பெரம்பூர், ஜூன். 23–
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் முதல்– அமைச்சர் ஜெயலலிதா அந்த தொகுதியில் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பிரசாரத்தை முடித்து விட்டு கொடுங்கையூர், வியாசர்பாடி வழியாக முதல்–அமைச்சர் செல்லும் வகையில் பயண திட்டம் வகுக்கப்பட்டிருந்தது.
இரவு 8.30 மணியளவில் கொடுங்கையூர், தண்டையார் பேட்டை நெடுஞ்சாலை, வியாசர்பாடி மெயின் ரோடுகளில் போக்குவரத்து முறைப்படுத்தப்பட்டது. அந்த பகுதி முழுவதும் போலீசார் பாதுகாப்பு அரண்போல் நின்றிருந்தனர். திடீரென்று அந்த பாதையில் ஒரு ஆட்டோ புகுந்தது. போலீசார் தடுத்தும் நிற்காமல் ஜெயலலிதா வரும் திசையிலேயே அந்த ஆட்டோவும் வேகமாக சென்றது.
இதனால் கடும் கோபத்துக்கு உள்ளான போலீசார் அவர்களை சிறிது தூரம் விரட்டி சென்று மடக்கினார்கள்.
ஆட்டோவில் 3 வாலிபர்கள் இருந்தனர். அனைவரும் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்
No comments:
Post a Comment