Saturday, 19 June 2021

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது

 


திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும் , கட்டாய கருக்கலைப்பு செய்ததாகவும் காவல்துறையில் நடிகை சாந்தினி கடந்த 28 ஆம் தேதி புகார் அளித்திருந்தார்.

 சாந்தினி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் தேடப்பட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட மணிகண்டனை ரகசிய இடத்தில் வைத்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 தலைமறைவாக இருந்த மணிகண்டனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும் , கட்டாய கருக்கலைப்பு செய்ததாகவும் காவல்துறையில் நடிகை சாந்தினி கடந்த 28 ஆம் தேதி புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் ,  வழக்குப்பதிவு   செய்யப்பட்ட  நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருந்த நிலையில் மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் அவரை தேடி வந்தனர். முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்ததை தொடர்ந்து அவரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வந்தனர் . இந்த சூழலில் மணிகண்டன் கைதாகியுள்ளார். 

No comments:

Post a Comment