சென்னையில் உள்ள மணலியில் மாநகராட்சிக்கு சொந்தமான பயோ கியாஸ் நிறுவனம் உள்ளது. சென்னை மாநகராட்சியின் 5 மண்டலங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளில் திடக்ழிவுகள் மூலம் பயோ கேஸ் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. மணலி சின்ன சேக்காடு அருகே உள்ள இந்த பயோ கியாஸ் நிறுவனத்தில் நேற்று நள்ளிரவு திடீரென்று வாயுக்கசிவு ஏற்பட்டது.
சுனாமி குடியிருப்பை சேர்ந்த பாஸ்கரன் மற்றும் சுதாகர் ஆகிய இருவரும் மெஷின் ஆபரேட்டர்களாக அங்கு பணியாற்றி வருகிறார்கள். நேற்று இரவு பணி முடிந்து அவர்கள் வீட்டிற்கு கிளம்பும்போது மெஷின்களை ஆஃப் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்து இருக்கிறார்கள். அப்போது திடீரென மெஷின் வெடித்து அருகில் உள்ள கேஸ்களிலும் பரவியுள்ளது. இதனால் அறை முழுவதும் தீ பரவியது. இதில் அலுவலகத்தின் மேற்சுவர் வெடித்து விழுந்துள்ளது.
இந்த இடிபாடுகளில் ஊழியர்கள் சிக்கினர். இந்த தகவல் அறிந்ததும் விரைது தீ அணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பலி ஆகினார். சென்னையில் நள்ளிரவில் நடைபெற்ற இந்த கேஸ் நிறுவன விபத்தால் மணலி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நள்ளிரவில் நடைபெற்ற இந்த விபத்தின் காரணமாக மக்கள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகினர்.
சிலிண்டர் வெடித்ததில், அலுவலக அறை முழுவதும் கரும் புகை முட்டமாக காட்சியளித்தது. இதனால் பலருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. தீ விபத்தை பார்த்த அப்பகுதியினர் தங்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
சென்னையில் நள்ளிரவில் நடந்த தொழிற்சாலை வாயுக்கசிவு சம்பவத்தில் ஒருவர் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
No comments:
Post a Comment