த.வெ.க. தலைவர் விஜய்க்கு 'Y' பிரிவு பாதுகாப்பு-
உள்துறை அமைச்சகம் உத்தரவு. 'Y' பிரிவில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என 8 முதல் 11 பேர் பாதுகாப்பு அளிப்பர்.
விஜய் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை சந்தித்துள்ளார். அவருடைய அரசியல் நகர்வுகள் அவர் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தீவிரம் கொண்டுள்ளதைக் காட்டுகிறது.
வரும் ஏப்ரல், மே மாதங்களில் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், விஜய்க்கு ‘ஒய்’ (Y) பிரிவு பாதுகாப்பு அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்தப் பாதுகாப்புப் பிரிவினர் தமிழகத்துக்குள் விஜய் எங்கு சென்றாலும் அவருடன் பாதுகாப்புக்காகச் செல்வார்கள் எனக் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment