Thursday, 11 September 2025

ஈழ அகதிகள் பாதுகாப்பு குழுவின் சார்பில் கையெழுத்து இயக்கம் தொடக்கம் .



இந்திய அரசே !தமிழக அரசே!  ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கு!.


 

ஈழ அகதிகள் பாதுகாப்பு குழுவின் சார்பில் தமிழகத்தில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டியும் , திருச்சி சிறப்பு முகாமில்  அடைக்கப்பட்டுள்ள 7 ஈழத் தமிழ் பெண்கள் உள்ளிட்ட தமிழர்களை  விடுவிக்க கூறியும்கையெழுத்து இயக்கம் துவக்கப்பட்டது  


செப்டம்பர் 1, 2025, மாலை 4 மணிக்கு சென்னை , பத்திரிகையாளர் மன்றம்  சேப்பாக்கத்தில்  இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை  புகழேந்தி வழக்கறிஞர் ஈழ அகதிகள் பாதுகாப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர், மற்றும்  தமிழரசன்கலை  செயலாளர் ஆகியோர் ஒருங்ணைந்து நடத்தினர். 

இந்த நிகழ்ச்சியை  நீதியரசர் து.அரிபரந்தாமன் , சகாயம் ஐஏஎஸ், மற்றும்  சுரேஷ் காமாட்சி  ஆகியோர் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். 


இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தமிழ் நேயன்.  பொதுசெயலாளர் தமிழ் தேச மக்கள் கட்சி, தடா அப்துல் ரஹீம் .தலைவர் இந்திய தேசிய லீக், மு. ராதாகிருஷ்ணன். வழக்கறிஞர், R.சங்கரசுப்பு.  மக்கள் வழக்கறிஞர்,  தமிழினியன் துணை அமைச்சர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்,  வ.கீரா திரைப்பட இயக்குனர், செந்தமிழ் குமரன். தமிழ் தேசிய விடுதலைக் கட்சி, வழக்கறிஞர் எழிலரசன் மாநில செயலாளர், மக்கள் புரட்சி கழகம்,  எஸ் அறிவழகன். துணைத்தலைவர் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், தோ.ம .சான்சன் .தமிழ் வழக்கறிஞர் பேரவை, காற்று லிஸ்ட் பாலா, வெற்றித் தமிழன். தமிழர் தொன்மம், 


ஆகிய தோழர்கள் நிகழ்ச்சியில்  பங்கேற்று சிறப்பித்துக் கொடுத்தனர்.

மற்றும்  வழக்கறிஞர்கள். சமூக ஆர்வலர்கள் , பத்திரிகையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .

No comments:

Post a Comment