- தமிழக ரேஷன் கடைகளில் இன்று முதல் கொரோனா நிவாரணத்தின் 2-வது தவணையாக ரூ.2,000 விநியோகம் செய்யப்பட உள்ளது.அரிசி அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளில் இலவசமாக 14 மளிகைப் பொருட்களையும் இன்று முதல் பெறலாம் என கூறப்படுகிறது.
முதல்கட்டமாக ரூ.2 ஆயிரம் கடந்த மாதம் வழங்கப்பட்டது. 2-வது தவணையாக ரூ.2 ஆயிரம் ஜூன் மாதம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மளிகைப் பொருட்களும் இலவசமாக வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.
ஒரு நாளைக்கு அதிகப்பட்சமாக 200 பேர் வரை ரேஷன் கடைகளுக்கு வந்து கொரோனா நிவாரண தொகை மற்றும் 14 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்களை வாங்கிச் செல்லும் வகையில் டோக்கன் விநியோகிக்கப்பட்டுள்ளது.
டோக்கனில் எந்த தேதி, நேரத்தில் ரேஷன் கடைக்கு வந்து பொருட்கள் வாங்க வேண்டும் என்று எழுதி கொடுக்கப்பட்டுள்ளது.டோக்கன் கிடைக்காதவர்கள், வெளியூர் சென்றுள்ளவர்கள் இந்த மாத இறுதி வரை தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா நிவாரண பொருட்களை ரேஷன் கடைகளுக்கு சென்று வாங்கிச் செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. டோக்கன் கிடைக்காதவர்கள், வெளியூர் சென்றுள்ளவர்கள் இந்த மாத இறுதி வரை தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா நிவாரண பொருட்களை ரேஷன் கடைகளுக்கு சென்று வாங்கிச் செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment