Monday, 5 July 2021

ரபேல் விமான பேர ஊழல் -நீதி விசாரணைக்கு உத்தரவிட்டது பிரான்ஸ்-மீண்டும் வெடிக்கும் ரபேல் விவகாரம்

 ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு தொடர்பாக விசாரிக்க பிரான்ஸ் அரசு தனி நீதிபதியை நியமித்ததை அடுத்து, இந்தியாவில் அந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்கத் தொடங்கியுள்ளது. 




கடந்த மன்மோகன்சிங் தலைமையிலான ஆட்சியில் 2014ம் ஆண்டு மார்ச் மாதம் எச்.ஏ.எல். மற்றும் டசால்ட் நிறுவனம் இடையே தான் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போது, ஒரு விமானத்தின் விலை ரூ.526 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. ஆனால், பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரனுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு விமானத்தின் விலை ரூ.1,607 கோடி என்ற அடிப்படையில், ரூ.59 ஆயிரம் மோடிக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மறுஒப்பந்தம் செய்யப்பட்டது. முந்தைய ஒப்பந்தத்திற்கு பதிலாக ரிலையன்ஸ் மற்றும் டசால்ட் நிறுவனம் இடையே ரபேல் போர் விமான ஒப்பந்தம் கையெழுத்தானது.


இந்திய விமானப் படைக்கு பிரான்ஸ் நாட்டில் இருந்து ரூபாய் 59 ஆயிரம் கோடி மதிப்பில் ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தொடக்கம் முதல் எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இந்த குற்றச்சாட்டுகளை மத்திய அரசு நிராகரித்தது. விமானங்களும் தயாரிக்கப்பட்டு, இந்தியாவிடம் இதுவரையில் 10க்கும் மேற்பட்ட ரபேல் விமானங்கள் ஒப்படைக்கப்பட்டு விட்டன. இதுதொடர்பாக, அந்த நாட்டின் மீடியாபார்ட் என்ற செய்தி நிறுவனம் மேற்கொண்ட புலன் விசாரணையில், ரபேல் ஒப்பந்தத்திற்காக இந்தியாவில் உள்ள தரகருக்கு பல கோடி ரூபாய் லஞ்சமாக அளிக்கப்பட்டதாக செய்தி வெளியிட்டது.



மேலும், பிரான்சில் உள்ள ஷெர்பா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனமும் இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த நாட்டு அரசை வலியுறுத்தியது. இதையடுத்து, ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக நீதி விசாரணை நடத்துவதற்கு அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான தனி நீதிபதியையும் அந்த நாட்டு அரசு நியமித்துள்ளது.


பிரான்ஸ் அரசு ரபேல் போர் ஒப்பந்த விவகாரம் குறித்து விசாரிக்க தனி நீதிபதியை நியமித்ததை அடுத்து, காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்தது தற்போது தெளிவாக தெரிகிறது. இந்த ஒப்பந்தம் குறித்து நீதிவிசாரணை நடத்த பிரான்ஸ் அரசு உத்தரவிட்டதன் மூலம் காங்கிரஸ் மற்றும் ராகுல்காந்தி ஆகியோரின் குற்றச்சாட்டு நிரூபணமாகி உள்ளது. இதுதொடர்பாக, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இது காங்கிரஸ் – பா.ஜ.க. மோதல் கிடையாது. இது நாட்டின் பாதுகாப்பு விவகாரம் என்று கூறியுள்ளார்.



இந்த விவகாரம் தொடர்பாக நிரூபர்களுக்கு பேட்டி அளித்த பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் சம்பித்பத்ரா, ராகுல்காந்தியின் நடவடிக்கையை பார்க்கையில் ரபேலைத் தயாரிக்கும் டசால்ட் நிறுவனத்திற்கு எதிரான போட்டி நிறுவனங்களின் கைப்பாவையாக அவர் பயன்படுத்தப்படுகிறார் என்று கூறினால் அது மிகையல்ல. இந்த விவகாரத்தில் அவர் தொடக்கம் முதல் பொய் கூறி வருகிறார். அவர் ஏஜெண்டைப் போல அல்லது போட்டி நிறுவனத்தில் இருக்கும் நபர் போல நடந்து கொள்கிறார்.

ராகுல்காந்தியும், அவரது கட்சியினரும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருவது நாட்டை வலுவிழக்கச் செய்யும் முயற்சி. ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பொய் மற்றும் தவறான தகவல்களை காங்கிரஸ் பரப்பி வருகிறது. பிரான்ஸ் தன்னார்வ தொண்டு நிறுவனம் கூறிய புகாரை பற்றி விசாரிக்கவே பிரான்ஸ் அரசு தனி நீதிபதியை நியமித்துள்ளது. இதை ஊழல் விவகாரமாக பார்க்க கூடாது என்றார்.


 வரும் 19-ந் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு விவகாரம், பிரான்ஸ் அரசு தனி நீதிபதியை நியமித்துள்ளது குறித்து காங்கிரஸ் கட்சிகள் கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளது.


Sunday, 4 July 2021

மேகதாது அணை விவகாரம்: மத்திய மந்திரி கஜேந்திர செகாவத்துடன் துரைமுருகன் சந்திப்பு

 மேகதாது அணை கட்டுவதை ஏற்க முடியாது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில், தமிழக நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகனின் டெல்லி பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. 







தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் கர்நாடக வனப்பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான மார்கண்டேய நதியின் குறுக்கே எரகோள் என்னும் இடத்தில் கர்நாடக அரசு தடுப்பணையை கட்டியுள்ளது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


மேகதாது அணை திட்டத்தை எதிர்க்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்து, கர்நாடக முதல் மந்திரி  எடியூரப்பா, தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பதில் கடிதம் அனுப்பினார்.

அதில், நீர் மின் நிலையத்துடன் கூடிய மேகதாது அணையை, தமிழ்நாட்டில் உள்ள இரண்டு நீர் மின் நிலையங்களுடன் ஒப்பிடுவதை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் நிலையை கருத்தில் கொண்டு, மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார். 


தமிழக நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர செகாவத்தை சந்தித்துப் பேசுகிறார். அப்போது மேகதாது அணைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்ற கருத்தை அவர் வலியுறுத்த உள்ளார். தென்பெண்ணையாற்றின் கிளை நதியான மார்கண்டேய நதியில் கர்நாடகம் அணை கட்டியது குறித்தும் ஆலோசிக்க உள்ள துரைமுருகன், நடுவர் மன்றம் அமைக்கவும் கோரிக்கை வைக்க உள்ளார்.

இதுதவிர, முல்லைப்பெரியாறு அணை விவகாரம் குறித்தும் மத்திய மந்திரியுடன் விவாதிப்பார் எனத் தெரிகிறது. மேலும், நதிநீர் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்த மனுவையும் மத்திய அமைச்சரிடம் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


உலர் பழத்தின்(Dry Fruits) நன்மைகள் ..

 உலர் பழத்தின்(Dry Fruits) நன்மைகள் ..


உலர் பழங்களில் அனைவருக்கும் தெரிந்தது உலர் திராட்சை, உலர் ஆப்ரிக்காட், உலர்ந்த அத்திப்பழம் போன்றவை தான். ஆனால் உலர் பழங்களில் இன்னும் நிறைய உள்ளன.

உலர்பழங்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருபவை. பழங்களில் உள்ள நீர்ச்சத்தை வற்றச் செய்து உலர் பழங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதன் மூலம் பழங்கள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

பழங்களில் நிறைய சத்துக்கள் உள்ளது என்று நன்கு தெரியும். அதேப் போன்றே உலர் பழங்களிலும் சத்துக்கள் உள்ளன. ஏனெனில் உலர் பழங்கள் பழங்களில் இருந்து வந்ததே ஆகும். இவை உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, உடல் எடையையும் குறைக்க உதவியாக இருக்கும்.

பழங்களை உலர்த்துவதன் மூலம் ஒரு பருவ காலத்தின் பழங்களை மற்றொரு பருவ காலத்தில் உண்ண முடிகிறது. உலர் பழங்களின் சுவையும், மணமும் வெகு நாட்களுக்கு இருக்கும்.


உலர் பழங்களுக்கு கலோரிகள் அதிகம். மேலும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தர விட்டமின்கள், மினரல்கள் இவற்றில் நிறைய உள்ளன. உலர் பழங்கள் வெகு எளிதில் செரிமானமாகக் கூடியவை. ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் ஆற்றல் கொண்டவை. பலவீனமானவர்கள் உலர் பழங்கள் உண்டால் விரைவில் இயல்பான ஆரோக்கியத்தை அடையலாம்.

இதயத்திற்கும் நல்லது. உலர்ந்த திராட்சை புரதச் சத்தும் நிறைந்தது. வேர்க்கடலையில் நார்ச் சத்தும் பேரீச்சம்பழத்தில் தாதுச் சத்தும் நிறைந்துள்ளன. இவ்வளவு சத்துள்ள உலர் பழங்களை அன்றாடம் உண்டு ஆரோக்கியம் பெறுவோம்.

உலர் திராட்சை இனிப்புடன் இருப்பதோடு, மேலும் இதில் சோடியம் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும், கொழுப்பின்றி இருக்கும்.


அத்திப்பழம் பெண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் மாதவிடாய் காலங்களில் பெண்கள் அதிகம் சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும்.

மத்திய அரசை 'ஒன்றிய அரசு' என கூறி சிறுமைப்படுத்துவது மக்கள் நலன் பயக்கும் செயல் அல்ல - அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்

இந்திய நாடு பிரிக்க முடியாத ஒன்றிணைக்கப்பட்ட ஒரு தேசம்; ஒன்றிய அரசு என கூறுவது நியாயம் இல்லை .தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் திமுக அரசு கவனம் செலுத்த வேண்டும் - ஓபிஎஸ்

சென்னை,


 இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

'தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று கூறிய முத்துராமலிங்க தேவர் பிறந்த தமிழ் நாட்டில் தேசியத்திற்கு எதிரான செயல்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதை பார்க்கும் போது தமிழ்நாடு திசைமாறிச் செல்கிறது என்கிற எண்ணம் பொதுமக்களிடையே மேலோங்கி நிற்கிறது.

2019 ஆம் ஆண்டு, ஜூலை 19 ஆம் தேதி தமிழக சட்டப் பேரவையில் பேசிய அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் இப்போதைய முதல்வர் ஸ்டாலின், வரக்கூடிய காலகட்டத்திலேயே திமுக ஆட்சிக்கு வரப் போகிறது அப்படி வருகிற நேரத்தில் தேர்தலில் நாங்கள் என்ற உறுதிமொழியை வாக்குறுதிகளை வழங்கி இருக்கிறோமோ அவற்றை நிச்சயமாக செய்வோம். சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்வோம் என்று கூறினார். ஒருவேளை அந்த சொல்லாததில் 'ஒன்றிய அரசு' என்ற வார்த்தையும் 'ஜெய்ஹிந்த்' என்ற சொல் ஆளுநர் உரையில் இடம் பெறாததால் தமிழகம் தலைநிமிர்ந்து விட்டது என்ற வாசகமும் அடங்கி உள்ளது போலும்.

திமுக ஆட்சி தமிழகத்தில் அமைந்ததிலிருந்து மத்திய அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது. அதற்கான காரணத்தை தமிழக முதல்வர் கடந்த ஜூன் 23 அன்று தமிழக சட்டமன்றப் பேரவையில் அளித்திருப்பது விசித்திரமாக இருக்கிறது. அதிலே இந்திய அரசமைப்பு சட்டத்தின் முதல் வரி இந்தியா அதாவது பாரதம் மாநிலங்களைக் கொண்ட ஒரு ஒன்றியமாக இருக்கும் என்று குறிப்பிட்டு இருப்பதாக சுட்டிக் காட்டி அதைத்தான் பயன்படுத்துகிறோமே தவிர சட்டத்தில் இல்லாத நாங்கள் பயன்படுத்தவில்லை என்றும் ஒன்றியம் என்பது தவறான சொல் அல்ல என்றும் மாநிலங்கள் ஒன்று சேர்ந்தது என்பதே அதன் பொருள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் அது பொருளல்ல சட்டமேதை அம்பேத்கரால் வடிவமைக்கப்பட்ட இந்திய அரசமைப்பு சட்டம் பகுதி 5 இன் படி யூனியன் என்றால் பல்வேறு அமைப்புகளை உள்ளடக்கிய இந்திய நாட்டைக் குறிக்கும் சொல்லே தவிர இந்திய அரசை குறிக்கும் சொல் அல்ல. எனவே யூனியன் ஆஃப் ஸ்டேட் என்பதற்கு பொருள் மாநிலங்களை உள்ளடக்கிய யூனியன் என்பதுதான். தமிழக முதல்வர் தனது பேச்சில் அண்ணா 1963 ஆம் ஆண்டு மாநிலங்களவையில் பேசியதையும், மா.பொசியும், ராஜாஜியும் குறிப்பிட்ட சில வார்த்தைகளை சுட்டிக்காட்டி அவற்றில் கூட்டாட்சி தத்துவம் அடங்கி இருக்கிறது என்றும் அதற்காக ஒன்றியம் என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகிறோம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

கூட்டாட்சி தத்துவம் குறித்து தலைவர்கள் கூறிய வார்த்தைகளை வைத்து இந்திய அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிடுகிறோம் என்பதில் நியாயம் இருப்பதாக தெரியவில்லை. இந்த ஒப்பீடு பொருத்தமானதாக இல்லை. ஏனென்றால் எந்த தலைவரும் இந்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறவில்லை இன்னும் சொல்லப்போனால் மாநிலங்கள் திருப்பித் தரப்பட்டுள்ளது என்று தான் அண்ணாவே 1963 மக்களவையில் பேசியிருக்கிறார்.

அதாவது மாநிலங்களை பிரித்து கொடுப்பதற்கான அதிகாரம் இந்திய அரசிடம்தான் இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார். எனவே மாநிலங்கள் ஒன்று சேர்ந்தது என்பதுதான் யூனியன் என்ற வார்த்தையின் பொருள் என்ற வாதம் சரியானதல்ல. மொத்தத்தில் மாநிலங்களை உள்ளடக்கிய யூனியன் என்பதுதான் யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ் என்பதற்கு பொருள் என்பதையும் இந்திய நாடு பிரிக்கப்பட முடியாத ஒன்றிணைக்கப்பட்ட ஒரு தேசம் என்பதையும் யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ் என்ற வாசகம் நமக்கு உணர்த்துகிறது என்பதும் இந்த தருணத்தில் நான் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

அதே சமயத்தில் இந்திய அரசைப் பற்றி குறிப்பிடும்போது கவர்மெண்ட் ஆப் இந்தியா என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது எனவே இந்திய நாட்டை ஆளும் ஒரு அரசைக் குறிப்பிடும் போது எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இந்திய அரசு என்று குறிப்பிடுவதுதான் பொருத்தமான ஒன்றாகும். ஆனால் இப்போதைய திமுக அரசு ஒன்றிய அரசு என்று குறிப்பிடுகிறது. தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட பல அரசினர் தீர்மானங்களில் இந்திய பேரரசு என்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டிருப்பதை இந்த தருணத்தில் நான் நினைவூட்ட விரும்புகிறேன்.

இந்திய அரசை ஒன்றிய அரசு என்று சொல்வது நமது இந்தியத் திருநாட்டை கொச்சைப்படுத்துவது போல் சிறுமைப்படுத்துவது போல் அமைந்து உள்ளது என்று தமிழ்நாட்டு மக்கள் நினைக்கிறார்கள் என்பதை முதலில் முதல்வருக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மத்திய அரசுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து தமிழ்நாட்டின் உரிமைகளை, கோரிக்கைகளை, வாழ்வாதாரப் பிரச்சினைகளை, நலன்களை வென்றெடுக்க நடவடிக்கை எடுக்காமல் இந்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறி சிறுமைப் படுத்துவது மக்கள் நலன் பயக்கும் செயல் அல்ல என்பதையும் இதுபோன்ற செயல் ஏற்றுக் கொள்ள கூடியது அல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, 3 July 2021

ரேஷன் பொருட்களின் தரத்தினை உறுதிப்படுத்த வேண்டும்.எடைக் குறைவு போன்றவற்றை களைந்து தரமான சேவையை மக்களுக்கு வழங்க வேண்டும்._ தமிழக முதல்வர்

  ரேஷன் அட்டை  இல்லாமல்  பலதரப்பு மக்கள் வேதனையுடன்  அரசு வழங்கும்  சலுகைகளை பெறமுடியாமல் தவித்து வருகின்றனர் . அப்படியே பதிவு செய்தாலும் அதிகாரிகள் பொறுப்புணர்வோடு  செயல்பட்டு அந்தக்குறிப்பிட்ட  நாட்களுக்குள் கொடுப்பதும் இல்லை .மக்களை அலைக்கழித்துவருகின்றனர். அப்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக முதல்வர் கொடுத்த அறிக்கை  ஆறுதலையும் மகிழ்ச்சியையும்  கொடுக்கும் .


  ரேஷன் பொருட்களின் தரத்தினை உறுதிப்படுத்தவது குறித்தும், புதிய ரேஷன் அட்டைகளை வழங்குவது குறித்தும், தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

அவை


ரேஷன் பொருட்கள் வழங்குவது குறித்து, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது:

ரேஷன் பொருட்களின் தரத்தினை உறுதிப்படுத்த வேண்டும். ரேஷன் கடைகளில் தரமான அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும். எடைக் குறைவு போன்றவற்றை களைந்து தரமான சேவையை மக்களுக்கு வழங்க வேண்டும்.

ரேஷன் பொருட்களின் தரத்தினை உறுதிப்படுத்தவது குறித்தும், புதிய ரேஷன் அட்டைகளை வழங்குவது குறித்தும், தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.


ரேஷன் பொருட்கள் வழங்குவது குறித்து, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது:

ரேஷன் பொருட்களின் தரத்தினை உறுதிப்படுத்த வேண்டும். ரேஷன் கடைகளில் தரமான அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும். எடைக் குறைவு போன்றவற்றை களைந்து தரமான சேவையை மக்களுக்கு வழங்க வேண்டும்.

இதயம் அறக்கட்டளை உரிமையாளர் சிவக்குமார் மற்றும் மாதர்ஷா ஆகியோர் இன்று கைது

 மதுரையில்இதயம் அறக்கட்டளை காப்பகம் மூலம் குழந்தைகளை விற்ற வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த சிவக்குமார், மாதர்ஷா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதயம் அறக்கட்டளை காப்பகம் மூலம் குழந்தைகள் விற்கப்பட்ட வழக்கில் இருவரும் தேடப்பட்டு வந்தனர். காப்பக நிர்வாகிகள், குழந்தைகளை விற்றவர்கள், வாங்கியவர்கள், இடைத்தரகர்கள் என ஏற்கனவே 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 




இந்நிலையில் இதயம் அறக்கட்டளை உரிமையாளர் சிவக்குமார் மற்றும் மாதர்ஷா ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்

முன்னாள் அமைச்சர் பழனியப்பன் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

 


அமமுக தலைமை நிலைய செயலாளரும், தினகரனின் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்தவர் பழனியப்பன். இவர் அதிமுக ஆட்சிக்காலத்தில் உயர்கல்வித் துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் . மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின்போது உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த பழனியப்பன், ஜெயலிதாவின் மறைவுக்குப் பின்னர் தினகரன் அணியுடன் ஆதரவாக செயல்பட்டு அதனால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து தினகரன் தலைமையில் அமமுகவில் தொடர்ந்து செயல்பட்டுவந்தார்.

கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.அதே நேரத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில், அமமுகவில் இருந்து வெளியேறி திமுகவில் இணைந்தவர்களுக்கு ஸ்டாலின் கௌரவமான பதவிகளை கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் டிடிவி தினகரனின் முக்கிய விசுவாசியும், அவரின் வலதுகரமாக செயல்பட்டுவந்த பழனியப்பன் அமமுகவில் இருந்து விலகி இன்று திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கோவில், புறம்போக்கு நிலங்கள்.. தமிழக அரசுக்கும், இந்து சமய அறநிலையத் துறைக்கும்அதிரடி உத்தரவிட்ட ஹைகோர்ட்


  தமிழகம் முழுவதும் கோவில் புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்ட நிலங்கள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கும், இந்து சமய அறநிலையத் துறைக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 சேலம் மாவட்டம் உலிபுரத்தில் உள்ள அருள்மிகு கம்பராய பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 3.88 ஏக்கர் நிலத்தை, ஆனந்தன் என்பவர் ஆக்கிரமித்து உள்ளதாகவும், ஆக்கிரமிப்பை அகற்றி நிலத்தை மீட்க இந்து சமய அறநிலையத்துறை, சேலம் மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகத்துக்கு உத்தரவிடக் கோரி, சேலத்தை சேர்ந்த A .ராதாகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, என்.கிருபாகரன் மற்றும் எஸ்.கண்ணம்மாள் ஆகிய  நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 2015ம் ஆண்டு மே 25ம் தேதியே கோவில் புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்ட நிலங்களின் விவரங்கள் குறித்து அறிக்கை அளிக்கும்படி மேட்டூர் துணை ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டும், இதுவரை அவர்கள் அறிக்கை அளிக்கவில்லை என மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

 இதனையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் வட்ட வாரியாக கோவில், புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்ட நிலங்கள் குறித்த விவரங்களை தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு நில நிர்வாக ஆணையர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 9ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்துள்ளனர்.




தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் இலவச RNI ஆண்டு அறிக்கை சிறப்பு முகாம்

 


தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் இலவச RNI ஆண்டு அறிக்கை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.


நாளிதழ், வார இதழ், மாதமிருமுறை இதழ், மாத இதழ் உள்ளிட்ட பதிவு பெற்ற பத்திரிகைகள் அனைத்தும் ஆண்டுதோறும் ஆண்டறிக்கை (e-filing Annual Statements) தாக்கல் செய்ய வேண்டும். இதற்கு கடைசி தேதி 31.07.2021.

எனவே தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் நடைபெற உள்ள இந்த இலவச சிறப்பு முகாமை பத்திரிகை வெளியீட்டாளர்கள் & ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

நாள்: 05.07.2021 முதல் 15.07.2021 வரை
இடம்: சங்க அலுவலகம், விருகம்பாக்கம் சென்னை.92

என்றும் பத்திரிகையாளர் நலனில்..
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்
தலைமையகம்
9840035480

Friday, 2 July 2021

கஞ்சா, குட்கா, போதை பொருட்கள் பதுக்கிவைத்திருந்த இருவர் கைது .

 கன்னியாகுமரி மாவட்டத்தில், கஞ்சா, குட்கா, போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ. பத்ரி நாராயணன் IPS  கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

 இது தொடர்பாக தீவிரமாக கண்காணிக்கவும் உத்தரவிட்டார். இந்நிலையில் இரணியல் காவல் நிலைய ஆய்வாளர் திரு தங்கராஜ் மேற்பார்வையில்,உதவி ஆய்வாளர்  சுந்தர் ராஜ்  மற்றும் காவல் துறையினரோடு  பேயன்குழி மீன் மார்க்கெட் அருகில் ரோந்து சென்று கொண்டிருந்தனர். 



 அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற இருவரை பிடித்து விசாரித்த போது அவர்கள்  செம்பொன்விளையை சேர்ந்த ஜோயலின் ஜோ  மற்றும் மண்டைக்காடு பகுதியை சேர்ந்த ஜான் கிறிஸ்டோபர் என்பதும், அவர்களை தீவிர விசாரணை செய்த போது அவர்கள் சுமார் 2 லட்சம் மதிப்புள்ள 150 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர் . 


குறிப்பாக சிறுவர்களுக்கு விற்பனை செய்ய வைத்திருந்தது தெரியவந்தது. பின்பு இருவரையும் பிடித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.

தொற்று சிறிது அதிகரித்து வரும் நிலையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.-மா.சுப்பிரமணியன்

 பொது சுகாதாரத் துறை மற்றும் யுனிசெப் இணைந்து நடத்தும் கொரோனா விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை  சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருவான்மியூரில் இன்று  கொடியசைத்து துவக்கி வைத்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

, தஞ்சை, கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு சிறிய அளவில் அதிகரித்துள்ளது. அதிக பாதிப்பு இருக்கும் மாவட்டங்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளது. தொற்று சிறிது அதிகரித்து வரும் நிலையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தொற்று குறைந்து வந்தாலும் பரிசோதனை எண்ணிக்கையை அரசு குறைக்கவில்லை. இரண்டு தடுப்பூசிகள் தான் இப்போதைக்கு கொள்முதல் செய்து கொடுக்கப்படுகிறது. பிற தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட்டு தமிழகத்திற்கு கொடுக்கப்பட்டால் மக்களுக்கு செலுத்தப்படும் என்று கூறினார்.

ஒரு கோடியே 56 லட்சம் தடுப்பூசிகள் இதுவரை தமிழகத்திற்கு வந்துள்ளன. ஒரு கோடியே 48 லட்சம் பேர் தடுப்பு செலுத்தி கொண்டுள்ளனர். தற்போது கையிருப்பில் உள்ள தடுப்பூசி இரண்டு மூன்று நாட்களுக்கு போதுமானதாக இருக்கும். நேற்று ஒரே நாளில் 8 லட்சத்துக்கும் மேல் தடுப்பூசிகள் வந்தடைந்தன என்றும் தெரிவித்தார். மேலும், திமுக அரசு வெளிப்படைத் தன்மையுடன் கூடிய அரசு என்றும் ஒப்பந்தங்களாக இருந்தாலும் இடமாற்றங்கள் ஆக இருந்தாலும் அனைத்தையும் வெளிப்படையாக அறிவிக்கிறது.

இனி மாவட்ட வாரியாக எடுக்கப்படும் கொரோனா மாதிரி பரிசோதனை விவரமும் செய்திக்குறிப்பில் தெரியப்படுத்தப்படும். என்றும் அமைச்சர் கூறினார்.

5 மாவட்டங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு- ராதாகிருஷ்ணன்

 5 மாவட்டங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தஞ்சை, மதுரை, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் அதற்கான காரணத்தை ஆராய்ந்து மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது, ஊரடங்கு தளர்வுகளின் தாக்கம் அடுத்த சில நாள்களில் தான் தெரியும் என்பதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.

 குறிப்பாக, மக்கள் கூடும் இடங்களில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். வழிபாட்டு தலங்கள், பஸ் நிலையங்கள், சந்தைகளில் நோய் தடுப்பு விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என கண்காணிக்க வேண்டும். சில மாவட்டங்களில் வழக்கத்தை விட குறைவான மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்தும் இரண்டு நாட்களை விட அதிகமான எண்ணிக்கையில் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவ்வாறாக, தஞ்சாவூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது.

தொற்று அதிகரிப்புக்கான காரணம் என்ன எந்த இடத்தில் இருந்து தொற்று அதிகமாக பரவுகிறது என்ற விபரங்களை சம்பந்தப்பட்ட கலெக்டர்கள் கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாதிப்பு அதிகம் உள்ள தெருக்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் ஆய்வு செய்து கள நிலவரத்தை அறிதல் அவசியம்.

காய்ச்சல் முகாம்களை தொடர்ந்து நடத்துவதையும் குறைந்தபட்சம், 100 பேரையாவது பங்கேற்க வைப்பதையும் உறுதி செய்ய வேண்டும். தொற்று பரவல் குறைவாக உள்ள இடமாக இருந்தாலும் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறைந்தது 20 பேரையாவது கண்காணித்து பரிசோதனை நடத்த வேண்டும். மற்றொரு புறம் தொழில் நிறுவனங்கள் போன்ற இடங்களில் நோய் தொற்று பரவுகிறதா என்பதையும் கண்காணித்தல் அவசியம். தீவிர நடவடிக்கைகளின் வாயிலாக மட்டுமே, கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்பதை உணர்ந்து செயலாற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அரசு உதவி பெறும் ITI மற்றும் தனியார் ITI-ல் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் ITI மற்றும் தனியார் ITI-ல் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழகம் முழுவதும்  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடந்து வருகிறது. மேலும் ஒருசில பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

இந்நிலையில் அரசு, அரசு உதவி பெறும் ITI மற்றும் தனியார் ITI-ல் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர 8 மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வரும் 28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்  அறிவிக்கப்பட்டுள்ளது.

8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் https://t.co/ePrTZ05lKP என்ற இணையதளத்தில் வரும் 28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

பிற்படுத்தப்பட்ட சாதிகளைக் கண்டறியவோ, பட்டியல்படுத்தவோ, பட்டியலை மாற்றியமைக்கவோ மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை” -உச்ச நீதிமன்றம்

 மராத்தா வகுப்பினருக்கு மகாராஷ்டிரா மாநில அரசு 16 சதவீத இட ஒதுக்கீடு அளித்ததை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, பிற்படுத்தப்பட்ட சாதிகளைக் கண்டறியவோ, பட்டியல்படுத்தவோ, பட்டியலை மாற்றியமைக்கவோ மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை” என தீர்ப்பளித்துள்ளது.






தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு-புவியரசன்


 தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு



சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 2) சேலம், தர்மபுரி, மதுரை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தின் காரணமாக இன்று (ஜூலை 2) சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர் ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ஜூலை 3:

சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பத்தூர், கோவை, ஈரோடு, விழுப்புரம், கடலூர் ஆகிய 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ஜூலை4 


சேலம், நாமக்கல், பெரம்பலூர்,அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும்

ஜூலை 5

வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும்

ஜூலை 6

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய(நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி , காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ட வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணிநேரத்தில் ஆண்டிபட்டியில் 13 செ.மீ., அரியலூரில் 11 செ.மீ., மதுரை தெற்கு மற்றும் கடவனூரில் (கள்ளக்குறிச்சி) தலா 10 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்க கடல் பகுதிகளில் இன்று முதல் ஜூலை 4ம் தேதி வரை மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மன்னார் வளைகுடா பகுதிகளில் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அரபிக்கடல் பகுதிகளில் இன்று முதல் ஜூலை 6ம் தேதி வரை மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், தென்மேற்கு, மத்திய மேற்கு மற்றும் வடக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

- இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்


சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காகத்தான்; அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல - நடிகர் சூர்யா.

 ஒளிப்பதிவு சட்டத்தில் ஒன்றிய அரசு திருத்தும் கொண்டு வருவதற்கு நடிகர் சூர்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தணிக்கை துரையின் இறையாண்மையை பறிக்கும் வகையில் சட்டம் இயற்ற ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது.



சினிமா தணிக்கை சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் கலைக்கப்பட்ட 2 மாதத்தில் சட்டம் திருத்தும் செய்ய முயற்சி செய்யப்படுகிறது.ஒன்றிய அரசின் புதிய சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திரை துறையினர் கருத்துக்களை பதிவிட சூர்யா அழைப்பு விடுத்திருக்கிறார்.

மேலும் ஒளிப்பதிவு சட்டத்தின் திருத்தம் செய்வதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் எனவும் நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் ஊரடங்கில் 3 வகையாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களை ஒன்றாக்கி ஒரே மாதிரியான தளர்வுகள் தர திட்டம்..!!

 சென்னை: தமிழகத்தில் ஊரடங்கில் 3 வகையாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களை ஒன்றாக்கி தளர்வுகள் தர திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா குறைவதால் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் தர அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதிப்பு அதிகமிருந்த கோவை, ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால் அரசு கூடுதல் தளர்வுகள் அறிவிக்க திட்டமிட்டுள்ளது.

வேலூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை! அதிகாரிகள் சமரசம் !!

