இந்த நடவடிக்கைக்கான காரணம், சமீபத்தில் செங்கோட்டையன் அளித்த பேட்டி. அதில், கட்சியை வலுப்படுத்த ஓ. பன்னீர்செல்வம், வி.கே. சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட நீக்கப்பட்ட தலைவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
மேலும், இதற்கு 10 நாட்கள் அவகாசம் அளிப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி இந்த முடிவை எடுத்துள்ளார்.
செங்கோட்டையனுடன் சேர்ந்து, அவருக்கு ஆதரவாக இருந்த மற்ற 7 கட்சி நிர்வாகிகளும் தங்கள் பதவிகளை இழந்தனர்.
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், நம்பியூர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் திரு. தம்பி (எ) K.A. சுப்பிரமணியன்,
நம்பியூர் தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் திரு. M. ஈஸ்வரமூர்த்தி (எ) சென்னை மணி,
கோபிசெட்டிப்பாளையம் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் திரு. N.D. குறிஞ்சிநாதன்,
அந்தியூர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் திரு. M. தேவராஜ்,
அத்தாணி பேரூராட்சிக் கழகச் செயலாளர் திரு. S.S. ரமேஷ்,
துணைச் செயலாளர் திரு. வேலு (எ) தா. மருதமுத்து,
ஈரோடு மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர் திரு.K.S. மோகன்குமார்
இந்த நடவடிக்கைக்குப் பிறகு செங்கோட்டையன், தான் நீக்கப்பட்டதால் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறியுள்ளதோடு, கட்சியை மீண்டும் ஒன்றிணைக்கும் தனது முயற்சி தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment