பெற்றோரைக் கொண்டாடுவோம் என்ற பெயரில் மாநாடு நடத்த வேண்டும் என்று எந்த பெற்றோரும் கோரிக்கை விடுக்கவில்லை. பெற்றோர்களை சந்திக்க வேண்டும் என்று முதல்-அமைச்சரோ, அமைச்சர்களோ நினைத்தால் பள்ளிகள்தோறும் சென்று பெற்றோரை சந்திக்கலாம்.
அதை விடுத்து 7 மாவட்டங்களைச் சேர்ந்த பெற்றோரை விருத்தாசலத்திற்கு அழைத்து வருவது மனித உரிமை மீறல் ஆகும். மாநாடு நடைபெறும் இடத்திற்கும், திருவண்ணாமலை மாவட்டத்தின் வடகோடி எல்லைக்கும் இடையிலான தொலைவு 170கி.மீ ஆகும். மாநாடு காலை 8.30 மணிக்கு தொடங்கும் என்றும், பெற்றோர்கள் காலை 7 மணிக்குள் வந்து விட வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.காலை 7 மணிக்கு விருத்தாசலம் செல்ல வேண்டும் என்றால் குறைந்தது அதிகாலை 3.00 மணிக்கு பெற்றோர்கள் புறப்பட வேண்டும். இந்தக் கொடுமைகளையெல்லாம் பெற்றோர்பெற்றோர் விரும்பாத நிலையில் அவர்களை கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்வது நியாயமல்ல. பெற்றோரைக் கொண்டாடுவோம் என்ற தலைப்பில் மாநாடு நடத்துவதன் பின்னணியில்புனிதமான நோக்கங்கள் எதுவும் இல்லை.
விரைவில் தேர்தல் வரவிருக்கும் நிலையில் பரப்புரைக்கான வாய்ப்பாகவே இந்த மாநாட்டை ஆளும் திமுக பயன்படுத்திக் கொள்ளப்பார்க்கிறது. அதற்காக ஆசிரியர்களையும், பெற்றோரையும் அலைக்கழிப்பது சரியல்ல. எனவே, விருத்தாசலத்தில் வரும் 22ம் தேதி நடத்தப்படவுள்ள பெற்றோரைக் கொண்டாடுவோம் மாநாட்டை ரத்து செய்ய வேண்டும். அதற்கு பதிலாக வட்ட அளவில் இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொள்ள அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment