Tuesday, 15 June 2021

யூ-டியூபர் பப்ஜி மதன் தலைமறைவாகியுள்ளார்.

 சீனா  இந்தியாவில்   அத்துமீறும் போது , இந்தியாவில்  2020 - இல்  ,தடை செய்யப்பட்ட  பப்ஜி  விளையாட்டில்அரசுக்குஎதிராக  சட்டத்திற்கு  புறம்பாக  பப்ஜிவிளையாடியவர் யூ-டியூபர் பப்ஜி மதன்.

 இவர்  சிறுமிகளிடம் ஆபாசமாக பேசி பணம் பறித்த  வழக்கில் ( யூ-டியூபர் பப்ஜி மதன்) தலைமறைவாகியுள்ளார். இதையடுத்து அவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாகியுள்ளனர்

.ஆன்லைனில் பப்ஜி உள்ளிட்ட பல்வேறு லைவ் வீடியோ கேம்களில் எளிதில் வெல்வதற்கான டிப்ஸ் சொல்லித்தருவதாக கூறி, மதன் எனும் யூ-டியூப் சேனலை நடத்தி வருபவர் மதன் . இவரது ஆபாசமான பேச்சுகளுக்கு கிடைத்த வரவேற்பு, 'டாக்ஸிக் மதன் 18+' என்கிற மற்றொரு யு-டியூப் சேனலையும் தொடங்கியுள்ளார். இதனால்  நல்லவருமானமும் , இவருக்கு கிடைத்துள்ளது .ஆபாச உரையாடல் வீடியோக்கள் அவரது யூடியூப் தளத்திற்கு சப்ஸ்கிரைபர்களை அதிகரித்துள்ளது.

இவரின் இந்த  யு-டியூப் சேனல்களில் இவர் பதிவேற்றியுள்ள பல ஆபாச வீடியோக்கள் படு கேவலமானவையாம் .இவர்  தன்னோடு ஆன்லைனில் விளையாடும் சக போட்டியாளர்களை தரக்குறைவான வார்த்தைகளில் திட்டிக்கொண்டே ஆடுவது இவரது வாடிக்கையாம் . பெண்களை கூட இவர்  இன்னும் மோசமான வார்த்தைகளால் திட்டியப்படியே  விளையாடுவாராம்.

அதிலும் சில இளம் பெண்கள், குறிப்பாக  சிறுமிகள், மதனுடன் நட்பு பாராட்டிய விநோதமும் . ஒரு சிறுமியை, தான் 3வது காதலியாகத்தான் வைத்துக் கொள்ள முடியும் என மதன் சொல்ல, உன்கூட இருந்தால் போதும் வச்சிக்கோ என அந்த சிறுமி சொல்லும் ஆடியோ பதிவு சமீபத்தில் வெளியாகி கேட்போரை அதிர வைத்துள்ளது.

மேலும் ஆதரவற்றவர்களுக்கு உதவுவதாகக் கூறி போட்டியாளர்களிடமிருந்து பணம் நன்கொடை செய்தும் இவர் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.மதனின் அடாவடிகள்,  இவரை  நெருங்கவும்  முடியாமல்  பாதிக்கப்பட்டவர்கள் ,இவரின் ஆபாச பேச்சுகள் குறித்து சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், நேற்று , விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி புளியந்தோப்பு சைபர் பிரிவு போலீஸார் உத்தரவிட்டனர். 

 ஆனால்  மதன் நேரில் ஆஜர் ஆகாமல்  தலைமறைவு ஆகிவிட்டதாக தெரிகிறது .மதன் மற்றும் டாக்ஸிக் மதன் 18+ ஆகிய யு-டியூப் சேனல்களை முடக்கவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்கவும் காவல்துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது.



 பப்ஜி மதன், VPN  வசதியை பயன்படுத்தி தனது இருப்பிடத்தை  காவலர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி  வருவதால், காவல்துறை அவர் எங்கே இருக்கிறார் என்பதை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர் .

 தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி  மேலும் மேலும் தவறு செய்துவரும்  மதன், இப்போது அதே மாதிரி தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தலைமறைவாகவும் இருந்து வருகிறார். ஆனால் அவரை கைது செய்வதில் காவல்துறை தீவிரம் காட்டுவதாகவும், எந்தெந்த பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யலாம் என்று ஆலோசனை நடத்தி வருவதாகவும் காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.


No comments:

Post a Comment