Tuesday, 23 June 2015

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தனியார் நிறுவன பணியாளர்களுக்கு 27-ம் தேதி சம்பளத்துடன் ஒருநாள் விடுமுறை

சென்னை, ஜூன் 23-

தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு நாளான வரும் 27-ம் தேதி அந்த தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் தனியார் நிறுவன பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆர்.கே. நகர் தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள தனியாருக்கு சொந்தமான வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள், உணவகங்கள், கடைகள் ஆகியவற்றில் தினக்கூலியாகவும், சம்பளம் மற்றும் குத்தகை அடிப்படையிலும் பணியாற்றுபவர்களுக்கும், வாகன ஓட்டுனர்களுக்கும் 27-ம் தேதி ஒருநாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment