Sunday, 13 June 2021

தமிழக அரசு அலுவலகங்களில் கேட்பார் இன்றி கிடக்கும் துருபிடித்த வாகனங்களை ஏலம் விடுங்க..! -இறையன்பு

 தமிழக அரசு அலுவலகங்களில் கேட்பார் இன்றி கிடக்கும் துருபிடித்த வாகனங்களை ஏலம் விடுங்க..! தலைமை செயலாளர் இறையன்பு IAS கடிதம்.


  • மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தின் பல்வேறு அரசு அலுவலகங்களில் தூசு படிந்த நிலையில் பயன்பாடற்ற வகையில் பழைய வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. இதுகுறித்து விசாரிக்கும் போது அவை ஏன் நிறுத்தப்பட்டிருக்கின்றன.
யார் நிறுத்தியது போன்ற விவரங்கள் அவர்களுக்கு தெரியவில்லை. இந்த வாகனங்களை அகற்றும் பணிக்கான நடைமுறைகளை துறைத் தலைவர்களும், மாவட்ட ஆட்சியர்களும் கண்டறிய வேண்டும். இதன்மூலம் பயன்பாட்டிலுள்ள வாகனங்களை நிறுத்த போதிய இடம் கிடைக்கும். மேலும் பழைய வாகனங்களை அகற்றுவதன் மூலம் அரசு கருவூலத்திற்கு சிறிய அளவிலான நிதியும் சேரும்.

கொளுத்தும் வெயிலிலும், கடும் மழையிலும் இந்த வாகனங்கள் மிகக் கடுமையாகச் சேதம் அடைகின்றன. இதனால் ஏலம் விடும் போது உரிய விலைக்கு அவை போவதில்லை. இதன் காரணமாக அரசுக்கு குறைந்த அளவிலேயே வருவாய் கிடைக்கிறது. எனவே பழைய பயன்பாடற்ற வாகனங்களுக்கு உரிய விலைகளை நிர்ணயம் செய்து விரைவாக ஏலம் நடத்த வேண்டும்.
இந்த விஷயத்தில் விரைந்து செயல்பட்டு அதற்குரிய அறிக்கையை மோட்டார் வாகனங்களின் பொதுத்துறை செயலாளருக்கு அனுப்ப வேண்டும். அதேசமயம் அமலாக்கத்துறை மூலம் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரிய முறையில் பைசல் செய்ய வேண்டும். இதுகுறித்த வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment