பி.எம். ஸ்ரீ திட்டத்தில் இணைய மறுத்ததால் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட இரண்டாயிரத்து 152 கோடி ரூபாயை பிற மாநிலங்களுக்கு மத்திய அரசு பகிர்ந்தளித்துள்ளது. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "தமிழ்நாட்டிற்கு எதிரான மத்திய பாஜக அரசின் அநீதியான அணுகுமுறைக்கு எல்லையே இல்லை" என்று விமர்சித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கல்வியை ஏற்க மறுத்ததால் தமிழ்நாட்டிற்கான நிதியை பறித்ததோடு, தற்போது அதனை பிற மாநிலங்களுக்கு மத்திய அரசு பகிர்ந்தளித்திருப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். இதன்மூலம் தங்களது உரிமைக்காக போராடும் மாணவர்களை மத்திய அரசு தண்டித்துள்ளதாகவும் சாடியுள்ளார்.
No comments:
Post a Comment