தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை அரசு தூக்க
தண்டனை விதித்ததை கண்டித்து சிதம்பரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர்
இலங்கை அதிபர் ராஜபட்சே உருவபொம்மையை எரித்து கண்டன கோஷமிட்டனர். சிதம்பரம்
வடக்குவீதி தலைமை தபால் நிலையம் முன்பு கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர்
முடிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் ஈடுபட்ட 32 பேரை நகர
போலீஸார் கைது செய்து வழக்குப் பதிந்து மாலை விடுவித்தனர்.
தமிழ்த் தேசியப் பேரியக்கம்: தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை அரசு தூக்க தண்டனை விதித்தை கண்டித்து, இலங்கை அரசின் தமிழினப் பகையையும், இந்திய அரசின் சிங்கள ஆதரவுப் போக்கையும் கண்டித்தும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் சிதம்பரம் மேலவீதி - வடக்குவீதி சந்திப்பு பெரியார் சிலை அருகில் இலங்கை அதிபர் ராஜபட்சே உருவபொம்மை எரித்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இப்போராட்டத்திற்கு, தமிழ்த் தேசியப் பேரியக்க பொதுக்குழு உறுப்பினர் ஆ.குபேரன் தலைமை வகித்தார். தமிழ்த் தேசியப் பேரியக்க நகரச் செயலாளர் கு.சிவப்பிரகாசம், மு.முருகவேள், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்க ஒருங்கிணைப்பாளர் விடுதலைச்செல்வன், தமிழக மாணவர் முன்னணி தமிழக அமைப்பாளர் வே.சுப்ரமணியசிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment