Wednesday, 23 June 2021

டெல்லியில்நடைபெற இருந்த காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் ஒத்திவைப்பு..!!

 

டெல்லியில்22.06.2021ஆம் தேதிநடைபெற இருந்த காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் ஜூன் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

. காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 12வது கூட்டம் ஒன்றிய நீர் ஆணைய தலைவர் ஹல்தர் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் அதிகாரிகள் கலந்துகொள்ள இருந்தனர். மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தமிழகத்தின் தேவைக்காக ஆண்டுதோறும் 177.2 டி.எம்.சி காவிரி நீரை வழங்க வேண்டுஎன்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி

மாதந்தோறும் தமிழகத்திற்க்கு வழங்க வேண்டிய நீரின் அளவை, காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி, தமிழகத்திற்க்கு ஜூன் மாதம் 9.19 டிஎம்சியும் ஜூலை மாதம் 31.24 டிஎம்சியும் காவிரி நீர் வழங்கப்பட வேண்டும் என மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.பிலிகுண்டுலு பகுதியில் உரிய நீர் வருவதை காவிரி மேலாண்மை ஆணையம் உறுதிப்படுத்த உத்தரவிடவேண்டும் எனவும் கூறியிருந்தார். உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி, ஜூன் மாதம் முதல் அக்டோபர் வரையிலான தென்மேற்கு பருவ காலத்தில் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீர் குறித்து விவாதிக்கப்பட இருந்தது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் விரைவில் அணை கட்டப்படும் என்ற கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் அறிவிப்பு குறித்தும் இக்கூட்டத்தில் தமிழக பிரதிநிதிகள் கேள்வி எழுப்ப திட்டமிட்டிருந்தனர்.

நடப்பு மாதத்திற்கான ஒதுக்கீட்டில் இதுவரை ஒரு டிஎம்சி தண்ணீர் மட்டுமே தமிழகம் வந்துள்ள சூழலில்,மத்திய ஜல்சக்திதுறை தரப்பில் கடந்த 15ம் தேதி ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் காவிரி ஆணையத்தின் கூட்டமானது இடைக்கால தலைவர் ராஜேந்திர குமார் ஜெயின் தலைமையில் வரும் 22ம் தேதி நடைபெறும் என கூறப்பட்டது. இதில் மத்திய ஜல்சக்திதுறை செயலாளர், தமிழகம் உட்பட நான்கு மாநில உறுப்பினர்களும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும் இந்த கூட்டத்தின் போது இதுவரை காவிரி ஒழுங்காற்று குழுவில் ஆலோசிக்கப்பட்ட விவரங்கள், தாக்கல் செய்யப்பட்ட நீர் புள்ளிவிவரங்கள்,
அணை பாதுகாப்பு, காவிரியில் இருந்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி கர்நாடகா திறந்துவிட்ட நீரின் அளவு, ஆணையத்திற்கு என நிரந்தர தலைவர் ஆகியவை குறித்தும், முக்கியமாக காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படுவது குறித்தும் கண்டிப்பாக விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியது.
இந்த நிலையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் 22.06.2021 15ம் தேதி நடைபெற இருந்த நிலையில் திடீரென வரும் 25ம் தேதி அதாவது வெள்ளிகிழமை காலை 11 மணிக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான காரணங்கள் குறித்து ஆணைய வட்டாரங்கள் தரப்பில் கிடைத்த தகவலில், ‘தமிழகம் மற்றும் புதுவையில் புதியதாக ஆட்சி பொறுப்பில் அமைந்துள்ள அரசுகள் ஆணையத்தின் கூட்டத்தில் பங்கேற்கும் நிபுணர்கள், புதிய உறுப்பினர்கள் சிலரை நியமனம் செய்ய வாய்ப்புள்ளதால் தான், தற்போது கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment