிந்து விழுந்துள்ளது. இதை சீரமைக்காமல், பல ஆண்டாக பயன்படுத்தி வந்த கிணற்றை, ஊராட்சி நிர்வாகம் மண்ணை கொட்டி மூடியுள்ளது. இவ்வாறு செய்தால் பொதுமக்கள் குடிநீர் தேவைக்காக என்ன செய்வார்கள். எனவே, முறையாக தூர்வாரி, தரமான பக்கவாட்டு சுவர் கட்டி, மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கிணற்றை கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

தி டிக்டேட்டர் படத்தின் ஹீரோவுக்கும் ஸ்டாலினுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை - எடப்பாடி பழனிச்சாமி.



தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினை இல்லை என சொல்லும் ஸ்டாலினுக்கும், தி டிக்டேட்டர் படத்தில் வரும் ஹீரோவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என விமர்சித்திருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி.

ஒரே நாளில் பல குற்ற சம்பவங்களால் அதிர்ந்து கிடக்கிறது தமிழகம். இந்த நிலையில் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினை இல்லை என சொல்லும் ஸ்டாலினுக்கும், தி டிக்டேட்டர் படத்தில் வரும் ஹீரோவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என விமர்சித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"நான்காண்டு ஸ்டாலின் மாடல் ஆட்சி- சவக்குழிக்கு சென்ற சட்டம் ஒழுங்கே சாட்சி! ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் வந்த சில செய்திகள்: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பாஜக பெண் நிர்வாகி சரண்யா மர்ம நபர்களால் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை. திருப்பத்தூர் கூத்தாண்டகுப்பம் அருகே கிணற்றில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூதாட்டி சடலம் கண்டுபிடிப்பு. வண்டலூர் தனியார் கல்லூரி வளாகத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் வெட்டிக்கொலை

கரூர் மாவட்டம் குளித்தலையில் கோயில் திருவிழாவில் மதுபோதை ஆட்டத்தை தட்டிக்கேட்ட 12-ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திக்கொலை, -புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் இரு ஜாதி தரப்பினர் இடையே மோதலில் வீடுகளுக்கு தீ வைப்பு; பேருந்து கண்ணாடி உடைப்பு; 5 பேருக்கு அரிவாள் வெட்டு, நாளையோடு திரு. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் ஆகின்றன.

இந்த ஸ்டாலின் மாடல் ஆட்சியில் சராசரி நாள் எப்படி இருக்கிறது என்பதற்கு இன்றைய ஒரு நாளின் செய்திகளே சாட்சி. ஒவ்வொரு நாளும் இப்படி கொலைகளுக்கு, கலவரங்களுக்கும், சமூக அவலங்களுக்கும் இடையில் தான் நாம் வாழ்கிறோம். ஆனால், இது எதைப் பற்றியும் துளியும் அக்கறை இல்லாதவராய், நாலாண்டு கழிந்து விட்டது என நாளை ஒரு வீடியோஷூட் எடுத்துக்கொண்டு திரு. ஸ்டாலின் வருவார் பாருங்களேன். "The Dictator" எனும் ஆங்கில படத்தின் ஹீரோவுக்கும் ஸ்டாலினுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை! "எனது ஆட்சியில் பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் நடக்கவில்லை" என்று சட்டப்பேரவையில் சொன்னவர், இதையெல்லாம் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளாகக் கருதவே இல்லை என்றே தோன்றுகிறது. "ஆக, குற்றவாளிகள் கைது" என்று சொல்வீர்களே- அதையாவது செய்து, சட்ட நடவடிக்கை எடுங்கள் என்று விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன் . எனதருமை தமிழ்நாட்டு மக்களே- இனியும் இந்த ஸ்டாலின் மாடல் அரசை நம்பி எந்தப் பயனும் இல்லை; இன்னும் ஓராண்டு உங்களை நீங்களே தற்காத்துக் கொள்ளுங்கள். 2026-ல் #ByeByeStalin என்று சொல்லப்போகும் உங்களின் தீர்ப்பு மூலம் மீண்டும் அஇஅதிமுக ஆட்சி அமையும்! தமிழ்நாடு உங்களுக்கு முற்றிலும் பாதுகாப்பான அமைதிப்பூங்காவாக மீண்டும் திகழும் என்ற வாக்குறுதியை நான் உங்களுக்கு அளிக்கிறேன்." என கூறியுள்ளார்

Friday, 2 May 2025

தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகளுக்கு ரூ.2000 அபராதம்

 

கடைகள் பெயர்களை தமிழில் ...

  

2 நாட்களுக்கு முன்பு, முதலமைச்சர் தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், "குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப் பெயர்களும், அதற்கான பொருளும் அடங்கிய இணையதளம் தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் தொடங்கப்படும்" என்று பதிவிட்டிருந்தார் இது அனைவரிடையே வரவேற்பும் பெற்றது .

 

சென்னை தலைமை செயலகத்தில், நேற்று அமைச்சர்கள் சாமிநாதன், கணேசன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது

அதில், தமிழ் வளர்ச்சி துறை செயலர் செல்வராஜ், ''வணிக நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்கும் போதும், புதுப்பிக்கும் போதும், தமிழில் பெயர்ப்பலகை உள்ளதா என்பதை உறுதி செய்து வழங்கினால், பிரச்னைகளை களையலாம்,'' என்றார்.

அதற்கு, தொழிலாளர் நலத்துறை செயலர் குமார் ஜெயந்த், ''தமிழில் பெயர்ப்பலகை வைக்காத நிறுவனங்களுக்கு, 50 ரூபாய் அபராதம் விதிக்கும் சட்டத்தை திருத்த அரசாணை வெளியிடப்பட்டது. 2,000 ரூபாயாக அபராத தொகையை உயர்த்தும் வகையில், அறிவிக்கை வெளியிடப்பட்டு உள்ளது,'' என்றார்.

இதையடுத்து பேசிய, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் சாமிநாதன், ''அடுத்த மாதம், 21 முதல் 27ம் தேதி வரை, தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரமாக கடைப்பிடித்து, விழிப்புணர்வு கூட்டங்கள், பேரணிகள் நடத்தி, வணிகர்களுக்கு, உயர்த்தப்பட்ட அபராதம் குறித்து தெரிவிக்க வேண்டும்,'' என, உத்தரவிட்டார்.

தொழிலாளர் நல ஆணையர் அதுல் ஆனந்த், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் அவ்வை அருள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 


சிதம்பரத்தில் வி சி க வின் மேடை படிக்கட்டு சரிந்ததால்,2 எம்எல்ஏக்கள் கீழே விழுந்து காயம், தப்பிய ரவிக்குமார் எம்பி



2-vck-mlas-fall-down-when-the-stage-temporary-stairs-broken

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவராகவும்  சிதம்பரம் லோக்சபா தொகுதியின் எம்பியாக இருப்பவர் தொல் திருமாவளவன். கடலூர் மாவட்டம்  சிதம்பரம் அருகே  வரும் 6ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேர்தல் அங்கீகார வெற்றி விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், விழுப்புரம் தொகுதி எம்பியுமான ரவிக்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் தொகுதி எம்எல்ஏ எஸ்எஸ் பாலாஜி, செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு உள்பட பல நிர்வாகிகள் இன்று மேடை அமைக்கும் பணியை பார்வையிட சென்றுள்ளனர் . அப்போது மேடையின் மீது ஏற தற்காலிகமாக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு இருந்தது. அதன் வழியாக மேடை மீது ஏற சென்றுள்ளனர் . முதலில் ரவிக்குமார் எம்பி உள்பட நிர்வாகிகள் சிலர் மேடைக்கு சென்றனர். அதன்பிறகு எம்எல்ஏக்கள் எஸ்எஸ் பாலாஜி, பனையூர் பாபு உள்ளிட்டோரூம் மேடை ஏற  சென்றுள்ளனர்.

அப்போது மேடைக்கு செல்ல அமைக்கப்பட்டு இருந்த படிக்கட்டுகள் திடீரென உடைந்தது. இதனால் எம்எல்ஏக்கள் எஸ்எஸ் பாலாஜி, பனையூர் பாபு,  உட்பட கட்சி நிர்வாகிகள் கீழே விழுந்தனர். 2 எம்எல்ஏக்களும் லேசாக காயமடைந்தனர்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை பற்றி சிந்திக்க வேண்டிய உள்ளது'' - முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம்


U Sagayam IAS

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் இவர் கிரானைட் குவாரிகளில் நடந்த ஊழலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்.

மதுரை மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய காலத்தில் கிரானைட் குவாரி ஊழலை அம்பலப்படுத்தினார். 

கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் கிரானைட் முறைகேடு குறித்து விசாரித்த சகாயம் கிரானைட் ஊழல் மூலமாக ரூ.1 லட்சம் கோடி தமிழ்நாடு அரசுக்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதாக கடந்த 2015 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.

இந்த சம்பவத்துக்கு பிறகு பல துறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்ட சகாயம் தன்னுடைய பணி காலம் முடியும் முன்பே ஐஏஎஸ் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். 

தற்போது கிரானைட் ஊழல் வழக்கு மதுரை நீதிமன்றத்தில் நடந்து வரும் சூழலில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று சகாயத்துக்கு மதுரை நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது.

ஆனால் தமிழ்நாடு அரசு தனக்கு வழங்கியிருந்த பாதுகாப்பை விலக்கிக் கொண்டதால், தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று குறிப்பிட்டு நீதிமன்றத்தில் சகாயம் ஆஜராவதை தவிர்த்துள்ளார்.

விவரம் 

கடந்த 2014 ஆம் ஆண்டு குவாரிகளில் நடந்த முறைகேடு குறித்து விசாரிக்க சிறப்பு அதிகாரியாக சகாயத்தை நீதிமன்றம் நியமித்தது. இதையடுத்து அவர் 1990ஆம் ஆண்டு முதல் சுமார் 24 ஆண்டு காலமாக நடந்து வந்த முறைகேட்டை வெளியே கொண்டு வந்தார். அவர் தாக்கல் செய்த 600 பக்க அறிக்கையின் மூலம் ரூ 1 லட்சம் கோடி ரூபாய்க்கு குவாரிகளில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இந்நிலையில் தான் கிரானைட் குவாரிகளில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கு விசாரணைக்கு அவர் சாட்சியம் அளிக்க மதுரை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. 

இதற்கு அவருக்கு வந்த மிரட்டல் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக அவர் அரசு வழக்கறிஞருக்கு கடிதம் அனுப்பினார். அதில், ‛‛பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் மதுரை நீதிமன்றத்தில் ஆஜராக வாய்ப்பில்லை. எனக்கு மாநில அரசு வழங்கி வந்த பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டது. என் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது தவறானது, முறையற்றது. எனவே எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை நீதிபதியிடம் தெரிவிக்க வேண்டும்'' என குறிப்பிட்டு இருந்தார்.

‛தமிழகத்தில் சமூக செயற்பாட்டாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை. நெல்லையில் ஜாகீர் உசேன் என்பவர் போராடினார். காவல்துறையில் பணியாற்றியவர், முன்னாள் முதலமைச்சர் ஒருவரிடம் பணியாற்றியவர் என்று சொல்லப்படுகிறது. என்னை கொல்லப்போகிறார்கள் என்று வீடியோ வெளியிட்ட 2 நாட்களுக்கு பிறகு கொல்லப்படுகிறார் என்று சொன்னால் நான் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சிந்திக்க வேண்டியதாக உள்ளது. இது அரசியல் அல்ல. அரசியலுக்கு அப்பாற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனை பற்றி சிந்திக்க வேண்டிய ஒன்று. மிக மோசமான, பாதுகாப்பற்ற சூழல் இந்த சமூக செயற்பாட்டாளர்கள், போராளிகளுக்கு உள்ளது. இதை எனக்காக மட்டும் பேசவில்லை. இவர்களுக்கு நீங்கள் என்ன செய்து இருக்கிறீர்கள்? இங்கே கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு லட்சக்கணக்கில் கொடுக்க கூடிய தமிழக அரசு மண்ணை காத்த சமூக சொத்தாக, தேசத்தின் சொத்தாக இருக்க கூடிய கனிமவளத்தை பாதுகாப்பதற்காக இருந்த எளிய இஸ்லாமிய குடிமகனின் குடும்பம் நிராயுதபாணியாக இன்று இருக்கிறது. அவருக்கு 3 பிள்ளைகள். 2 பெண் பிள்ளைகள். ஒரு மகன் என்று சொல்கிறார்கள். வறுமை நிலையில் இருக்கிறார்கள். ஆனால் கொல்லப்பட்ட ஜகபர் அலிக்கு தமிழக அரசு எந்த இழப்பீடும் அளிக்காதது வருத்தத்துக்குரியது'' என்று சாடியுள்ளார்.

எனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் எனக்கான காவல் துறை பாதுகாப்பை மீண்டும் வழங்க உத்தரவிட வேண்டும். கிரானைட் முறைகேட்டை விசாரிக்காமல் இருக்க எனக்கு 200 கோடி ரூபாய் லஞ்சமாக தர தயாராக இருந்தனர்.

கிரானைட் குவாரிகள் தொடர்பாக ஹெலிகாம் படம் எடுத்தவர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். எனக்கு உதவியவர்களின் உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் உள்ளது. எனக்கான காவல் துறை பாதுகாப்பை மீண்டும் வழங்கினால் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறேன்." என்று சகாயம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

 DMK District Secretaries Meet: மு.க.ஸ்டாலின் கொடுத்த டார்கெட்... 2026  தேர்தலில் திமுகவின் மாஸ் பிளான்!தமிழக

 

முதல்வரும் திராவிட  முன்னேற்ற கழகத்தின்  தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 10.30 மணியளவில், சென்னை கலைஞர் அரங்கில் நடைபெறவுள்ளது. 

       இந்த கூட்டத்தில் திராவிட  முன்னேற்ற கழகத்தின் கட்சி வளர்ச்சி, தி மு க வின் ஆக்கப்பூர்வமான பணிகள் குறித்தும் , 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளதாக தகவல். 

     மேலும்  கூட்டத்தில் தேர்தல் பணிகள் தொடர்பாக அறிவுறுத்தல்களை வெளியிடுவதுடன், மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையும் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


 





Thursday, 1 May 2025

முஸ்லிம்கள் அல்லது காஷ்மீரிகளுக்கு எதிராக யாரும் செயல்படுவதை நாங்கள் விரும்பவில்லை "எங்களுக்கு நீதி வேண்டும்,"-கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி வேண்டுகோள்.

 பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் காரணமாக, முஸ்லிம்களையோ அல்லது காஷ்மீரிகளையோ குறிவைக்காதீர்கள் என்று தாக்குதலில் உயிரிழந்த கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 பேரில், கடற்படை அதிகாரி வினய் நர்வாலும் ,ஒருவர்.திருமணமாகி ஒருவாரமே ஆன நிலையில் அவர் தனது மனைவி ஹிமான்ஷி நர்வால் உடன் பஹல்காம் சென்றிருந்தார்.

தேனிலவுக்காக அவர்கள் சென்றிருந்த நிலையில், பயங்கரவாதிகள் வினய் நர்வாலை சுட்டுக்கொன்றனர். வினய் நர்வாலின் 27வது பிறந்தநாளை முன்னிட்டு, ஹரியானாவின் கர்னாலில் இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. கர்னாலில்  உள்ள அரசு சாரா நிறுவனமான தேசிய ஒருங்கிணைந்த கலைஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் மன்றத்தால் இந்த  ரத்த தான முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், நர்வாலின் தாயார் மற்றும் மனைவி ஹிமான்ஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். 

அந்த கூட்டத்தில் ஒருவர் உரையாற்றும்போது , பயங்கரவாதிகள் அப்பாவி மக்களின் இரத்தத்தைச் சிந்தினாலும், இந்த இரத்த தான முகாம் மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்படும் என்று கூறினார். கர்னாலின் பாஜக எம்.எல்.ஏ ஜக்மோகன் ஆனந்தும் இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார் .

 

செய்தியாளர்களிடம் பேசிய குருகிராமைச் சேர்ந்த முனைவர் பட்டம் பெற்ற வினய்நர்வால் மனைவி ஹிமான்ஷி நர்வால், “அவர் எங்கிருந்தாலும், ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்று முழு தேசமும் அவருக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

 முஸ்லிம்கள் அல்லது காஷ்மீரிகளுக்கு எதிராக யாரும் செயல்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்கு அமைதி வேண்டும், அமைதி மட்டுமே வேண்டும். நிச்சயமாக, எங்களுக்கு நீதி வேண்டும்," என்று கூறினார். ​

திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனுக்கு  " 908" கோடி அபராதம் !

 அமலாக்கத்துறை விசாரணையில், சட்டவிரோத பணப் பரிவார்த்தையில் விதிமீறல் ஏற்பட்டதற்கு அபராதமாக 908 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 


திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம்.! ரூ. 89.18 கோடி  சொத்துக்கள் முடக்கம்.!!

கடந்த 2020-ம் ஆண்டு ஜெகத்துக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. சோதனையின் முடிவில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை வட்டாரம் தகவல் தெரிவித்தன.

 அதேபோல ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 89.19 கோடி ரூபாய் மதிப்புடைய அசையும் மற்றும் அசையா சொத்துகள் முடக்கப்படுவதாகவும் அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பை எதிர்த்து நீதிமன்றத்துக்குச் சென்றது ஜெகத்ரட்சகன் தரப்பு. அதனை தொடர்ந்து சொத்து முடக்கத்தை ரத்து செய்தது நீதிமன்றம்.


அமலாக்கத்துறை அறிக்கை

 ரத்து செய்ததை எதிர்த்து நீதிமன்றம் சென்றது அமலாக்கத்துறை தரப்பு. ஜெகத்ரட்சகன் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்ட விதிகளை மீறி பல்வேறு குற்றங்களைச் செய்திருப்பதாக நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. அதோடு அவர் சிங்கப்பூர், இலங்கை என வெளிநாடுகளில் 51 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்து சட்டவிரோத பணப் பரிவர்த்தனை செய்திருக்கிறார் என்று அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் வாதாடியது. இந்த விவகாரம் தொடர்பாகவே ஜெகத்ரட்சகனின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டது. இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சொத்துக்களைப் பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பித்தார். 

அதே சமயத்தில், அமலாக்கத்துறை விசாரணையில், சட்டவிரோத பணப் பரிவார்த்தையில் விதிமீறல் ஏற்பட்டதற்கு அபராதமாக 908 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, முடக்கப்பட்ட 89.19 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்து பறிமுதல் செய்யப்படுவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


மதுரைதனியார் மழலையர் பள்ளியில் சிறுமி பலியான சம்பவம்.. தனியார் பள்ளியின் உரிமம் ரத்து! -மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை

 மதுரை ஸ்ரீ கிண்டர் கார்டன் மழலையர் பள்ளியில்சிறுமி பலியான சம்பவம்..  தனியார் பள்ளியின் உரிமம் ரத்து!



மழலையர் பள்ளியில் சிறப்பு வகுப்பு; தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த 4 வயது  சிறுமி பலி.. மதுரையில் சோகம் - Vikatan

மதுரை கே.கே.நகரில் உள்ள ஸ்ரீ கிண்டர் கார்டன் மழலையர் பள்ளியில் 4 வயது சிறுமி ஒருவர் படித்து வந்த நிலையில், திறந்து கிடந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 மதுரை மாநகருக்கு உட்பட்ட கே.கே நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ கிண்டர் கார்டன் மழலையர் பள்ளியில், மாணவர்களுக்கு கோடைக்கால சிறப்புப் பயிற்சி முகாம் நடைபெற்று வந்துள்ளது. இதில், மதுரை உத்தங்குடி பகுதியைச் சேர்ந்த அமுதன் - சிவ ஆனந்தி தம்பதியின் நான்கு வயது குழந்தை ஆருத்ராவும் பங்கேற்றுள்ளார். காலை 11 மணியளவில் பள்ளி வளாகத்தில் விளையாடிய சிறுமியை திடீரென காணவில்லை. பள்ளி வளாகம் முழுவதும் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுமி, அங்குள்ள தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து கிடந்தது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் அண்ணா நகர் காவல் நிலையத்துக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். 

தகவல் அறிந்து அக்கம் பக்கத்தினரும் அங்கு திரண்டனர். கார் ஓட்டுநர் ஒருவர் உள்ளே சென்று சுமார் 8 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டிக்குள் கிடந்த குழந்தையை மீட்டார். பின்னர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குழந்தைகள் நடமாடும் பகுதியில் தண்ணீர் தொட்டியை அஜாக்கிரதையாக திறந்து வைத்திருந்தது தொடர்பாக பள்ளி தாளாளர் திவ்யா ராஜேஷ், உதவியாளர் வைரமணி ஆகியோரை கைது செய்துள்ளனர். அவர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணை நடந்து வருகிறது.

 இந்நிலையில் சிறுமியின் மரணத்தைத் தொடர்ந்து அந்த பள்ளியை இழுத்து மூட வேண்டும் என பெற்றோர்கள் கூறிவந்த நிலையில், அந்த பள்ளியின் உரிமத்தை ரத்து செய்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. பள்ளிக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில் உரிமம் ரத்து; மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

முன்னதாக, "மதுரை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் மழலையர் பள்ளி உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளும் கோடைக்கால விடுமுறை நாட்களில் எவ்வித நிகழ்வுகளின் பெயரில் பள்ளிக் குழந்தைகளை பள்ளிக்கு வரவழைக்கக் கூடாது எனவும், இதனை மீறிச் செயல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்," என்றும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா நேற்று     { 29 4.2029}       எச்சரிக்கை விடுத்திருந்தார்.

 மதுரை மாவட்டத்தில் உள்ள மழலையர் பள்ளி உள்ளிட்ட அனைத்து வகையான பள்ளிகளிலும் மாணவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும், கோடைக்கால சிறப்பு முகாம்கள் மற்றும் வகுப்புகள் நடத்தக்கூடாது எனவும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் சார்பில் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவை மீறினால் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த சுற்றறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.