Tuesday, 15 June 2021

சிவசங்கர் பாபாவை கைது செய்ய சிபிசிஐடி தனிப்படை போலீசார் டேராடூன் விரைந்தனர்

 சென்னை, கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபாவை கைது செய்ய சிபிசிஐடி தனிப்படை போலீசார் டேராடூன் விரைந்தனர்.டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிவசங்கர் பாபா சிகிச்சை பெற்று வருவதாக கிடைத்த தகவலை அடுத்து, தனிப்படை டேராடூன் விரைந்தது.



மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுவந்த வழக்கில் சிவசங்கர் பாபாவை கைது செய்ய தனிப்படை போலீசார் டேராடூன் விரைந்துள்ளனர். பள்ளி உரிமையாளர் என்ற தனது செல்வாக்கை பயன்படுத்தி கொண்டு மாணவிகளிடம் பாலியல் வக்கிரத்தில் ஈடுபட்டு வந்த சிவசங்கர் மீது  போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தனிப்படை விரைந்துள்ளது. 

விவரம் 



செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர், ஆன்மீகவாதி என்ற போர்வையில் மாணவிகளைப் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக  அந்த பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக வலைதளங்களில் பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்தனர். மேலும், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது.


 மேலும்  இந்த  வழக்கு தொடர்பாக  மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், போக்சோ உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் சிவசங்கர் பாபா உள்ளிட்ட சிலர்  மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு  சிபிசிஐடிக்கு மாற்றம் செய்ய  தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார்.  

 

இந்த  நிலையில் சிவசங்கர் பாபா நெஞ்சுவலி காரணமாக உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக  சில  ஆதாரங்கள் மற்றும்  புகைப்பட சான்றுகளை,  அவரது தரப்பினர் சமர்ப்பித்திருந்தனர். 


இதனையடுத்து சிவசங்கர் பாபாவை நேரடியாக விசாரிக்க சிபிசிஐடி குழுவினர்  டேராடூன் விரைந்ததுள்ளனர் .மேலும், சிவசங்கர் பாபா வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்  வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment