Wednesday, 16 June 2021

சிவசங்கர் பாபா கைது

 


பள்ளி
உரிமையாளர் என்ற தனது செல்வாக்கை பயன்படுத்தி கொண்டு மாணவிகளிடம் பாலியல் வக்கிரத்தில் ஈடுபட்டு வந்த சிவசங்கர் மீது  போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தனிப்படை விரைந்தது

 

மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுவந்த வழக்கில் சிவசங்கர் பாபாவை கைது செய்ய தனிப்படை காவலர் டேராடூன் விரைந்தனர். இன்று காலை சிபிசிஐடி காவலர் டேராடூனில் உள்ள அந்த குறிப்பிட்ட மருத்துவமனைக்கு சென்றபோது சிவசங்கர் பாபா அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து தப்பியோடிய சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி காவலர்தீவிரமாக தேடி வந்தனர்.

 இந்நிலையில், டேராடூனில் இருந்து தப்பியோடிய சிவசங்கர் பாபாவை தமிழக சிபிசிஐடி காவலர் தற்போது டெல்லியில் கைது செய்துள்ளனர். தெற்கு டெல்லியின் காசியாபாத்தில் சிவசங்கர் பாபா பதுங்கி இருப்பதாக சிபிசிஐடி காவலர் ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து டெல்லி காவலர்ருக்கு சிபிசிஐடி காவலர் தகவல் கொடுத்தனர்.

 இதனை தொடர்ந்து துரிதமாக செயல்பட்ட சிபிசிஐடி காவலர் டெல்லியின் காசியாபாத் பகுதியில் உள்ள சித்தரஞ்சன் என்ற இடத்தில் பதுங்கி இருந்த சங்கர் பாபாவை மடக்கிப்பிடித்தனர். சிவசங்கர் பாபாவை கைது செய்ய டெல்லி காவலர்  உதவினர்.

 டெல்லியில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா இன்று அல்லது நாளை சென்னை அழைத்து வர சிபிசிஐடி காவலர் திட்டமிட்டுள்ளனர். 

 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வந்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சுஷில் ஹரி பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபாவிடம் சிபிசிஐடி காவலர் நடத்தும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

 

No comments:

Post a Comment