Wednesday, 5 February 2025

சென்னையில் 16-வது பழங்குடியின இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சிகள்

சென்னையில் 16-வது பழங்குடியின இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. அதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு கூட்டம் இன்று(PIB Chennai )சென்னை பிஐபி -இல் நடைப்பெற்றது.

எனது இளைய பாரதம் (மை பாரத்), மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், மத்திய உள்துறை அமைச்சகம் ஆகியவை வரும் 07-02-2025-ம் தேதி முதல் 13-02-2025 தேதி வரை சென்னை ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியுடன் இணைந்து 16-வது பழங்குடியினர் இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சியை நடத்த இருக்கிறது.

இந்த ஆண்டின் பழங்குடியின பரிமாற்ற நிகழ்ச்சியில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் இருந்து 44 பங்கேற்பாளர்களும், மத்தியப்பிரதேச மாநிலத்தில பால்கேத் மாவட்டத்திலிருந்து 44 பங்கேற்பாளர்களும், சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள தண்டேவா, கான்கர், நாராயண்பூர், பஸ்தார் ஆகிய மாவட்டங்களில் உள்ள 132 பங்கேற்பாளர்களும் ஆக மொத்தம் 220 பழங்குடி இளைஞர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

இந்நிகழ்ச்சியின்

தொடக்க விழா வருகிற 8-2-2025-ம் தேதி சென்னை ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் தலைமையில் நடைபெறுகிறது. குறிப்பாக இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு நாட்டின் பல தரப்பட்ட கலாச்சார பாரம்பரியங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையும். அவர்களின் கற்றல் திறனையும் வளர்க்க உதவும் என்ற அடிப்படையில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.

2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பழங்குடியினர் எண்ணிக்கை 10.42 மில்லியன் ஆகும். இது நாட்டின் மக்கள் தொகையில் 8.6 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

பொதுவாக பழங்குடியினர் தனித்துவமான கலாச்சாரங்கள் கொண்டவர்களாகவும், பிற சமூகங்களுடன் தொடர்புகொள்ள கூச்சப்படுபவர்களாகவும், பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களாகவும் உள்ளனர். இந்நிலையில் பழங்குடி இளைஞர்கள் நேர்மறையான ஈடுபாட்டுடனும், தக்க கல்வியுடனும் இருக்க வேண்டும் என்பதற்காக பழங்குடியினர் பரிமாற்றத் திட்டங்கள் பெரிதும் உதவியாக இருக்கும்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் பழங்குடி இளைஞர்களின் வளர்ச்சிக்காக நேரு இளைஞர் மையம் பழங்குடி இளைஞர் பரிமாற்றத் திட்டங்களை செயல்படுத்துகிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம் கடந்த 2006ம் ஆண்டு முதல் இதுவரை 15 பழங்குடி இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடைபெற்று உள்ளன.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பழங்குடியினர் இளைஞர்கள் பரிமாற்ற நிகழ்ச்சிகளில் கீழ்கண்ட நிகழ்ச்சி நிரல்படி செயல்பாடுகள் நடைபெற இருக்கிறது.




நிகழ்ச்சியின் நிறைவு விழா 13-ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் திரு அப்பாவு தலைமையில் நடைபெறுகிறது. நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளும் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில இயக்குநர் திரு செந்தில் குமார் தலைமையில் நடைபெறுகிறது.

No comments:

Post a Comment