Tuesday, 23 June 2015

சென்னை, ஜூன் 23– சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களை பிடிக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். இதற்காக தினமும் நூற்றுகணக்கான சந்திப்புகளில் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். மின்னல் வேகத்தில் வாகனம் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணியாமல் கார் ஓட்டுபவர்கள், ஹெல்மெட் அணியாமல் இரண்டு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்று போக்குவரத்தை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் சுமார் 1000 பேர் வரை விபத்தில் சிக்கி உயிர் இழக்கிறார்கள். இந்த உயிரிழப்பை தடுப்பதற்காக போக்குவரத்து போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் பயனாக இந்த ஆண்டு கடந்த 5 மாதத்தில் மட்டும் விபத்தில் பெருமளவு உயிர் பலி தடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரையில்(ஜனவரி முதல் மே மாதம் வரை) போக்குவரத்து விதி முறைகளை மீதியதாக 10 லட்சத்து 70 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 8 லட்சத்து 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. போக்குவரத்து போலீசாரின் அதிரடி நடவடிக்கை காரணமாக உயிரிழிப்பு வெகுவாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டின் 5 மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை, ஜூன் 23–
சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களை பிடிக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். இதற்காக தினமும் நூற்றுகணக்கான சந்திப்புகளில் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.
மின்னல் வேகத்தில் வாகனம் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணியாமல் கார் ஓட்டுபவர்கள், ஹெல்மெட் அணியாமல் இரண்டு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுபோன்று போக்குவரத்தை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் சுமார் 1000 பேர் வரை விபத்தில் சிக்கி உயிர் இழக்கிறார்கள்.
இந்த உயிரிழப்பை தடுப்பதற்காக போக்குவரத்து போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் பயனாக இந்த ஆண்டு கடந்த 5 மாதத்தில் மட்டும் விபத்தில் பெருமளவு உயிர் பலி தடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இதுவரையில்(ஜனவரி முதல் மே மாதம் வரை) போக்குவரத்து விதி முறைகளை மீதியதாக 10 லட்சத்து 70 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 8 லட்சத்து 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
போக்குவரத்து போலீசாரின் அதிரடி நடவடிக்கை காரணமாக உயிரிழிப்பு வெகுவாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டின் 5 மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment