Friday, 7 February 2025

நெல்லையில் எச்சரிக்கப்பட்டும் மறுபடியும் கேரளாமருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டதால் அதிர்ச்சி!

 

திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட ராஜகோபாலபுரம் -சிவந்திபட்டி நான்கு வழிச்சாலை அருகே மறுபடியும் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.
கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவக் கழிவுகள் திருநெல்வேலியின் முக்கூடல் மற்றும் சுத்தமல்லி உள்ளிட்ட பல இடங்களில் கொட்டப்பட்ட விவகாரம் சில வாரங்களுக்கு முன் பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது.                                                     
    தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த விவகாரத்தை விசாரித்து மருத்துவக் கழிவுகளை கேரள அரசு முழுமையாக அகற்ற உத்தரவிட்டுள்ளது அதைத்தொடர்ந்து லாரிகளில் மருத்துவ கழிவுகள் அள்ளி எடுத்துச் செல்லப்பட்டிருந்தன.இந்த வழக்கு தொடர்பாக போலீசார் ஐந்து பேருக்கும் மேற்பட்டோரின் மீது வழக்கு பதிந்து கைதும் செய்திருந்தனர்.இந்த நிலையில் திருநெல்வேலி அருகே ரெட்டியார்பட்டி மதுரை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை ஒட்டி மருத்துவ கழிவுகள் மீண்டும் கொட்டப்பட்டுள்ளது குறித்து தகவல் வந்தது. காலாவதியான மாத்திரை டானிக் உள்ளிட்டவை அதிகமாக அங்கு கொட்டப்பட்டிருந்தன மேலும் அந்த மருத்துவ கழிவுகளை தீயிட்டும் எடுத்துள்ளனர் ஆனால் பாதி அளவுக்கே அந்த மருத்துவ கழிவுகள் இருந்தன பொதுவாக மருத்துவ கழிவுகளை சுகாதாரத் துறை வழிகாட்டுதலின்படி முறைப்படி அகற்ற வேண்டும் பொது இடங்களில் கொட்ட கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் திருநெல்வேலி அருகே மீண்டும் மருத்துவக் கழிவுகளை கொட்டப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சி எதிர்பார்த்து உள்ளது இந்த மருத்துவ கழிவுகளை அகற்றவும் அதைக் கொட்டியவர்களின் தக்க நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
.இந்த நிலையில் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் சுகபுத்திரா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு திருநெல்வேலியில் ராஜகோபாலபுரம். சர்வீஸ் சாலையிலிருந்து சிவத்திப்பட்டி செல்லும் சாலைக்கு முன்புள்ள மண் சாலையில் தனியாருக்கு சொந்தமான காலி மனையில் 325 கிலோ எடையுள்ள காலாவதியான மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டிருந்தது. இது குறித்து தெரிய வந்ததும் மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் அங்கு சென்று இந்த கழிவுகளை அப்புறப்படுத்தி கிருமி நாசினி தெளித்தனர். இந்த மருத்துவ கழிவுகளை கொட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளபெருமாள்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment