Wednesday, 10 September 2025

துணை குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. சி.பி.இராதாகிருஷ்ணன் . வாழ்த்துக்கக்கூறிய பொன் . ராதாகிருஷ்ணன் .

 


துணை குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. சி.பி.இராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கக்கூறியுள்ளார்  பொன் . ராதாகிருஷ்ணன் 


 அவர் தனது x  பதிவில் , துணை குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. சி.பி.இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தைச் சேர்ந்த திரு. சி.பி. இராதாகிருஷ்ணன் அவர்கள் கோவை எம்.பி, கயிறு வாரியத் தலைவர், மஹாராட்ரா ஆளுநர் என பல்வேறு பொறுப்புகளில் திறம்பட பணியாற்றியதற்காக பிரதமர் திரு @narendramodi அவர்கள் துணை குடியரசு தலைவர் என்ற உயர்ந்த பதவியை தமிழகத்திற்கு கிடைக்கும் வகையில் அன்புச் சகோதரர் திரு. சி.பி.இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு இவ்வாய்ப்பை வழங்கியுள்ளார்.


நேற்று நடந்த தேர்தலில் மிகப் பெருவாரியான வாக்குகளைப் பெற்று துணை குடியரசுத் தலைவராக தேர்வு பெற்றிருப்பது உள்ளபடியே ஒரு தமிழனாக மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. NDA கூட்டணியில் இல்லாத மாற்றுக் கட்சியை சேர்ந்த பல எம்.பிக்களும் வாக்களித்திருப்பது சி.பி. இராதாகிருஷணன் அவர்களின் மீதான அவர்களின் நம்பிக்கையை காட்டுகிறது.

துணை குடியரசு தலைவராக பொறுப்பேற்கவுள்ள திரு. @CPRGuv  அவர்களின் பணி சிறக்க எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

என பொன் ராதாகிருஷ்ணன் தனது x பதிவில் தெரிவித்துள்ளார் .

No comments:

Post a Comment