டி.எஸ்.பி. சங்கர் கணேஷ் பற்றி
டி.எஸ்.பி. சங்கர் கணேஷ், காஞ்சிபுரம் நகரச் சட்ட ஒழுங்கு துணை கண்காணிப்பாளராக (Deputy Superintendent of Police, Law & Order, Kanchipuram Town) பணியாற்றி வருகிறார்.
கைதுக்கான காரணம்:
அடிதடி சண்டை
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த பூசிவாக்கம் பகுதியில், நத்தப்பேட்டை பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவர் டீ மற்றும் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். அதே பூசிவாக்கம் பகுதியை சார்ந்த சிமெண்ட் முருகன் என்பவர், கேக் வாங்குவதற்காக கடைக்கு வந்துள்ளார். அப்போது கேக் தரமற்றதாக இருந்ததாக கூறி முருகன் மற்றும் சிவகுமார் ஆகிய இருவருக்கிடையே, வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்தநிலையில் பேக்கரி கடை உரிமையாளர் சிவகுமாரின், மருமகன் லோகேஷ் நீதிமன்ற காவலராக பணியாற்றி வருகிறார். லோகேஷ் சிவகுமாருக்கு ஆதரவாக, முருகனிடம் சண்டை போட்டதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் சிவகுமாருக்கும் முருகனுக்கும் அடிதடி சண்டை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இதுகுறித்து முருகனின் மனைவி பார்வதி வாலாஜாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக வாலாஜாபாத் காவல் நிலையத்தில், முருகனின் மனைவி பார்வதி கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவக்குமார் மீது வாலாஜாபாத் காவல் துறையினர் பல்வேறு பிரிவின்கிழ் வழக்கு பதிவு செய்தனர்.
* வன்கொடுமை தடுப்புச் சட்டம் (SC/ST Act) வழக்கு: இந்த வழக்கில், முருகன் என்பவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தார்.
* அலட்சியம்: புகார் அளித்து ஒரு மாதத்திற்கு மேலாகியும், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய ஒரு காவலர் லோகஷ் பெயர் வேண்டுமென்றே சேர்க்கப்படாமல் இருந்ததாகவும் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்துள்ளார்.
* நீதிமன்றத்தில் ஆஜர்: வழக்கு பதிவு செய்யப்பட்டு 15 நாட்களுக்கு மேலாகியும், நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி தாமாக முன்வந்து காஞ்சிபுரம் முதன்மை நீதிபதி செம்மல் இதுவரை எதிரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என வழக்கை விசாரித்தார். , வழக்கை விசாரித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். ஆனால், அவர் சென்னை சென்றதால், அவருக்குப் பதிலாக டி.எஸ்.பி. சங்கர் கணேஷ் ஆஜரானார்.
* கைது உத்தரவு:
சங்கர் கணேஷ் ஆஜராகி, நீதிபதி முன்னிலையில் விளக்கம் அளித்தார். அப்போது நீதிபதி மாலை 5 மணிக்குள், சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படாததால், விசாரணைக்குப் பிறகு, வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக, டி.எஸ்.பி. சங்கர் கணேஷை உடனடியாகக் கைது செய்ய நீதிபதி செம்மல் உத்தரவிட்டார்.
கைது மற்றும் அதன் பின்னான நிகழ்வுகள்:
* நீதிமன்ற வளாகத்திலேயே சீருடையுடன் கைது செய்யப்பட்டார்.
* அவரைச் சிறைக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது, அவர் காவல்துறை வாகனத்தில் இருந்து இறங்கி, மற்றொரு காரில் தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.கிட்டதட்ட 1 மணி நேரம் கழித்து டிஎஸ்பி திரும்பியதாக கூறப்படுகிறது . காலை முதல் நீதிமன்றத்திலேயே இருந்ததால் அவர் கழிவரைக்கு சென்றதாக காவல் துறை மூலம் தெரிவிக்கப்பட்டது . இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
* பின்னர், அவர் மீண்டும் திரும்பி வந்து, காஞ்சிபுரம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து டிஎஸ்பி மருத்துவ பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுமதி அனுப்பி வைக்கப்பட்டார்.
உண்மை இல்லை
இதில் இருவருக்கிடையே இருந்த தனிப்பட்ட பிரச்சனை காரணமாகவே நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்ததாக காவலர்கள் தெரிவித்துள்ளனர். டிஎஸ்பி மாயமானதாக பரவிய தகவலிலும் உண்மை இல்லை என விளக்கம் அளித்து இருந்தனர்.
வழக்கு விசாரணை
காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி செம்மலின் உத்தரவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என் சதீஷ்குமார் முன்பு அரசு தரப்பில் முறையிடப்பட்டது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மாவட்ட நீதிபதிக்கும்டிஎஸ்ப கக்கும் ஏற்கனவே முன்பகை உள்ளது . அதில் தான் இப்படி ஒரு உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார் என்றார்
அதற்கு நீதிபதி அப்படி என்ன போலீஸ் அதிகாரிக்கும் நீதிபதிக்கும் முன்பகை இருக்க போகிறது என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு அரசு வக்கீல் டிஎஸ்பி நீதிபதிக்கு எதிராக சில புகார்களை தெரிவித்தார். அதற்காக பழிவாங்கும் விதமாக நீதிபதி செயல்பட்டுள்ளார்.
பேக்கரியில் மோதல் சம்பவம் கடந்த ஜூலை மாதம் நடந்துள்ளது கடந்த 4 தேதி ஏன் எஸ்சி எஸ்டி வன்கொடுமை புகார் மீது வழக்கு பதிவு செய்யவில்லை என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
உடனே காவலர்கள் அந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர் ஆனால் ஏன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி எழுப்பி, எட்டாம் தேதி திங்கட்கிழமை காலை முதல் மாலை வரை டிஎஸ்பி யை கோர்ட்டில் அமர வைத்து எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு 4கீழ் டிஎஸ்பி யை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிரானது எனவே மாவட்ட நீதிபதி உத்தரவை எதிர்த்து தொடர்ப்பு வழக்கை அவசர வழக்காக கருதி இன்று பிற்பகலில் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அதேபோல டிஎஸ்பி சங்கர் கணேஷ் தரப்பிலும் வக்கீல் ஒரு ஆஜராகி வழக்கு தொடர போவதாக கூறினார் இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கை தாக்கல் செய்தால் இன்று பிற்பகலில் விசாரிப்பதாக கூறினார் மேலும் இந்த விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது ஏதோ வழக்கத்துக்கு மாறான சம்பவம் நடந்துள்ளது என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்
* இந்தநிலையில் 9.9.2023 அன்று காலை டிஎஸ்பி சங்கர் கணேஷ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சங்கர் கணேஷ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தனிப்பட்ட விரோதம் காரணமாக பழி வாங்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி டி.எஸ்.பி., கைது செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார்.
No comments:
Post a Comment