ஆன்லைன் வகுப்புகளையே தயவு செய்து மூடிவிட்டால் கூட நல்லது .பெற்றவர்கள் இருக்கும் சூழலில் கடன் வாங்கி தன் பிள்ளைகளுக்கு படிப்பதற்காக செல்போன் வாங்கி கொடுக்கின்றனர் . நடக்கும் சூழல்களை பார்த்தால் பெண் பிள்ளைகளை பள்ளிக்கே அனுப்ப மிகவும் தயக்கம் தான் ஏற்படும் .பெற்றவர்கள் முன்னிலையில் ஆன்லைன் வகுப்பிற்கே இந்த லட்சணம் என்றால் , பள்ளிசெல்லும் மாணவிகளின் நிலை சற்று கவலை படவேண்டிய விஷயம் தான் . உடனே பெண்பிள்ளைகள் மேல் தான் சேற்றை பூசும் சமூக அரைவேக்காடுகள் கொஞ்சம் அந்த பிள்ளைகளின் மனநிலைகளை பார்க்கவேண்டும்.
மீண்டும் ஒரு சம்பவம் ராமநாதபுரம்
மாவட்டம் முதுகுளத்தூரில் நடந்தேறியுள்ளது
.
முதுகுளத்தூரில் பள்ளி மாணவியிடம்
பாலியல்ரீதியாக பேசிய புகாரில் ஆசிரியர் போக்சோவில் கைது.பாதிக்கப்பட்ட மாணவி
அளித்த புகாரில் அறிவியல் ஆசிரியர் ஹபீப் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
செய்யப்பட்டுள்ளார்.அரசு உதவிபெறும் பள்ளி மாணவியிடம் ஆசிரியர் பாலியல்ரீதியாக
பேசும் ஆடியோ வெளியாகி சர்ச்சைக்குள்ளானது.
தனது வீட்டுக்கு வராவிட்டால்
மதிப்பெண்ணை குறைத்து தேர்ச்சி பெறவிடாமல் செய்து விடுவேன் என மிரட்டல்
விடுத்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில்
செயல்படும் அரசு உதவிபெறும் பள்ளியான பள்ளிவாசல் மேல்நிலை பள்ளியில் முதுகுளத்தூர்
மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதியில் இருந்து 1500-க்கும் மேற்பட்ட மாணவ
மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக
பணியாற்றும் ஹபீப் என்பவர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து
வந்துள்ளதாக தெரிகிறது.
பள்ளியில்
படிக்கும் மாணவியின் செல்போன் எண்ணை வாங்கி அவரது வீட்டில் பெற்றோர் இல்லாத
சமயத்தில் பேசி புத்தகத்தை எடுத்துக் கொண்டு தனது வீட்டிற்கு வருமாறு
தெரிவித்துள்ளார். ஒருவேளை அப்படி
வர மறுத்தால், ’உனக்கும்
மார்க் குறைவாக போட்டு தேர்ச்சியடைய விடாமல் செய்து விடுவேன்’ என்று மிரட்டல்
விடுத்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுபோல
பல மாணவிகள் தனது வீட்டிற்கு புத்தகத்துடன் வந்துள்ளதாகவும் அதுபோல் நீயும்
வரவேண்டுமென்று ஒரு மாணவியுடன் ஆசிரியர் ஹபீப் பேசும் ஆடியோ தற்போது சமூக
வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. பள்ளி ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மாணவி
ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முதுகுளத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர்
ராகவேந்திரர் ரவி விசாரணை நடத்தி வந்தார். போலீசார் விசாரணையை அடுத்து ஆசிரியர்
போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
No comments:
Post a Comment