தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட உள்ள நிலையில் வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியீடு..!
டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்கக் கூடாது. மதுக்கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் கொரோனா முன்னெச்சரிகைநடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.
மதுக்கடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த த்தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் 6 அடி சமுக இடைவெளி இருக்க வேண்டும்.
டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபானங்களை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சில்லறையாக தான் விற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூட்டத்தை கட்டுப்படுத்தி, ஒழுங்குபடுத்த பணியாளர்களை நியமித்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கடைகளை திறக்கும் போதும், மூடும் போதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பணியாளர்கள் கட்டாயம் மூன்றடுக்கு முகக்கவசம் அணிய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment