Friday, 28 February 2025
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா மற்றும் திமுக ஆட்சியின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம்.
Tuesday, 25 February 2025
தற்காலிக பணியாளர்களை உடனே நீக்குங்க : தமிழக அரசுக்கு அதிரடியாக உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்!
அரியலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் கடந்த 1997 ஆம் ஆண்டு கணிப் பொறி உதவியாளராக தினக் கூலி அடிப்படையில் நியமிக்கப்பட்ட சத்யா என்பவர், பணி வரன் முறை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து 12 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஊரக வளர்ச்சித் துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தற்காலிக அடிப்படையில் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என தலைமை செயலாளர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வாரா என்று கேள்வி எழுப்பியிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் 25.2.2025 மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை கூடுதல் தலைமை செயலாளர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் கடந்த 2020ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழக அரசு துறைகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக பணியாளர்களை நீக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ,
தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்தவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். தற்காலிக பணியாளர்களை நீக்கம் செய்தது மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது குறித்து மார்ச் 17ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தனர்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் இந்த உத்தரவால் 2020ம் ஆண்டுக்குப் பின் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட பணியாளர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்
சமத்துவம் இருக்கும் இடத்தை குலைப்பது எங்கள் வேலையல்ல.. காலில் குத்தும் முள்ளைதான் பிடுங்குவோம்..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் திமுகவினர் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தினார்கள். ரயில் நிலைய பெயர் பலகையில் இருந்த ஹிந்தி எழுத்துக்கள் மீது மட்டும் கறுப்பு பெயின்ட் பூசி அழித்துள்ளனர். இதேபோல் திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டையிலும் ரயில் நிலையத்தில் பெயர் பலகையில் கருப்பு மை ஊற்றி சிலர் அழித்தனர்.
இதேபோல் பல்வேறு தபால் நிலையங்களிலும் கருப்பு மை ஊற்றி அழித்தனர். இதனிடையே திமுகவிற்கு பதிலடியாக, எச். ராஜா “500 ரூபாய் நோட்டில் இருக்கும் ஹிந்தியை முதலில் அழியுங்கள்; பார்க்கலாம்!” என்று சவால் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹிந்தியை அழிக்க வேண்டும் என்றால், முதலில் சன் ஷைன் ஸ்கூலுக்கே போக வேண்டும். திமுகவில் உள்ளவர்கள் ஒருவராவது உப்பு போட்டு சாப்பிடுகிறவர் இருந்தால், முதலில் அந்த பள்ளிக்கு செல்லுங்கள். திமுகவில் மொத்தம் 48 சிபிஎஸ்இ பள்ளிகள் உள்ளன. அந்த பள்ளிகளின் பட்டியலை நான் கொடுக்கிறேன். அந்த பள்ளிகளில் ஹிந்தி கற்று கொடுக்கலாமா என்று போராட்டம் நடத்துங்கள்.
முடிந்தால், 500 ரூபாய் நோட்டுகளில் உள்ள இந்திய எழுத்துக்களை அழியுங்கள். நீங்கள் மானங்கெட்டவர்கள்!” இவ்வாறு ஹெச் ராஜா ஆவேசமாக கூறினார்.
இந்நிலையில் ஹெச் ராஜாவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்யைச் சேர்ந்தவரும் மதுரை எம்பியுமான சு வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “500 ரூபாய் நோட்டில் உள்ள இந்தியை அழியுங்கள் பார்ப்போம் என்று சவால் விடுகிறார் ஹெச். ராஜா.. ரூபாய் நோட்டில் 8 ஆவது அட்டவணை மொழிகள் அனைத்தும் உண்டு. சமத்துவம் இருக்கும் இடத்தை குலைப்பது எங்கள் வேலையல்ல.. காலில் குத்தும் முள்ளைதான் பிடுங்குவோம்.. அது தான் அறிவுடமை” இவ்வாறு கூறியுள்ளார்.
Wednesday, 19 February 2025
Tuesday, 18 February 2025
புதுக்கோட்டை மாவட்டம் அரசுப் பள்ளியில், மாணவிகள் 7 பேருக்குப் பாலியல் தொல்லை அளித்த பள்ளி உதவித் தலைமையாசிரியர் கைது-அண்ணாமலைதமிழ்நாடு பாஜக தலைவர்அண்ணாமலை தனது எக்ஸ் தல பதிவில் காட்டம்.
பள்ளிகளில் மாணவ மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்ய, ஆலோசனைக் குழுக்கள் அமைப்பதாகச் சொல்லி மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. எந்தப் பள்ளிகளிலும் இந்தக் குழுக்கள் செயல்பாட்டில் இல்லை என்பதையே, தொடர்ந்து பள்ளி மாணவிகள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாவது காட்டுகிறது. குழந்தைகள் பாதுகாப்புக்கான தேசிய அவசர உதவி எண் 1098க்கு அழைத்ததால் மட்டுமே, தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
பள்ளி செல்லும் நமது பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதில், திமுக அரசு முற்றிலுமாகத் தோல்வி அடைந்து விட்டது. இத்தனை தொடர் குற்றங்களுக்குப் பிறகும், பள்ளி மாணவ, மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனியும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் அமைச்சராகத் தொடரத் தகுதியோ, தார்மீக உரிமையோ இல்லை.
உடனடியாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதவியிலிருந்து, திரு. அன்பில் மகேஷ் விலக வேண்டும். முதலமைச்சர் உடனடியாக, பள்ளிக் கல்வித் துறைக்குத் திறமையான, குழந்தைகள் நலனில் அக்கறை கொண்ட வேறு ஒருவரை அமைச்சராக நியமித்து, பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் அவர்களது பிறந்த தினம் இன்று.
தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் உலகெங்கும் அறியச் செய்த, தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் அவர்களது பிறந்த தினம் இன்று.
பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்தலே தம் வாழ்வின் குறிக்கோளாக கொண்டிருந்த உ.வே.சா., பாரதியாரால் “கும்பமுனி எனத்தோன்றும் சாமிநாதப் புலவன்” என்று பாராட்டப்பட்டார்.
தமிழின் சிறப்பை உலகறியச் செய்து தொன்மையான தமிழ் இலக்கியங்கள் பலவற்றை மீட்டுக் கொடுத்தவர் உ.வே.சா. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏட்டுச்சுவடிகளைச் சேகரித்தஉ.வே.சா. அந்த காலத்தில் சுவடி படிக்கத் தெரிந்தவர் சுவடியை நகல் செய்து புத்தகமாகப் போடும்போது சுவடியில் இருப்பது போன்றே அச்சிட்டனர். ஆனால் உ.வே.சா முன்னுரை, ஆய்வுரை, மேற்கோள் நூல்களின் பட்டியல், எடுத்தாண்ட சுவடிகளின் பட்டியல், நூலாசிரியர் மற்றும் உரையாசிரியர் வரலாறு போன்ற தகவல்களையும் பதிப்பித்து புது புரட்சி ஏற்படுத்தினார். தமிழ் செம்மொழி தகுதி பெற உ.வே.சா. போன்றோரும் காரணமாவர்.
விகடன் பிளஸ் இணைய இதழை முடக்கி - கருத்துச் சுதந்திரத்தை நெரிக்கும் ஒன்றிய அரசை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்கள் சிவில் உரிமைக் கழகம்(பியூசிஎல்) வன்மையாகக் கண்டிக்கிறது.
விகடன் பிளஸ் இணைய இதழை முடக்கி - கருத்துச் சுதந்திரத்தை நெரிக்கும் ஒன்றிய அரசை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்கள் சிவில் உரிமைக் கழகம்(பியூசிஎல்) வன்மையாகக் கண்டிக்கிறது.
அமெரிக்காவில் இருந்து இந்திய சட்டவிரோதக் குடியேறிகள் விலங்கிடப்பட்டு இந்தியாவுக்கு திரும்ப அனுப்பப்பட்ட நிகழ்வின் மீதான தலைமை அமைச்சர் மோடியின் மௌனத்தை சுட்டும் வண்ணம் விகடன் பிளஸ் இணைய இதழின் முகப்பு அட்டையில் 10.02.2025 அன்று கேலிச்சித்திரம் வெளியிடப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு பாசக தலைவர் கே. அண்ணாமலை 15.02.2025 அன்று ஒன்றிய அரசின் தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல். முருகனுக்கு புகார் ஒன்றை அனுப்பினார். இதன் விளைவாக, விகடன் பிளஸ் இணைய இதழ் 15.02.2025 அன்று முடக்கப்பட்டது. இதை தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகமும் உறுதி செய்துள்ளது.
கேலிச் சித்திரங்களின் முன்னோடி கேரளாவைச் சார்ந்த மறைந்த கே.சங்கர். இவர் இந்தியாவின் முதல் தலைமை அமைச்சர் சவகர்லால் நேருவை தொடர்புபடுத்தி கிட்டதட்ட 4000 கேலிச்சித்திரங்கள் வரை தீட்டியதாகச் சொல்லப்படுகிறது. சனநாயக மற்றும் நகைச்சுவை உணர்வு மிக்க நேரு அவர்கள் இவரிடம் 'என்னையும் விட்டு வைக்காதே' என்று கூறினாராம்.
1932- காலக் கட்டத்தில் கார்ட்டூனிஸ்ட் சங்கர் 'இந்துஸ்தான் டைம்ஸ்' ஆங்கில் நாளேட்டில் கேலிசித்திர ஓவியராக பணியாற்றிய போது, அப்போதைய இந்திய வைஸ்ராய் வெலிங்டன் பிரபுவை கேலி செய்து கேலிச்சித்திரங்கள் வரைந்திருக்கிறார். வெலிங்டன் பிரபு சங்கரை தன் மாளிகைக்கு வரவழைத்து அவரை தட்டிக் கொடுத்து பாராட்டி மகிழ்ந்தாராம்.
ஓ.வி.விஜயன், குட்டி மற்றும அபு ஆப்ரகாம் ஆகியோருக்கு சங்கர் வழி காட்டியாகத் திகழ்ந்தார். புகழ் பெற்ற கேலிச் சித்திர ஓவியர் ஆர்.கே. லட்சுமணன் சவகர்லால் நேருவை கேலி செய்து பல கேலிச் சித்திரங்கள் வரைந்திருக்கிறார். விகடன் மதன் 'சிரி- சிந்தி சித்திரங்கள்' மிகவும் கூர்மையானவை என்பது குறிப்பிடத்தக்கது. 1975 டிசம்பரில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அகமது குளியல் தொட்டியில் இருந்தபடியே 'நெருக்கடி நிலைக்கு' கையெழுத்திடும் அபு ஆப்ரகாமின் கேலிச்சித்திரம் இன்றும் நினைவில் நிற்பது.
15.08.2017 தேதியிட்ட "மலையாள மனோரமா நாளேட்டில் வந்த கேலிச்சித்திர வழக்கில் (மாமன் வர்க்கீஸ் எதிர் கேரள அரசு 24.07.2014) கேலிச் சித்திர வரைவோரும் பத்திரிக்கை மற்றும் ஊடகத்தின் இன்றியமையாத மற்றும் ஒருங்கிணைந்த உட்கூறாவர். எனவே அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 19 (1) (a) வழங்கும் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திர உரிமை அவர்களுக்கும் உண்டு என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி மலையாள மனோரமாவுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது. தமிழ்நாடு கார்ட்டுனிஸ்ட் பாலா மீது போடப்பட்ட வழக்கினையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. (*பாலமுருகன் (எ) பாலா எதிர் காவல் ஆய்வாளர் 19.04.2021).
புகழ் பெற்ற ஓவியர் எம் ஃஎப் ஹூசைன் மீதான வழக்கில் (எம் ஃஎப் ஹூசைன் எதிர் ராஜ்குமார் பாண்டே(09.05.2008) உச்சநீதிமன்றம் கருத்து சுதந்திரத்தை உயர்த்திப்பிடித்து தீர்ப்பு வழங்கியது.
எனவே விகடன் இணையதளத்தை ஒன்றிய அரசு முடக்கியிருப்பது முற்றிலும் சனநாயகததிற்கு எதிரானது. பத்திரிக்கை உள்ளிட்ட ஊடகத்துறை சனநாயகத்தின் நான்காவது தூணாகும். அதைச் சிதைக்கும் வண்ணம் விகடன் இணையதளத்தை முடக்கியிருப்பது மக்கள் நாயகத்தின் மாண்பை சிதைக்கின்ற ஃபாசிச செயலாகும்.
இதை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL) வன்மையாகக் கண்டிக்கிறது. எனவே ஒன்றிய அரசு
இம் முடக்கத்தை உடனே நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது.
புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் அறிவிப்பு!
Sunday, 16 February 2025
நடிகர் விஜய்யின் திரைப்படம் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் கூட வெளியாகிறது l. மாணவர்கள் மூன்று மொழிகளை கற்றுக் கொள்ளக் கூடாதா?- தமிழிசை சௌந்தரராஜன், "
நடிகர் விஜய்யின் திரைப்படம் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் கூட வெளியாகிறது. உங்கள் வியாபாரத்திற்கு மட்டும் மும்மொழிக் கொள்கை தேவை. ஆனால் மாணவர்கள் மூன்று மொழிகளை கற்றுக் கொள்ளக் கூடாதா? குழந்தைகளின் வருங்காலத்துக்கு பலமொழிக்கொள்கை தேவைப்படும்.
மாறி வரும் சவால் நிறைந்த உலகில் கூடுதல் மொழியை குழந்தைகள் படிக்கிறோம் என கூறுகின்றனர். உங்களுக்கு என்ன பிரச்சினை? திமுகவுக்கும் திராவிடத்தை சார்ந்தவர்களுக்கு படிப்பு என்றாலே பிரச்சினைதான். சாமானிய மக்களை படியுங்கள் என்று கூறுவது ஆணவமா?" என தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
ஜனநாயகத்தின் நான்காவது தூணான இதழியல் துறைக்கு உரியதான பத்திரிகை சுதந்திர தர்மம் காக்கப்பட வேண்டும். -விஜய் தமிழக வெற்றிக் கழகம்
பிரதமர் மோடியின் கையால் செங்கோலை சட்டசபையில் வைத்த பின்பு தான் சட்டசபையில் நுழைவோம். இது எங்களது சபதம் - தமிழிசை
சென்னை அம்பத்தூரில் பாஜக சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அப்போது சென்னை மேற்கு மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பாஸ்கரை பாஜக தமிழ்நாடு முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் பேசிய தமிழிசை செளந்தரராஜன், "இரண்டு மாநில முதல்வர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு தான் தற்போது இங்கு வந்துள்ளேன். கட்டாயம் தமிழகத்திலும் பாஜக ஆட்சியைப் பிடிக்கும். பாஜகவின் செங்கோல் தமிழக சட்டசபையை அலங்கரிக்கும். பிரதமர் மோடியின் கையால் செங்கோலை சட்டசபையில் வைத்த பின்பு தான் சட்டசபையில் நுழைவோம். இது எங்களது சபதம். தமிழகத்தில் வெற்றி வாய்ப்பு குறித்த கருத்து கணிப்பு விளம்பரத்தால் வருவது. இந்திய அளவில் மோடி மீண்டும் வருவார் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாக நடக்க கூட முடியவில்லை. அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. 2026 தேர்தல் பாஜகவிற்கானது. ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி நீதிமன்ற படிகட்டுகளை ஏறி வருகிறார்கள். தமிழ்நாட்டில் பாவிகள் ஆளும்போது காவிகள் ஆளக்கூடாதா?
தர்மேந்திர பிரதான் மூன்றாவது மொழி இந்தி என்று கூறவில்லை, இந்தி என்று நீங்கள் தான் திணிக்கிறீர்கள். நாங்கள் திணிக்கவில்லை. இன்னொரு மொழியை கற்றுக்கொண்டால் வளர்ச்சி அடையாளம் என்று கூறினார். தமிழக அரசை பிளாக்மெயில் செய்யவில்லை, தனியார் பள்ளிகளில் கடைபிடிக்கும் மும்மொழிக் கொள்கையை எதற்காக அரசுப் பள்ளிகளில் கடைபிடிப்பதில்லை என சொல்லுங்கள்? தாய்மொழி தமிழைதான் பிரதானமாக கற்பிப்போம் என சொல்கிறோம். அதற்கு உங்கள் பதில் என்ன? தமிழை உங்களால் பிழையின்றி பேச முடியுமா? கருத்து சுதந்திரத்தை பற்றி திமுக பேசுகிறது. தங்களுக்கு எதிராகச் செயல்பட்டார்கள் என்பதற்காக மதுரையில் பத்திரிகை அலுவலகத்தை எரித்தவர்களே நீங்கள்தான்" என விமர்சித்துள்ளார்.
மணலியில் மாநகராட்சிக்கு சொந்தமான பயோ கியாஸ் நிறுவனத்தில் நள்ளிரவில் வாயுக்கசிவு.
சென்னையில் உள்ள மணலியில் மாநகராட்சிக்கு சொந்தமான பயோ கியாஸ் நிறுவனம் உள்ளது. சென்னை மாநகராட்சியின் 5 மண்டலங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளில் திடக்ழிவுகள் மூலம் பயோ கேஸ் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. மணலி சின்ன சேக்காடு அருகே உள்ள இந்த பயோ கியாஸ் நிறுவனத்தில் நேற்று நள்ளிரவு திடீரென்று வாயுக்கசிவு ஏற்பட்டது.
சுனாமி குடியிருப்பை சேர்ந்த பாஸ்கரன் மற்றும் சுதாகர் ஆகிய இருவரும் மெஷின் ஆபரேட்டர்களாக அங்கு பணியாற்றி வருகிறார்கள். நேற்று இரவு பணி முடிந்து அவர்கள் வீட்டிற்கு கிளம்பும்போது மெஷின்களை ஆஃப் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்து இருக்கிறார்கள். அப்போது திடீரென மெஷின் வெடித்து அருகில் உள்ள கேஸ்களிலும் பரவியுள்ளது. இதனால் அறை முழுவதும் தீ பரவியது. இதில் அலுவலகத்தின் மேற்சுவர் வெடித்து விழுந்துள்ளது.
இந்த இடிபாடுகளில் ஊழியர்கள் சிக்கினர். இந்த தகவல் அறிந்ததும் விரைது தீ அணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பலி ஆகினார். சென்னையில் நள்ளிரவில் நடைபெற்ற இந்த கேஸ் நிறுவன விபத்தால் மணலி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நள்ளிரவில் நடைபெற்ற இந்த விபத்தின் காரணமாக மக்கள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகினர்.
சிலிண்டர் வெடித்ததில், அலுவலக அறை முழுவதும் கரும் புகை முட்டமாக காட்சியளித்தது. இதனால் பலருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. தீ விபத்தை பார்த்த அப்பகுதியினர் தங்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
சென்னையில் நள்ளிரவில் நடந்த தொழிற்சாலை வாயுக்கசிவு சம்பவத்தில் ஒருவர் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Saturday, 15 February 2025
*விகடன் இணையதளம் முடக்கம்..**தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் கடும் கண்டனம்*
ஜெயலலிதாவின் 1000 ஏக்கர் நிலம் , 27 கிலோ நகைகள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு .
1991-96ல் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. புகார் தொடர்பாக ஜெயலலிதா வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.சோதனையின் போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடி சொத்து வாங்கி குவித்ததாக வழக்கு பதிவுசெய்தனர்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள், சொத்து ஆவணங்கள், பெங்களூருவில் உள்ள அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்தன. தமிழ்நாடு முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் நகைகள், அசையா சொத்துகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் அண்ணன் மகன் தீபக் மனு தாக்கல் செய்த நிலையில், அந்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தீபா மற்றும் தீபக் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஜெயலலிதாவின் நகைகள், சொத்துகள் ஆகியவை தமிழ்நாடு அரசுக்கே சொந்தமானவை என்ற சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்து கர்நாடக உயர்நீதிமன்றமும் அந்த மனுவை தள்ளுபடி செய்தது.
ஜெயலலிதாவின் நகைகளை ஏலம் விடக் கோரி ராமமூர்த்தி என்பவர் மனுதாக்கல் செய்தார். அப்போது ஜெயலலிதாவின் நகைகளை கர்நாடகா அரசு ஏலம் விடுவதற்கு பதில் தமிழக அரசிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.இதற்காக தமிழக அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும், நகைகளை அவர்கள் பெற்றுச் செல்வதை பதிவு செய்ய வீடியோ, போட்டோகிராபர்கள் அனுப்ப வேண்டும் உள்ளிட்ட நீதிபதிகள் விதிமுறைகளை வகுத்திருந்தனர்.
கர்நாடக அரசிடம் இருந்த ஆவணங்களை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டதை, கர்நாடக உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் நகைகள், சொத்து ஆவணங்களைப் பெற தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புப் காவல்துறையினர் நேற்று கர்நாடகா சென்றனர். நீதிபதி மோகன் முன்னிலையில் ஒவ்வொரு பெட்டியாகத் திறந்து, நகைகளை எண்ணி, மதிப்பீடு செய்யும் பணி நடைபெற்றது. தமிழ்நாடு உள்துறை இணை செயலர் ஹனி மேரி, லஞ்ச ஒழிப்பு எஸ்.பி., விமலா ஆகியோர் நகைகளைச் சரி பார்த்தனர்.ஜெயலலிதாவின் தங்க நகைகள் பலத்த பாதுகாப்புடன் கர்நாடகாவில் இருந்து தமிழ்நாடு எடுத்து வரப்படுகின்றன. அதனை தொடர்ந்து ஜெயலலிதாவின் 27 கிலோ தங்க நகைகள், 1000 ஏக்கர் நிலம் நீதிபதி மோகன் முன்னிலையில் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைத்தனர்
Friday, 14 February 2025
அரசு சார்பில் ஏன் இழப்பீடு அறிவிக்கவில்லை? இந்தக் கையாலாகாத திமுக அரசின் சுகாதாரத்துறை ஒழுங்காகச் செயல்படுவதற்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பறிகொடுக்க வேண்டும்?. அண்ணாமலை
தொடர்ந்து தமிழகத்தில் அரசு மருத்துவமனையின் அவல நிலை சமுக வலைத்தளங்களில் அதிகமாக வந்துகொண்டிரேக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகர் கஞ்சா கருப்பு தனது வேதனையை பதிவு செய்து இருந்தார். இந்நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர் இல்லாத நிலையில் அங்கிருந்த உதவியாளர் ஒருவர் ஊசி போட்டுதால் தென்காசியை சேர்ந்த நான்கு வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்திருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளித்தது. பலரும் இதனை தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றனர்.
இதைப் பற்றி அண்ணாமலை சமூக வலைத்தளத்தில் தனது எக்ஸ் பக்கத்தில் தமிழக அரசை., சுகாதாரத் துறையை கேள்வி கேட்டு இருந்தார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழக அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் எண்ணிலடங்காமல் அதிகரித்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை, போதிய மருத்துவர்கள் இல்லாததால் ஏற்பட்டுள்ளன. நான்கு ஆண்டுகளாக, மருத்துவர்களை நியமிக்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இவற்றில் பெரும்பாலானவை, போதிய மருத்துவர்கள் இல்லாததால் ஏற்பட்டுள்ளன. நான்கு ஆண்டுகளாக, மருத்துவர்களை நியமிக்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர்? மருத்துவர்கள் நியமனம் எதனால் தாமதமாகிறது? எத்தனை சிறு குழந்தைகளைத் தொடர்ந்து பறி கொடுத்து வருகிறோம்?
இதோ, அதோ என்று, நான்கு ஆண்டுகளில் தமிழக மருத்துவத் துறையை நாசமாக்கிவிட்டு, கொஞ்சம் கூட மனசாட்சி இன்றிப் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கக் கூச்சமாக இல்லையா அமைச்சருக்கு? இத்தனை கையாலாகாத அமைச்சரை, மிக முக்கியமான சுகாதாரத் துறையில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு. ஸ்டாலினுக்கு, தமிழக அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் தொடர் உயிரிழப்புகள் தெரியுமா தெரியாதா? திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த சிறுவன் குடும்பத்தினருக்கு, திமுக கட்சியிலிருந்து உதவி செய்யப் போவதாகக் கூறியிருப்பது, திமுக அரசின் தோல்வியை மூடி மறைக்கவா? திமுக கொடுக்கும் பணம், குழந்தையின் உயிருக்கு ஈடாகிவிடுமா? தமிழக அரசு ஏன் பொறுப்பேற்கவில்லை? அரசு சார்பில் ஏன் இழப்பீடு அறிவிக்கவில்லை? இந்தக் கையாலாகாத திமுக அரசின் சுகாதாரத்துறை ஒழுங்காகச் செயல்படுவதற்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பறிகொடுக்க வேண்டும்? எனஅண்ணாமலை தனது x வலைதளத்தில் கோபத்தோடு பதிவு செய்திருந்தார்.
த.வெ.க. தலைவர் விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு- உள்துறை அமைச்சகம் உத்தரவு’
விஜய் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை சந்தித்துள்ளார். அவருடைய அரசியல் நகர்வுகள் அவர் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தீவிரம் கொண்டுள்ளதைக் காட்டுகிறது.
வரும் ஏப்ரல், மே மாதங்களில் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், விஜய்க்கு ‘ஒய்’ (Y) பிரிவு பாதுகாப்பு அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்தப் பாதுகாப்புப் பிரிவினர் தமிழகத்துக்குள் விஜய் எங்கு சென்றாலும் அவருடன் பாதுகாப்புக்காகச் செல்வார்கள் எனக் கூறப்படுகிறது.
பெற்றோரைக் கொண்டாடுவோம் என்ற பெயரில் பெற்றோரை அலைக்கழிப்பதா?- ராமதாஸ் கண்டனம்.
பெற்றோரைக் கொண்டாடுவோம் என்ற பெயரில் மாநாடு நடத்த வேண்டும் என்று எந்த பெற்றோரும் கோரிக்கை விடுக்கவில்லை. பெற்றோர்களை சந்திக்க வேண்டும் என்று முதல்-அமைச்சரோ, அமைச்சர்களோ நினைத்தால் பள்ளிகள்தோறும் சென்று பெற்றோரை சந்திக்கலாம்.
அதை விடுத்து 7 மாவட்டங்களைச் சேர்ந்த பெற்றோரை விருத்தாசலத்திற்கு அழைத்து வருவது மனித உரிமை மீறல் ஆகும். மாநாடு நடைபெறும் இடத்திற்கும், திருவண்ணாமலை மாவட்டத்தின் வடகோடி எல்லைக்கும் இடையிலான தொலைவு 170கி.மீ ஆகும். மாநாடு காலை 8.30 மணிக்கு தொடங்கும் என்றும், பெற்றோர்கள் காலை 7 மணிக்குள் வந்து விட வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.காலை 7 மணிக்கு விருத்தாசலம் செல்ல வேண்டும் என்றால் குறைந்தது அதிகாலை 3.00 மணிக்கு பெற்றோர்கள் புறப்பட வேண்டும். இந்தக் கொடுமைகளையெல்லாம் பெற்றோர்பெற்றோர் விரும்பாத நிலையில் அவர்களை கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்வது நியாயமல்ல. பெற்றோரைக் கொண்டாடுவோம் என்ற தலைப்பில் மாநாடு நடத்துவதன் பின்னணியில்புனிதமான நோக்கங்கள் எதுவும் இல்லை.
விரைவில் தேர்தல் வரவிருக்கும் நிலையில் பரப்புரைக்கான வாய்ப்பாகவே இந்த மாநாட்டை ஆளும் திமுக பயன்படுத்திக் கொள்ளப்பார்க்கிறது. அதற்காக ஆசிரியர்களையும், பெற்றோரையும் அலைக்கழிப்பது சரியல்ல. எனவே, விருத்தாசலத்தில் வரும் 22ம் தேதி நடத்தப்படவுள்ள பெற்றோரைக் கொண்டாடுவோம் மாநாட்டை ரத்து செய்ய வேண்டும். அதற்கு பதிலாக வட்ட அளவில் இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொள்ள அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
Thursday, 13 February 2025
திமுக தலைமை ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் அடங்கியுள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கு மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மாற்றம்: பொறுப்பாளர்கள் நியமனபட்டியல் வெளியிடு
திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல் வருமாறு.ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் அடங்கியுள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம
▪️ ஈரோடு தெற்கு - அமைச்சர் முத்துசாமி
▪️ ஈரோடு வடக்கு - என்.நல்லசிவம்
▪️ ஈரோடு மத்தி - தோப்பு வெங்கடாசலம்
▪️ திருப்பூர் கிழக்கு - க.செல்வராஜ்
▪️ திருப்பூர் மேற்கு - அமைச்சர் சாமிநாதன்
▪️ திருப்பூர் வடக்கு - என்.தினேஷ் குமார்
▪️ திருப்பூர் தெற்கு - இல. பத்மநாபன்
▪️ விழுப்புரம் வடக்கு - செஞ்சி மஸ்தான்
▪️ விழுப்புரம் தெற்கு - கெளதம சிகாமணி
▪️ விழுப்புரம் மத்தி - ஆர்.லட்சுமணன்
▪️ மதுரை வடக்கு - அமைச்சர் மூர்த்தி
▪️ மதுரை மாநகர் - கோ.தளபதி
▪️ தஞ்சாவூர் தெற்கு - பழனிவேல்
▪️ திருநெல்வேலி மத்தி - அப்துல் வகாப்
▪️ திருவள்ளூர் கிழக்கு - எம்.எஸ்.கே. ரமேஷ் ராஜ்
▪️ நீலகிரி - கே.எம்.ராஜு
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளராகப் பணியாற்றி வந்த க.அண்ணாதுரை எம்எல்ஏ. விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதில்,
தாமரைக்குடிக்காட்டை சேர்ந்த பழனிவேல் நியமிக்கப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கோத்தகிரி, நெடுகுளாவைச் சேர்ந்த கே.எம்.ராஜு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளராகப் பணியாற்றி வரும் டி.பி.எம்.மைதீன்கானை விடுவித்து, அவருக்குப் பதில், மு.அப்துல் வகாப் எம்எல்ஏ பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் டி.ஜெ.எஸ்.கோவிந்தராஜன் எம்எல்ஏ அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்
திமுகவில் மேற்கொள்ளப்பட்ட இந்த மாற்றங்களை பொறுத்தவரை, ஏற்கெனவே அதிமுகவில் இருந்து வந்த தோப்பு வெங்கடாசலத்துக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
விழுப்புரத்திலும் அதிமுகவில் இருந்து வந்த லட்சுமணனுக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலாளர் பதவியை இழந்த செஞ்சி மஸ்தான், திருநெல்வேலி மத்திய மாவட்டத்தில் அப்துல் வஹாப் ஆகியோருக்கு பிரதிநிதித்துவ அடிப்படையில் பதவி வழங்கப்பட்டுள்ளது.
நீலகிரியில் படுகர் சமூகத்துக்கு வாய்ப்பளிக்கும் வகையில், கே.எம்.ராஜுவுக்கும், இளைஞர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் திருப்பூரில் மேயர் தினேஷுக்கும், ஆதிதிராவிடர் சமூகத்துக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் திருவள்ளூரில் ரமேஷ்ராஜுக்கும், தஞ்சாவூரில் வெள்ளாளர் சமூகத்தைச் சேர்ந்த பழனிவேலுவுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
. இத்தகவல் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை "ஆட்சி" என்று சொல்வதற்கே திரு.ஸ்டாலின்வெட்கப்பட வேண்டும்.-எடப்பாடி பழனிசாமி
சென்னையில் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும்,
திருப்பத்தூர் மாவட்டத்தில் திமுக கவுன்சிலர் மகேந்திரன் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், தூத்துக்குடியில் பள்ளி மாணவி சமையல் பணியாளரால் பாலியல் தொலைக்கு ஆளானதாகவும்,
தர்மபுரி அருகே அரசுப்பள்ளியில் மாணவிகளுக்கு கணித ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்ததாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. டாலின் மாடல் திமுக ஆட்சியில், பாலியல் அத்துமீறல்கள் எல்லா நிலைகளிலும் அதிகரித்து வருவது மிகுந்த வருத்தத்திற்கும் கடும் கண்டத்திற்கும் உரியது.
அதிலும், வேலியே பயிரை மேய்ந்தாற்போல், மாணவிகள் ஆசிரியரால் பாலியல் தொல்லைக்கு ஆளாவதும், பாலியல் குற்றங்களை ஒடுக்க வேண்டிய காவல்துறையிலேயே ஒரு ஐ.பி.எஸ். அதிகாரியால் பெண் காவலர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகியிருப்பதும் வெட்கக்கேடானது.
தான் நடத்தும் அலங்கோலத்தை புகழ்வது மட்டுமல்ல; இதை "ஆட்சி" என்று சொல்வதற்கே திரு. ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்.நான் எதற்கு "SayYesToWomenSafety&AIADMK"
என்ற பிரச்சாரத்தை துவக்கியுள்ளேன் என்பதை இன்றைய செய்திகளே தெளிவாக்கிவிட்டன. இந்த ஆட்சி முடிவுக்கு வந்து, மீண்டும் அஇஅதிமுக
ஆட்சி அமைவதே, தமிழ்நாடு மீண்டும் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக மாறுவதற்கு ஒரே வழி! மேற்குறிப்பிட்டுள்ள பாலியல் வன்கொடுமை குறித்த செய்திகளில் தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
Wednesday, 12 February 2025
தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் கோரிக்கை..!
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்சார்பாக தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது..!
விவரம்
தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் பத்திரிகையாளர் அங்கீகார அட்டை (Accreditation Card) நடுத்தரம் மற்றும் சிறு குறு நாளிதழ்களுக்கு புதுப்பித்தல் / புதியது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பல வருடங்களாக முறையாக பத்திரிகை நடத்தி அங்கீகார அட்டை பெற்று வந்தவர்களுக்கு இந்த ஆண்டு திடீர் என அடையாள அட்டையை நிறுத்தியதால் தமிழகம் முழுவதிலும் ஆயிரக்கணக்கான பத்திரிகையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பத்திரிகையாளர் அங்கீகார அட்டை (Accreditation Card) இந்த (2025) ஆண்டு பெரிய பத்திரிகைகள் மற்றும் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
பெரிய பத்திரிகை, முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் கார்பரேட் நிறுவனங்கள் மட்டுமே பத்திரிகை மற்றும் ஊடகத்துறையில் இருக்க வேண்டும். சிறு குறு பத்திரிகை நிறுவனங்களை துறையில் இருந்து அகற்றும் வகையில் பத்திரிகையாளர் அங்கீகார அட்டை குழுவினர் (Accreditation Committee) செயல்பட்டு வருவது வருத்தமளிக்கிறது. பாகுபாடு, பாரபட்சம் பார்க்காமல் அனைவரையும் சமமாக நடத்திட வேண்டுகிறோம்.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் தினசரி 10 ஆயிரம் பிரதிகள் அச்சடிக்க வேண்டும் என்ற நடைமுறையில் சாத்தியமில்லாத விதியை காரணம் காட்டி அங்கீகார அட்டையை நிறுத்தி வைத்துள்ளனர். அச்சு ஊடகத்தின் இன்றைய நிலை என்ன? சிறு குறு பத்திரிகைகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றி எதுவுமே தெரியாத நபர்களை கொண்ட பத்திரிகையாளர் அங்கீகார குழுவின் (Accreditation Committee) செயல்பாடு எப்படி சரியானதாக இருக்கும்? அங்கீகார அட்டை வழங்குவதில் பாரபட்சம் காட்டி வரும் செய்தித்துறை மீது பத்திரிகையாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
நடுத்தரம் மற்றும் சிறு குறு பத்திரிகைகளுக்கு பெரிய விளம்பரம் மற்றும் விற்பனையோ இருப்பது இல்லை. ஆனாலும் பெரும் சிரமத்திலும் குறைந்த எண்ணிக்கையில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. அச்சடிக்கும் எண்ணிக்கையை பார்க்காமல் தொடர்ந்து வெளிவரும் தன்மையை அறிந்து அனைவருக்கும் அரசு அடையாள அட்டை உடனடியாக வழங்கிட வேண்டுகிறோம்.
மாண்புமிகு தமிழக முதலைமைச்சர் அவர்கள் மற்றும் செய்தித்துறை அமைச்சர் இவ்விவகாரத்தில் தனி கவனம் செலுத்தி விண்ணப்பித்த அனைவருக்கும் அரசு அடையாள அட்டையை வழங்கிட உத்தரவிடுமாறு தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் கேட்டுக் கொள்கிறது.
: இவ்வாறு அதில்தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் மாநிலத் தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்
Tuesday, 11 February 2025
தேர்வுகள் என்ற போர்க்களத்திற்கு அப்பால் மாணவ செல்வங்கள் : தர்மேந்திர பிரதான் -மத்திய கல்வி அமைச்சர்
அரசு பொதுத்தேர்வு எழுதப்போகும் பள்ளி மாணவ செல்வங்களை பிரதமர் நேற்று டெல்லியில் சந்தித்து உரையாடினார் அதனைத் தொடர்ந்து தர்மேந்திர பிரதாப் மத்திய கல்வி அமைச்சர் தனது அந்த மாணவர்கள் தைரியமாக தேர்வினை எழுத வேண்டும். இந்த அரசும் எப்படி மாணவர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. என்னென்ன செய்து வருகிறது என்பதனை விளக்கி.கட்டுரையாக இதனை பதிவு செய்கிறார். அதனை பார்ப்போம்.
இயற்கை, அதன் எல்லையற்ற ஞானத்தில், ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்துவமான அடையாளத்தை வழங்கியுள்ளது. நமது கைரேகை முதல் கருவிழி வரை, நமது உணர்வுகள் முதல் எண்ணங்கள் வரை, நமது திறமைகள் முதல் சாதனைகள் வரை பலவும் தனித்துவமானவை. மனித தனித்துவம் பற்றிய இந்த ஆழமான உண்மை மிக முக்கிய அம்சமாகும். நமது கல்வி முறை இந்த தனித்துவத்தை பிரதிபலிக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் சில உள்ளார்ந்த திறமைகள் உள்ளன. சிலர் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களாகவும், மற்றவர்கள் படைப்பாற்றல் மிக்கவர்களாகவும், இன்னும் சிலர் விளையாட்டில் திறமையுடனும் உள்ளனர். இந்த தனித்துவத்தை பிரதிபலிக்கும் வகையில், "கல்வி என்பது மனிதனிடம் ஏற்கனவே இருக்கும் பரிபூரணத்தின் வெளிப்பாடு" என்று சுவாமி விவேகானந்தர் கூறினார்,
ஒரு குழந்தையின் இயல்பான திறமையை வெளிக்கொணர்வதும், அவர்கள் விரும்பும் கல்வியிலும் கூடுதல் பாடத்திட்ட முயற்சிகளிலும் ஆக்கப்பூர்வமாக அவர்களை ஈடுபடுத்துவதும் நமது கல்வி நிறுவனங்களின் முன் உள்ள கடுமையான சவால்களாக உள்ளன. கல்வியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் என்ற வகையில், ஒரு குழந்தையின் தனித்துவமான திறமையை வளர்ப்பதே எங்கள் பங்கு. புதிய தேசிய கல்விக் கொள்கை -2020, நாம் எவ்வாறு திறமையை வரையறுத்து வளர்க்கிறோம் என்பதில் ஒரு முன்னுதாரண மாற்றத்தைக் ஏற்படுத்தியுள்ளது. நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் ஒவ்வொரு குழந்தையிடமும் இருக்கும் தனித்துவத்தை உண்மையாக வெளிக் கொண்டுவரக் கூடிய ஒரு தத்துவ அம்சம் இது.
ஒரு குழந்தையின் கல்விப் பயணம் எப்போதும் உற்சாகமாக இருக்க வேண்டும் என்பதே நமது பிரதமரின் தொலைநோக்குத் தலைமையின் குறிக்கோளாகும். படிப்பின் போதோ அல்லது தேர்வின் போதோ எந்த மன அழுத்தமும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் கல்வியில் ஆரோக்கியமான சீர்திருத்தங்களை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். அடிப்படைக் கற்றல் முதல் ஆராய்ச்சியின் மிக உயர்ந்த எல்லைகள் வரை நமது கல்விச் சீர்திருத்தங்களுக்கு இந்தப் பார்வை மையமாக உள்ளது.
புதிய கல்விக் கொள்கையின் புதுமையான அணுகுமுறைகள் ஆரம்பக் கல்வியில் புரட்சியை ஏற்படுத்துகின்றன. கற்றலை ஒரு சுமையாக இல்லாமல் மகிழ்ச்சியான பணியாக ஆக்குகின்றன. ஒவ்வொரு குழந்தையும் தனது இயல்பான திறமைக்கு ஏற்ப மலர்கிறது என்பதை நமது புதிய கல்வி முறை அங்கீகரிக்கிறது.
அகாடமிக் பேங்க் ஆஃப் கிரெடிட் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் எங்கள் கொள்கை, மற்றொரு புதுமையான முன்னோக்கிய படியை பிரதிபலிக்கிறது. வாழ்க்கையின் பாதை எப்போதும் நேரியலாக இருக்காது. கற்றல் பல்வேறு சூழ்நிலைகளில் மாறுபட்ட வேகங்களில் நிகழலாம் என்பதை இது அங்கீகரிக்கிறது. கற்பவர்கள் ஒரு உணர்ச்சிகரமான ஆர்வத்தைத் தொடரும்போது, நடைமுறை அனுபவத்தைப் பெறும்போது அல்லது தங்கள் குடும்பத்தை ஆதரிப்பதால் முறையான கல்வியை நிறுத்தலாம். அவர்கள் முறையான கல்விக்குத் திரும்பும்போது, அவர்களின் அனுபவங்களும் சாதனைகளும் கைகொடுக்கப்படுகின்றன. மேலும் இவை மதிப்பிடப்படுகின்றன. அவை அவர்களின் கல்விப் பதிவில் இணைக்கப்படுகின்றன. இந்த தகவமைப்பு, கற்றலுக்கான கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என்பதை எடுத்துக் காட்டுகிறது. மக்களை தங்கள் வாழ்க்கையின் எந்த நேரத்திலும் கற்றல் சூழல் அமைப்புக்கு மீண்டும் கொண்டு வருகிறது.
நமது இளைஞர்களின் மன நலனுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வகையில், முழுமையான வளர்ச்சியை தேர்வுகள் மறைக்காத ஒரு கலாச்சாரத்தை வளர்ப்பதில் அரசு உறுதிபூண்டுள்ளது. இந்த முக்கியமான சவாலை அங்கீகரித்து, தேர்வு தொடர்பான மன அழுத்தத்தை சமாளிக்க உதவுவதை எங்கள் அரசு தேசிய முன்னுரிமையாக கொண்டுள்ளது. மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்கள் ஆகியோர் மதிப்பெண்களை எவ்வாறு அணுக வேண்டும் என்பதை மாற்றுவதற்கான எங்களது உறுதிப்பாட்டை பிரதமரின் பரீட்சைக்கு பயமேன் ("பரிக்ஷா பே சர்ச்சா") என்ற தேர்வு குறித்த கலந்துரையாடல் முன்முயற்சி பிரதிபலிக்கிறது. மாணவர்கள், பெற்றோர், பாதுகாவலர்களுடனான பிரதமரின் கலந்துரையாடல், தேர்வு தொடர்பான கவலையை தேசிய விவாதமாக மாற்றியுள்ளது. தேர்வுகள் குறித்த கவலையைத் தணிக்க பிரதமர் பல ஆண்டுகளாக முயற்சித்துள்ளார். அந்தக் கவலை மனதில் தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. பிரதமரின் நடைமுறை குறிப்புகள், அவரது சொந்த வாழ்க்கை, அனுபவங்களிலிருந்து பெறப்பட்டவை. அவை தேர்வுக்குச் செல்பவர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இது அவர்களுக்கு மன அழுத்தம் இல்லாத உகந்த தேர்வு செயல்திறனை உறுதி செய்கிறது. உண்மையான தலைமைக்கு ஒரு எடுத்துக்காட்டாக பிரதமர் திகழ்கிறார். தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு எதிர்கால தலைமுறையை வளர்ப்பதற்கான ஒரு தொலைநோக்கு தலைவரின் அர்ப்பணிப்பை நாம் காண்கிறோம்.
இந்த மாற்றத்திற்கு பெற்றோர்களும் சிவில் சமூகமும் மையமாக உள்ளன. மனநலம், ஆதரவான கற்றல் சூழல்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதில் பரீக்ஷா பே சர்ச்சா கலந்துரையாடல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 10, 12-ம் வகுப்பு மட்டுமல்லாமல், நமது ஒட்டுமொத்த கல்வி சூழலிலும் தேர்வுகளால் ஏற்படும் அழுத்தம் அகற்றப்பட வேண்டும்.
சமூகங்கள், கல்வியாளர்கள், குடும்பங்கள் ஒன்றிணைந்து மாணவர்கள் செழிக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும்போது, வெற்றி ஏற்படுகிறது. வகுப்பறை முதல் விளையாட்டு மைதானம் வரை, தொழிற்பயிற்சி மையங்கள் முதல் ஆராய்ச்சி ஆய்வகங்கள் வரை, பல்வேறு திறமையாளர்கள் தங்கள் திறன்களைக் கண்டறிந்து செழிப்பதற்கான இடங்களை நாம் உருவாக்க வேண்டும். வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி நாம் வேகமாக முன்னேறி வரும் நிலையில், நமது கல்வி முறை தேசிய மாற்றத்திற்கான முக்கிய அடித்தளமாக நிற்கிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் சாதிக்க தனது தனித்துவமான பாதையைக் கண்டறிய உரிமை உண்டு என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். பலதரப்பட்ட திறமைகளை வளர்க்கும்போது, நமது சமூகத்தின் கட்டமைப்பை வலுப்படுத்தி, அனைத்து துறைகளிலும் நமது தேசத்தின் திறன்களை மேம்படுத்துகிறோம்.
இன்று, நமது மகத்தான தேசத்தின் ஒவ்வொரு பெற்றோர், ஆசிரியர், குடிமக்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். கல்வியின் மாற்றம் என்பது வெறுமனே ஒரு அரசின் முயற்சி மட்டுமல்ல. இது நமது கூட்டு அர்ப்பணிப்புடன் கூடிய ஒரு தேசிய இயக்கமாகும்.
நம் குழந்தைகள்தான் நமது எதிர்காலம். அவர்கள் தங்கள் தனித்துவமான திறமைகளால் பிரகாசித்து, நாட்டிற்குப் பெருமை சேர்ப்பார்கள். ஒளிமயமான எதிர்காலம் நம்மை அழைக்கிறது. ஒவ்வொரு குழந்தையின் தனித்துவத்திலும் பாரதத்தின் எதிர்காலத்தின் தனித்துவம் உள்ளது. மன அழுத்தமில்லாத கற்றல் முறையே, மாணவர்களின் தனித்துவமான திறன்களை மேம்படுத்துவதற்கான திறவுகோலாக இருக்கும்.இவ்வாறு அவர் கட்டுரையில் பதிவு செய்துள்ளார்
Sunday, 9 February 2025
தங்களது உரிமைக்காக போராடும் தமிழ்நாட்டு மாணவர்களை மத்திய அரசு தண்டித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
புதிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கல்வியை ஏற்க மறுத்ததால் தமிழ்நாட்டிற்கான நிதியை பறித்ததோடு, தற்போது அதனை பிற மாநிலங்களுக்கு மத்திய அரசு பகிர்ந்தளித்திருப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். இதன்மூலம் தங்களது உரிமைக்காக போராடும் மாணவர்களை மத்திய அரசு தண்டித்துள்ளதாகவும் சாடியுள்ளார்.
Friday, 7 February 2025
நெல்லையில் எச்சரிக்கப்பட்டும் மறுபடியும் கேரளாமருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டதால் அதிர்ச்சி!
திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட ராஜகோபாலபுரம் -சிவந்திபட்டி நான்கு வழிச்சாலை அருகே மறுபடியும் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.
கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவக் கழிவுகள் திருநெல்வேலியின் முக்கூடல் மற்றும் சுத்தமல்லி உள்ளிட்ட பல இடங்களில் கொட்டப்பட்ட விவகாரம் சில வாரங்களுக்கு முன் பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது.
தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த விவகாரத்தை விசாரித்து மருத்துவக் கழிவுகளை கேரள அரசு முழுமையாக அகற்ற உத்தரவிட்டுள்ளது அதைத்தொடர்ந்து லாரிகளில் மருத்துவ கழிவுகள் அள்ளி எடுத்துச் செல்லப்பட்டிருந்தன.இந்த வழக்கு தொடர்பாக போலீசார் ஐந்து பேருக்கும் மேற்பட்டோரின் மீது வழக்கு பதிந்து கைதும் செய்திருந்தனர்.இந்த நிலையில் திருநெல்வேலி அருகே ரெட்டியார்பட்டி மதுரை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை ஒட்டி மருத்துவ கழிவுகள் மீண்டும் கொட்டப்பட்டுள்ளது குறித்து தகவல் வந்தது. காலாவதியான மாத்திரை டானிக் உள்ளிட்டவை அதிகமாக அங்கு கொட்டப்பட்டிருந்தன மேலும் அந்த மருத்துவ கழிவுகளை தீயிட்டும் எடுத்துள்ளனர் ஆனால் பாதி அளவுக்கே அந்த மருத்துவ கழிவுகள் இருந்தன பொதுவாக மருத்துவ கழிவுகளை சுகாதாரத் துறை வழிகாட்டுதலின்படி முறைப்படி அகற்ற வேண்டும் பொது இடங்களில் கொட்ட கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் திருநெல்வேலி அருகே மீண்டும் மருத்துவக் கழிவுகளை கொட்டப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சி எதிர்பார்த்து உள்ளது இந்த மருத்துவ கழிவுகளை அகற்றவும் அதைக் கொட்டியவர்களின் தக்க நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
.இந்த நிலையில் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் சுகபுத்திரா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு திருநெல்வேலியில் ராஜகோபாலபுரம். சர்வீஸ் சாலையிலிருந்து சிவத்திப்பட்டி செல்லும் சாலைக்கு முன்புள்ள மண் சாலையில் தனியாருக்கு சொந்தமான காலி மனையில் 325 கிலோ எடையுள்ள காலாவதியான மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டிருந்தது. இது குறித்து தெரிய வந்ததும் மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் அங்கு சென்று இந்த கழிவுகளை அப்புறப்படுத்தி கிருமி நாசினி தெளித்தனர். இந்த மருத்துவ கழிவுகளை கொட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளபெருமாள்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Thursday, 6 February 2025
5 மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு!
Wednesday, 5 February 2025
அண்ணா பல்கலை. மாணவி பலாத்கார வழக்கில்-ஞானசேகரனுக்கு இன்று குரல் பரிசோதனை..
சென்னையில் 16-வது பழங்குடியின இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சிகள்
சென்னையில் 16-வது பழங்குடியின இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. அதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு கூட்டம் இன்று(PIB Chennai )சென்னை பிஐபி -இல் நடைப்பெற்றது.
எனது இளைய பாரதம் (மை பாரத்), மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், மத்திய உள்துறை அமைச்சகம் ஆகியவை வரும் 07-02-2025-ம் தேதி முதல் 13-02-2025 தேதி வரை சென்னை ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியுடன் இணைந்து 16-வது பழங்குடியினர் இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சியை நடத்த இருக்கிறது.
இந்த ஆண்டின் பழங்குடியின பரிமாற்ற நிகழ்ச்சியில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் இருந்து 44 பங்கேற்பாளர்களும், மத்தியப்பிரதேச மாநிலத்தில பால்கேத் மாவட்டத்திலிருந்து 44 பங்கேற்பாளர்களும், சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள தண்டேவா, கான்கர், நாராயண்பூர், பஸ்தார் ஆகிய மாவட்டங்களில் உள்ள 132 பங்கேற்பாளர்களும் ஆக மொத்தம் 220 பழங்குடி இளைஞர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
இந்நிகழ்ச்சியின்
தொடக்க விழா வருகிற 8-2-2025-ம் தேதி சென்னை ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் தலைமையில் நடைபெறுகிறது. குறிப்பாக இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு நாட்டின் பல தரப்பட்ட கலாச்சார பாரம்பரியங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையும். அவர்களின் கற்றல் திறனையும் வளர்க்க உதவும் என்ற அடிப்படையில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.
2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பழங்குடியினர் எண்ணிக்கை 10.42 மில்லியன் ஆகும். இது நாட்டின் மக்கள் தொகையில் 8.6 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
பொதுவாக பழங்குடியினர் தனித்துவமான கலாச்சாரங்கள் கொண்டவர்களாகவும், பிற சமூகங்களுடன் தொடர்புகொள்ள கூச்சப்படுபவர்களாகவும், பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களாகவும் உள்ளனர். இந்நிலையில் பழங்குடி இளைஞர்கள் நேர்மறையான ஈடுபாட்டுடனும், தக்க கல்வியுடனும் இருக்க வேண்டும் என்பதற்காக பழங்குடியினர் பரிமாற்றத் திட்டங்கள் பெரிதும் உதவியாக இருக்கும்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் பழங்குடி இளைஞர்களின் வளர்ச்சிக்காக நேரு இளைஞர் மையம் பழங்குடி இளைஞர் பரிமாற்றத் திட்டங்களை செயல்படுத்துகிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம் கடந்த 2006ம் ஆண்டு முதல் இதுவரை 15 பழங்குடி இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடைபெற்று உள்ளன.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பழங்குடியினர் இளைஞர்கள் பரிமாற்ற நிகழ்ச்சிகளில் கீழ்கண்ட நிகழ்ச்சி நிரல்படி செயல்பாடுகள் நடைபெற இருக்கிறது.
நிகழ்ச்சியின் நிறைவு விழா 13-ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் திரு அப்பாவு தலைமையில் நடைபெறுகிறது. நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளும் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில இயக்குநர் திரு செந்தில் குமார் தலைமையில் நடைபெறுகிறது.