* 2025 செப்டம்பர் 1:
* உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அமர் பிரசாத் என்பவர் தான் தங்கியிருந்த குடியிருப்பின் மாடியில் இருந்து தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது.
* அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
* இதுகுறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
* 2025 செப்டம்பர் 2:
* அமரேஷ் பிரசாத் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தக் கோரியும், அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக் கோரியும், சுமார் ஆயிரம் வட மாநில தொழிலாளர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
* போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் துணை ஆணையர் உட்பட 10க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர்.
* போராட்டக்காரர்களைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினர்.
* இந்தச் சம்பவம் தொடர்பாக 78 வட மாநில தொழிலாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
* உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு ஒப்பந்த நிறுவனம் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும், உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்லும் செலவை ஏற்கவும் ஒப்புக் கொண்டது.
* 2025 செப்டம்பர் 3:
* கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்ட 29 வட மாநில தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
* காட்டுப்பள்ளி பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் தொடர்ந்து குவிக்கப்பட்டுள்ளனர்.
அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள்:
* விசாரணை: அமரேஷ் பிரசாத் மரணம் குறித்து காட்டுப்பள்ளி காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
* கைது: கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட 29 வட மாநில தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
* பாதுகாப்பு: இதுபோன்ற அசம்பாவிதங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க, தமிழகத்தில் உள்ள வட மாநில தொழிலாளர்களை தொழிலாளர் நலத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும், காட்டுப்பள்ளி பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
* இழப்பீடு: உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு மற்றும் அவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டு செல்லும் செலவை ஒப்பந்த நிறுவனம் ஏற்க ஒப்புக்கொண்டுள்ளது.
கடந்த அக்டோபர் 2023-ல் சென்னை அம்பத்தூரில் உள்ள பட்டரவாக்கம் பகுதியில் வட மாநில தொழிலாளர்கள் போதையில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டனர்.
இந்த தகராறைத் தடுக்கச் சென்ற காவலர் ரகுபதி மற்றும் மற்றொரு காவலர் ராஜ்குமார் ஆகியோர் மீது அந்தத் தொழிலாளர்கள் கற்கள் மற்றும் இரும்பு கம்பிகளால் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காவலர் ரகுபதி தலையில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் 28 வட மாநில தொழிலாளர்களைக் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது தமிழ்நாடு முழுவதும் வட மாநிலத்தவர்களின் விவரங்களை சேகரிக்க சொல்லி இருப்பதாக தகவல். தமிழ்நாடு முழுவதிலும் ஏற்பட்டிருக்கும் பல பிரச்சனைகளுக்கும் சட்ட ஒழுங்கு சீர்குலைவிர்க்கும் அதாவது கடத்தல், கொலை செய்தல், திருடுதல், கற்பழித்தல் போன்ற சமூக சீரழிவு குற்றங்களுக்கு வட மாநிலத்தவரே பெரும் அளவில் காரணமாக இருப்பதாகவும். தமிழகத்தில் குறிப்பாக அனைத்து தொழில் வளங்கள் எல்லோரும் வட மாநிலத்தவர்கள் தலையீடு ஆளுமைகள் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனையோடு தெரிவித்து வருகின்றனர் இதனை கலைய வேண்டும் என்றும் தெரிவித்துக் கொண்டன ர்.
ஆனால் வடமாநிலத்தவர் மட்டுமல்ல யாராக இருந்தாலும் தங்களுக்கு உரியதை கேட்பதற்கு அனைவருக்கும் உரிமையை உள்ளது. எதற்கும் வன்முறை தீர்வாகாது. தமிழகம் எத்தனையோ போராட்டங்களை கண்டுள்ளது ஆனால், இங்குள்ளதமிழக மக்கள் பொதுவாகவே அமைதியாகவும் பொறுமையாகவும் தங்களது போராட்டங்களை கையாளுவது தங்களது எதிர்ப்புகளை அறப்போராட்டம் மூலமே கூறுவர். காவல்துறையின் அடக்குமுறை எல்லை மீறும் போது தான் அவர்கள் தங்களது எதிர்ப்புகளை காண்பிப்பார்கள் ஆனாலும் யாரும் போலிஸை கல்லால் அடித்தது கிடையாது. இது மிகவும் தவறான செயல் என்றும் இந்த அளவுக்கு விடக்கூடாது என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment