சென்னை வடபழனி முருகன் கோவில் பின்புறம் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று
முன்தினம் இரவு திருமண நிகழ்ச்சி நடந்தது. அப்போது திருமண மண்டபத்தில்
புகுந்து மொய் பணத்தை திருடியதாக, வாலிபர் ஒருவரை பிடித்து, திருமணத்திற்கு
வந்தவர்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
வடபழனி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன், அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தினார். அவரது பெயர் கார்த்திக் (வயது 28) என்றும், ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. அவரிடம் இருந்து ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் நேற்று நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

No comments:
Post a Comment