Wednesday, 5 February 2025

அண்ணா பல்கலை. மாணவி பலாத்கார வழக்கில்-ஞானசேகரனுக்கு இன்று குரல் பரிசோதனை..






சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி, பல்கலை வளாகத்திலேயே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம்   மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஞானசேகரனுக்கு 7 ஆம் தேதி (நாளை) வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஞானசேகரன் செல்போனில் பேசிய ஆடியோ ஆதாரங்களை, உறுதி செய்ய ஆய்வகத்தில் குரல் பரிசோதனை செய்வதற்கு சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் முடிவு செய்தனர்.
இதையடுத்து ஞானசேகரனிடம் குரல் பரிசோதனை நடத்த அனுமதி கோரி சிறப்பு புலனாய்வு குழு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியன், இன்று (பிப்.6) ஞானசேகரனுக்கு குரல் பரிசோதனை நடத்த அனுமதித்து உத்தரவிட்டார். ஞானசேகரன் குரல் சோதனை செய்ய அனுமதி கேட்ட வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜர்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு, நீதிமன்ற உத்தரவின்படி இன்று குரல் பரிசோதனை செய்யப்பட உள்ளது. குரல் பரிசோதனை முடிந்த பிறகு, காவல்துறையினர் அவரை மீண்டும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளனர்.

அதன் பின்னர் நீதிமன்ற அனுமதி பெற்று நாளை அல்லது நாளை மறுநாள் ஞானசேகரனுக்கு இரத்த பரிசோதனை செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு பரிசோதனைகளின் முடிவுகளை பொறுத்து தான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.


No comments:

Post a Comment