தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் உலகெங்கும் அறியச் செய்த, தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் அவர்களது பிறந்த தினம் இன்று.
பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்தலே தம் வாழ்வின் குறிக்கோளாக கொண்டிருந்த உ.வே.சா., பாரதியாரால் “கும்பமுனி எனத்தோன்றும் சாமிநாதப் புலவன்” என்று பாராட்டப்பட்டார்.
தமிழின் சிறப்பை உலகறியச் செய்து தொன்மையான தமிழ் இலக்கியங்கள் பலவற்றை மீட்டுக் கொடுத்தவர் உ.வே.சா. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏட்டுச்சுவடிகளைச் சேகரித்தஉ.வே.சா. அந்த காலத்தில் சுவடி படிக்கத் தெரிந்தவர் சுவடியை நகல் செய்து புத்தகமாகப் போடும்போது சுவடியில் இருப்பது போன்றே அச்சிட்டனர். ஆனால் உ.வே.சா முன்னுரை, ஆய்வுரை, மேற்கோள் நூல்களின் பட்டியல், எடுத்தாண்ட சுவடிகளின் பட்டியல், நூலாசிரியர் மற்றும் உரையாசிரியர் வரலாறு போன்ற தகவல்களையும் பதிப்பித்து புது புரட்சி ஏற்படுத்தினார். தமிழ் செம்மொழி தகுதி பெற உ.வே.சா. போன்றோரும் காரணமாவர்.
No comments:
Post a Comment