தமிழ்நாட்டில்
பள்ளிகளில் பாலியல் குற்றங்களுக்காக கடந்த சில ஆண்டுகளில் நிறைய ஆசிரியர்கள் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
பொதுவாக பெற்றோர்கள் தங்கள்
குழந்தைகளின் எதிர்காலம் நலமுடன் இருக்க பலவிதங்களில் போராடி குழந்தைகளின்
கல்விக்காக தரமான கல்விக்கூடங்கள்,கல்லூரிகளை தேர்வு செய்கின்றனர் . அதேபோல புனிதமான ஆசிரியர்பணிமூலம் சிறந்த மாணவர்களை உருவாக்கி
அவரவர் வாழும் தேசத்திற்கு பெருமை
சேர்த்த புனிதவான்கள் வாழ்ந்த இந்த மண்ணில்
கேடுகெட்ட மனங்களை கொண்ட மனிதமிருகங்கள் இந்த புனித பணியில் இருந்துகொண்டு பாலியல்
குற்றங்களை செய்து , அந்த குழுமத்தின் பெயர் ,மாணவ
செல்வங்களின் வாழ்க்கையைகெடுத்தும் வருகிறது
கெடுத்தஅப்படிப்பட்டசில
கொடூரன்கள் ஒரு சிலரை பார்க்கலாம்
.
சென்னையில் பிரபல
தனியார் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து
வந்ததாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து அந்தப் பள்ளி நிர்வாகம் அந்த
ஆசிரியர் ராஜ்கோபால் என்பவரை தற்காலிக இடைநீக்கம் செய்துள்ளது. கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன்
மட்டுமின்றி இன்னும் பல ஆசிரியர்கள் இப்படி உள்ளே இருப்பதும்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினரும் தீவிர விசாரணை நடத்தி
வருகின்றனர்.தமிழகத்தில் பள்ளி மாணவிகள் மீது ஆசிரியர்கள் பாலியல் வன்மம்
கொள்ளும் நிகழ்வுகள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. அவ்வாறு நடந்த சில குற்றச்
சம்பவங்களையும், அதில் கைதான ஆசிரியர்களையும் பார்க்கலாம்.
அதையடுத்து சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா
மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தும் பாலியல் புகாரில் சிக்கினார்.சென்னை பிரைம் தடகள பயிற்சி மையத்தின் பயிற்சியாளர் நாகராஜன் என்பவரும்
விளையாட்டு வீராங்கனைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கைதாகி சிறையில்
அடைக்கப்பட்டார்.
சென்னை போரூரை அடுத்த கெருகம்பாக்கத்தில் செயல்பட்டு
வரும் பத்ம சேஷாத்திரி மில்லினியம் பள்ளியில் கராத்தே பயிற்சியாளராக பணியாற்றி
வந்த கெபிராஜ் என்ற கராத்தே மாஸ்டர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், விளையாட்டு போட்டிகளுக்கு அழைத்துச்செல்லும்போதும் பாலியல் தொல்லை
கொடுத்ததாகவும் சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு இளம்பெண் ஒருவர், அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
சென்னை கேளம்பாக்கம் சுஷில்ஹரி இன்டர்நேஷனல்
பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பள்ளி மாணவிகள் பாலியல் புகார் கொடுத்ததன் பேரில்
அவர் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், அவருக்கு உடந்தையாக
இருந்ததாக சுஷில் ஹரி பள்ளியில் பணிபுரிந்த பாரதி, தீபா என்ற 2 பெண் ஆசிரியர்களும் போக்சோ
சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.சிவசங்கர் பாபாவுக்கு
எதிராக புகார்கள் கொடுக்க வேண்டும் என்றால் புலன்விசாரணை அதிகாரி குணவர்மன்
தொலைபேசி எண் வாயிலாக புகார்களை தெரிவிக்கலாம்என்று9840558992.மின்னஞ்சல் முகவரிக்கு inspocu2@gmail.com -ல் புகார்கள்
தெரிவிக்கலாம்.சிபிசிஐடி தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு முதல்
கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் அனைத்து செயல்படவில்லை. இதனால் ஆன்லைன் மூலம்
வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலிலும் கடந்த ஆண்டு இரண்டு
ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த அக்டோபர் மாதம் கார்த்திக்(26) என்ற ஆசிரியர் பள்ளி
மாணவர் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக கைது செய்யப்பட்டார். 9 வகுப்பு மாணவரை தனது வீட்டிற்கு அழைத்து பாடம் சொல்லி தருவதாக கூறி பாலியல்
ரிதியில் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பெயரில்
செங்கல்பட்டு காவல்துறை அவரை கைது செய்தது.
2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோவையின் துடியலூர் பகுதியில் அனைத்து மகளிர்
காவல்துறையினர் 50 வயது மதிக்கதக்க
ஆசிரியரை கைது செய்தனர். அவர் ஒரு பள்ளியில் 6 வகுப்பிற்கு ஆசிரியராக இருந்து வந்துள்ளார். அப்போது 6 வகுப்பு மற்றும் 7 வகுப்பு
மாணவிகளிடம் தவறாக நடக்க முற்பட்டுள்ளார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில்
பள்ளி நிர்வாகம் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. அதன்பின்னர் காவல்துறையிடம்
புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்த ஆசிரியரை கைது
செய்து போக்சோ சட்டம் உட்பட 8 பிரிவுகளின் கீழ்
வழக்குப் பதிவு செய்தனர்.
திருவண்ணாமலை ஆரணி மாவட்டத்திலும் 2019ஆம் ஆண்டு நித்யா(30) என்ற ஆசிரியை பாலியல் குற்றம் தொடர்பாக கைது
செய்யப்பட்டுள்ளார். இவருடைய கணவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு புகாரை
அளித்துள்ளார். அதில், இந்த ஆசிரியையின்
மொபைல் போனில் பல மாணவர்களுடன் தவறாக இருந்த படங்கள் இருப்பதாக கூறினார். அதனைத்
தொடர்ந்து நடந்த விசாரணயில் நித்யா நீண்ட நாட்களுக்கு இந்த தவறில் ஈடுபட்டு வந்தது
கண்டறியப்பட்டது. ஏற்கெனவே அவர் இருந்த ஒரு பள்ளியில் புகார் எழுந்ததன் பெயரில்
அவர் வேறு ஒரு பள்ளிக்கு மாற்றப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இது
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவை தவிர சேலத்தில்
கொண்டாலம்பட்டியில் தலைமை ஆசிரியர் ஒருவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக
கைது செய்யப்பட்டார். இதேபோல் தமிழ்நாட்டில் சமீபத்தில் சில ஆண்டுகளில் நிறையே
வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்தச் சூழலில் தற்போதும் அந்த அவலம் தொடர்ந்து வருவது
பெரும்அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.
2012-ஆம் ஆண்டு போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்பின்னர் பள்ளிகள் தங்களுடைய
நிறுவனத்தில் பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும்.
அத்துடன் மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு தொடர்பான விழிப்புணர்வையும் அளிக்க
வேண்டும். ஆனால் இந்த விஷயம் தொடர்பாக எந்த பள்ளியும் பெரியளவில் நடவடிக்கை
எடுக்கவில்லை. அதிகபட்சம் பள்ளியில் ஒரு குழு மட்டும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் புகார்
பேட்டியில் விழும் புகார்கள் தொடர்பாக இந்த குழுக்கள் விசாரணை செய்கின்றனவா என்பது
பெரிய கேள்வி குறியாக உள்ளது. மாணவர்களின் புகாரை பள்ளிகள் கேட்டு ஒழுங்கான
நடவடிக்கை எடுத்தால் இது போன்ற சம்பவங்கள் குறை வாய்ப்பு உள்ளதாக குழந்தை நல
ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.