சென்னை, ஜூன் 23–
அ.தி.மு.க. பொதுச்செயலாளர், முதல்–அமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே. நகர் தொகுதி 38–வது வார்டு சஞ்சய் காந்தி தெரு பட்டேல் நகரில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.அப்துல்ரஹீம் வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்தில் தீவிரமாக வாக்கு சேகரித்தார்.
அப்போது அங்குள்ள மக்கள் எங்கள் ஓட்டு அம்மாவுக்குதான் என்றனர். அமைச்சர் அப்துல் ரஹீம் செல்லும் இடங்களில் கட்சி பிரமுகர்கள் வேல்முருகன், மன்சூர், தீனதயாளன், கோலடி மகேந்திரன், தர்மலிங்கம், முகவை சுந்தரம், சுல்தான், தங்க குணசேகரன், கிருஷ்ண மூர்த்தி, காமராஜ்புரம் ரவி ஆகியோர் உடன் சென்றனர்.
No comments:
Post a Comment