 

வேலூர்: வேலூர், அரசு மருத்துவமனை கொரோனா வார்டிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட, 100 செவிலியர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கடந்த சில மாதங்களாக, கொரோனா இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டவர்கள் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதற்காக, 100 செவிலியர்கள் கொரோனா வார்டில் தற்காலிக பணியில் இருந்தனர். தற்போது, கொரோனா தாக்கம் குறைந்ததால், தற்காலிக பணியில் இருந்த செவிலியர்களுக்கு பணி இல்லாததால், அவர்கள் நேற்று முன்தினம் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதனால், மீண்டும் பணி வழங்கக்கோரி நேற்று காலை, 11:00 மணிக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதிகாரிகள் மனுவை பெற்றுக்கொண்டு அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினர்.

தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் .

 பள்ளி மாணவி ஒருவர், தனக்கு ஏற்பட்ட மனச்சோர்வினால் தன் தலைமுடியையே பிய்த்துச் சாப்பிட்டது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விழுப்புரத்தில்  வசித்துவரும் 15 வயதுடைய  பள்ளி மாணவி ஒருவருக்கு அரியவகை மனச்சோர்வு ஏற்பட்டு, தன் தலைமுடியை தானே  பிய்த்து சாப்பிட்டுள்ளார். சுமார் 1 கிலோ எடை கொண்ட முடியை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர் ராஜமகேந்திரன் அகற்றியுள்ளார்.

தனியார் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்புப் படித்து வரும் விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் வீட்டில் இருந்தபடியே தினமும் சுமார் 6 மணி நேரம் வரை ஆன்லைன் வகுப்பில் படித்து வந்துள்ளார். 

பெற்றோர் இருவரும் பணிக்கு சென்றுவிடுவதால் தன் பாட்டியுடன் வீட்டில் இருந்த அச்சிறுமிக்கு திடீரென வயிற்றுவலி, வாந்தி என, தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்து சோதனை மேற்கொண்டபோது, வயிற்றில் கட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மருத்துவர் மகேந்திரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் கடந்த வாரம் அறுவை சிகிச்சை செய்து அச்சிறுமியின் வயிற்றிலிருந்து சுமார் ஒரு கிலோ எடையுள்ள முடிகளால் ஆன கட்டியை அகற்றியுள்ளனர்.

இது குறித்து, குடல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ராஜமகேந்திரன் கூறுகையில், "குழந்தைகள் பள்ளிக்கு செல்லும்போது நண்பர்களுடன் உரையாடிவிட்டு வீட்டுக்கு உற்சாகமாக வருவார்கள். ஆனால், தற்போது கரோனா பெருந்தொற்று காரணமாக, பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் செல்லாமல் ஆன்லைன் மூலம் பாடம் கற்றுவருகின்றனர்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஆன்லைனில் படிக்கும் மாணவ, மாணவிகளை வீட்டில் இருப்பவர்கள் கண்காணிக்க வேண்டும். எங்கள் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட சிறுமிக்கு வயிற்று வலி, வாந்தி, மேலும் சாப்பிட முடியவில்லை என்று பெற்றோர் கூறினர்.

அதன் பின் அச்சிறுமிக்கு ஸ்கேன் எடுத்தும், எண்டோஸ்கோப் மூலம் பார்த்தபோது வயிற்றில் முடிகளால் ஆன கட்டி இருப்பதை உறுதி செய்தோம்.

ஆன்லைன் வகுப்பால் அச்சிறுமிக்கு மனச்சோர்வு ஏற்பட்டு, தன் தலையில் உள்ள முடிகளை பிய்த்து சாப்பிட்டுள்ளார். இதனால் முடிகளால் ஆன கட்டி ஏற்பட்டுள்ளது. வயிற்றில் கட்டி   ஆயிரம் பேருக்கு வந்துள்ளது. ஆனால், முடிகளால் ஆன கட்டி என்பது இப்போதுதான் நான் பார்க்கிறேன். இக்கட்டி சிறுகுடல் வரை பரவியுள்ளது.

உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இதற்கு காரணம் குழந்தை அல்ல. குழந்தையை கவனிக்காத பெற்றோர்தான். ஒரு குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் எடுப்பது போல இக்கட்டியை அகற்றியுள்ளோம். இதனை Rapunzel Syndrome என்று கூறுவார்கள். உலக அளவில் 60 பேருக்கு இப்படிப்பட்ட கட்டிகள் பதிவாகியுள்ளதாக அறிய முடிகிறது. தற்போது அச்சிறுமிக்கு மனநல மருத்துவர் மூலம் கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருகிறது" என்றார்.

இந்த சம்பவத்தைச் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் (NCPCR),சுட்டிக்காட்டி  விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 7 நாட்களுக்குள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரான மோகன், இதுகுறித்து பதிலளிக்கும்படியும் அதில் கேட்டுக்கொண்டுள்ளது.

தமிழ் மொழி திரைப்படங்களை மட்டும் வெளியிடதனி ஓடிடி தளம் உருவாக்கப்பட வேண்டும்-இயக்குனர் சேரன்

 தமிழ் மொழி திரைப்படங்களை மட்டும் வெளியிடும் வகையில் தனி ஓடிடி தளம் உருவாக்கப்பட வேண்டும்.சிறிய பட்ஜெட் படங்களை வெளியிட கேரள அரசு தனி இணையதளம் உருவாக்கி உள்ளது வரவேற்க தக்கது - இயக்குனர் சேரன்.


நில உரிமையாளர்களுக்கு பட்டா, பிழைத்திருத்தம் போன்ற சேவைகளை காலதாமதம் செய்யாமல் வழங்க வேண்டும்-கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்

 சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தகுதி வாய்ந்த நில உரிமையாளர்களுக்கு பட்டா, பிழைத்திருத்தம் போன்ற சேவைகளை காலதாமதம் செய்யாமல் வழங்க வேண்டுமென்று மாநில வருவாய்த்துறை அமைச்சர்  கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.



Wednesday, 23 June 2021

வீட்டுக்கு வராவிட்டால்தேர்ச்சி பெறவிடாமல் செய்து விடுவேன் - போக்சோவில்கைது செய்யப்பட்ட பள்ளி ஆசிரியர்

 ஆன்லைன்  வகுப்புகளையே  தயவு செய்து மூடிவிட்டால் கூட நல்லது .பெற்றவர்கள்  இருக்கும் சூழலில்  கடன் வாங்கி தன் பிள்ளைகளுக்கு படிப்பதற்காக  செல்போன் வாங்கி கொடுக்கின்றனர் . நடக்கும் சூழல்களை பார்த்தால்  பெண் பிள்ளைகளை பள்ளிக்கே அனுப்ப மிகவும் தயக்கம்  தான் ஏற்படும் .பெற்றவர்கள் முன்னிலையில்  ஆன்லைன்  வகுப்பிற்கே  இந்த லட்சணம் என்றால் , பள்ளிசெல்லும் மாணவிகளின் நிலை  சற்று கவலை படவேண்டிய  விஷயம் தான் . உடனே பெண்பிள்ளைகள் மேல் தான் சேற்றை பூசும் சமூக  அரைவேக்காடுகள்  கொஞ்சம்  அந்த பிள்ளைகளின் மனநிலைகளை பார்க்கவேண்டும்.

 

மீண்டும் ஒரு சம்பவம் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில்  நடந்தேறியுள்ளது .

 

முதுகுளத்தூரில் பள்ளி மாணவியிடம் பாலியல்ரீதியாக பேசிய புகாரில் ஆசிரியர் போக்சோவில் கைது.பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரில் அறிவியல் ஆசிரியர் ஹபீப் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.அரசு உதவிபெறும் பள்ளி மாணவியிடம் ஆசிரியர் பாலியல்ரீதியாக பேசும் ஆடியோ வெளியாகி சர்ச்சைக்குள்ளானது.

தனது வீட்டுக்கு வராவிட்டால் மதிப்பெண்ணை குறைத்து தேர்ச்சி பெறவிடாமல் செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் செயல்படும் அரசு உதவிபெறும் பள்ளியான பள்ளிவாசல் மேல்நிலை பள்ளியில் முதுகுளத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதியில் இருந்து 1500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றும் ஹபீப் என்பவர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக தெரிகிறது.

பள்ளியில் படிக்கும் மாணவியின் செல்போன் எண்ணை வாங்கி அவரது வீட்டில் பெற்றோர் இல்லாத சமயத்தில் பேசி புத்தகத்தை எடுத்துக் கொண்டு தனது வீட்டிற்கு வருமாறு தெரிவித்துள்ளார். ஒருவேளை அப்படி வர மறுத்தால், ’உனக்கும் மார்க் குறைவாக போட்டு தேர்ச்சியடைய விடாமல் செய்து விடுவேன்’ என்று மிரட்டல் விடுத்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுபோல பல மாணவிகள் தனது வீட்டிற்கு புத்தகத்துடன் வந்துள்ளதாகவும் அதுபோல் நீயும் வரவேண்டுமென்று ஒரு மாணவியுடன் ஆசிரியர் ஹபீப் பேசும் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. பள்ளி ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முதுகுளத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ராகவேந்திரர் ரவி விசாரணை நடத்தி வந்தார். போலீசார் விசாரணையை அடுத்து ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

 


பாலியல் தொல்லையும், ஆசிரியர்கள் கைதும்’ தமிழகத்தை உலுக்கிய சமீபத்திய சம்பவங்கள்!

 தமிழ்நாட்டில் பள்ளிகளில் பாலியல் குற்றங்களுக்காக கடந்த சில ஆண்டுகளில் நிறைய ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொதுவாக பெற்றோர்கள்  தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் நலமுடன் இருக்க பலவிதங்களில் போராடி  குழந்தைகளின்  கல்விக்காக  தரமான கல்விக்கூடங்கள்,கல்லூரிகளை  தேர்வு செய்கின்றனர் . அதேபோல  புனிதமான ஆசிரியர்பணிமூலம்  சிறந்த மாணவர்களை  உருவாக்கி  அவரவர் வாழும் தேசத்திற்கு  பெருமை சேர்த்த புனிதவான்கள்  வாழ்ந்த  இந்த மண்ணில்  கேடுகெட்ட  மனங்களை கொண்ட  மனிதமிருகங்கள்  இந்த புனித பணியில் இருந்துகொண்டு பாலியல் குற்றங்களை செய்து , அந்த குழுமத்தின் பெயர் ,மாணவ செல்வங்களின் வாழ்க்கையைகெடுத்தும் வருகிறது  கெடுத்தஅப்படிப்பட்டசில  கொடூரன்கள்   ஒரு சிலரை பார்க்கலாம் .

சென்னையில் பிரபல தனியார் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து அந்தப் பள்ளி நிர்வாகம் அந்த ஆசிரியர் ராஜ்கோபால் என்பவரை தற்காலிக இடைநீக்கம் செய்துள்ளது. கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன் மட்டுமின்றி இன்னும் பல ஆசிரியர்கள் இப்படி உள்ளே இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.தமிழகத்தில் பள்ளி மாணவிகள் மீது ஆசிரியர்கள் பாலியல் வன்மம் கொள்ளும் நிகழ்வுகள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. அவ்வாறு நடந்த சில குற்றச் சம்பவங்களையும், அதில் கைதான ஆசிரியர்களையும் பார்க்கலாம். 

அதையடுத்து சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தும் பாலியல் புகாரில் சிக்கினார்.சென்னை பிரைம் தடகள பயிற்சி மையத்தின் பயிற்சியாளர் நாகராஜன் என்பவரும் விளையாட்டு வீராங்கனைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை போரூரை அடுத்த கெருகம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் பத்ம சேஷாத்திரி மில்லினியம் பள்ளியில் கராத்தே பயிற்சியாளராக பணியாற்றி வந்த கெபிராஜ் என்ற கராத்தே மாஸ்டர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், விளையாட்டு போட்டிகளுக்கு அழைத்துச்செல்லும்போதும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு இளம்பெண் ஒருவர், அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.


சென்னை கேளம்பாக்கம் சுஷில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பள்ளி மாணவிகள் பாலியல் புகார் கொடுத்ததன் பேரில் அவர் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக சுஷில் ஹரி பள்ளியில் பணிபுரிந்த பாரதி, தீபா என்ற 2 பெண் ஆசிரியர்களும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.சிவசங்கர் பாபாவுக்கு எதிராக புகார்கள் கொடுக்க வேண்டும் என்றால் புலன்விசாரணை அதிகாரி குணவர்மன் தொலைபேசி எண் வாயிலாக புகார்களை தெரிவிக்கலாம்என்று9840558992.மின்னஞ்சல் முகவரிக்கு inspocu2@gmail.com -ல் புகார்கள் தெரிவிக்கலாம்.சிபிசிஐடி தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு முதல் கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் அனைத்து செயல்படவில்லை. இதனால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலிலும் கடந்த ஆண்டு இரண்டு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். 

 

கடந்த அக்டோபர் மாதம் கார்த்திக்(26) என்ற ஆசிரியர் பள்ளி மாணவர் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக கைது செய்யப்பட்டார். 9 வகுப்பு மாணவரை தனது வீட்டிற்கு அழைத்து பாடம் சொல்லி தருவதாக கூறி பாலியல் ரிதியில் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பெயரில் செங்கல்பட்டு காவல்துறை அவரை கைது செய்தது. 


 

2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோவையின் துடியலூர் பகுதியில் அனைத்து மகளிர் காவல்துறையினர் 50 வயது மதிக்கதக்க ஆசிரியரை கைது செய்தனர். அவர் ஒரு பள்ளியில் 6 வகுப்பிற்கு ஆசிரியராக இருந்து வந்துள்ளார். அப்போது 6 வகுப்பு மற்றும் 7 வகுப்பு மாணவிகளிடம் தவறாக நடக்க முற்பட்டுள்ளார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் பள்ளி நிர்வாகம் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. அதன்பின்னர் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்த ஆசிரியரை கைது செய்து போக்சோ சட்டம் உட்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். 

திருவண்ணாமலை ஆரணி மாவட்டத்திலும் 2019ஆம் ஆண்டு நித்யா(30) என்ற ஆசிரியை பாலியல் குற்றம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். இவருடைய கணவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு புகாரை அளித்துள்ளார். அதில், இந்த ஆசிரியையின் மொபைல் போனில் பல மாணவர்களுடன் தவறாக இருந்த படங்கள் இருப்பதாக கூறினார். அதனைத் தொடர்ந்து நடந்த விசாரணயில் நித்யா நீண்ட நாட்களுக்கு இந்த தவறில் ஈடுபட்டு வந்தது கண்டறியப்பட்டது. ஏற்கெனவே அவர் இருந்த ஒரு பள்ளியில் புகார் எழுந்ததன் பெயரில் அவர் வேறு ஒரு பள்ளிக்கு மாற்றப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவை தவிர சேலத்தில் கொண்டாலம்பட்டியில் தலைமை ஆசிரியர் ஒருவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டார். இதேபோல் தமிழ்நாட்டில் சமீபத்தில் சில ஆண்டுகளில் நிறையே வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்தச் சூழலில் தற்போதும் அந்த அவலம் தொடர்ந்து வருவது பெரும்அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது. 

2012-ஆம் ஆண்டு போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்பின்னர் பள்ளிகள் தங்களுடைய நிறுவனத்தில் பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும். அத்துடன் மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு தொடர்பான விழிப்புணர்வையும் அளிக்க வேண்டும். ஆனால் இந்த விஷயம் தொடர்பாக எந்த பள்ளியும் பெரியளவில் நடவடிக்கை எடுக்கவில்லை. அதிகபட்சம் பள்ளியில் ஒரு குழு மட்டும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் புகார் பேட்டியில் விழும் புகார்கள் தொடர்பாக இந்த குழுக்கள் விசாரணை செய்கின்றனவா என்பது பெரிய கேள்வி குறியாக உள்ளது. மாணவர்களின் புகாரை பள்ளிகள் கேட்டு ஒழுங்கான நடவடிக்கை எடுத்தால் இது போன்ற சம்பவங்கள் குறை வாய்ப்பு உள்ளதாக குழந்தை நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். 

 

 

டெல்லியில்நடைபெற இருந்த காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் ஒத்திவைப்பு..!!

 

டெல்லியில்22.06.2021ஆம் தேதிநடைபெற இருந்த காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் ஜூன் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

. காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 12வது கூட்டம் ஒன்றிய நீர் ஆணைய தலைவர் ஹல்தர் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் அதிகாரிகள் கலந்துகொள்ள இருந்தனர். மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தமிழகத்தின் தேவைக்காக ஆண்டுதோறும் 177.2 டி.எம்.சி காவிரி நீரை வழங்க வேண்டுஎன்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி

மாதந்தோறும் தமிழகத்திற்க்கு வழங்க வேண்டிய நீரின் அளவை, காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி, தமிழகத்திற்க்கு ஜூன் மாதம் 9.19 டிஎம்சியும் ஜூலை மாதம் 31.24 டிஎம்சியும் காவிரி நீர் வழங்கப்பட வேண்டும் என மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.பிலிகுண்டுலு பகுதியில் உரிய நீர் வருவதை காவிரி மேலாண்மை ஆணையம் உறுதிப்படுத்த உத்தரவிடவேண்டும் எனவும் கூறியிருந்தார். உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி, ஜூன் மாதம் முதல் அக்டோபர் வரையிலான தென்மேற்கு பருவ காலத்தில் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீர் குறித்து விவாதிக்கப்பட இருந்தது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் விரைவில் அணை கட்டப்படும் என்ற கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் அறிவிப்பு குறித்தும் இக்கூட்டத்தில் தமிழக பிரதிநிதிகள் கேள்வி எழுப்ப திட்டமிட்டிருந்தனர்.

நடப்பு மாதத்திற்கான ஒதுக்கீட்டில் இதுவரை ஒரு டிஎம்சி தண்ணீர் மட்டுமே தமிழகம் வந்துள்ள சூழலில்,மத்திய ஜல்சக்திதுறை தரப்பில் கடந்த 15ம் தேதி ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் காவிரி ஆணையத்தின் கூட்டமானது இடைக்கால தலைவர் ராஜேந்திர குமார் ஜெயின் தலைமையில் வரும் 22ம் தேதி நடைபெறும் என கூறப்பட்டது. இதில் மத்திய ஜல்சக்திதுறை செயலாளர், தமிழகம் உட்பட நான்கு மாநில உறுப்பினர்களும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும் இந்த கூட்டத்தின் போது இதுவரை காவிரி ஒழுங்காற்று குழுவில் ஆலோசிக்கப்பட்ட விவரங்கள், தாக்கல் செய்யப்பட்ட நீர் புள்ளிவிவரங்கள்,
அணை பாதுகாப்பு, காவிரியில் இருந்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி கர்நாடகா திறந்துவிட்ட நீரின் அளவு, ஆணையத்திற்கு என நிரந்தர தலைவர் ஆகியவை குறித்தும், முக்கியமாக காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படுவது குறித்தும் கண்டிப்பாக விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியது.
இந்த நிலையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் 22.06.2021 15ம் தேதி நடைபெற இருந்த நிலையில் திடீரென வரும் 25ம் தேதி அதாவது வெள்ளிகிழமை காலை 11 மணிக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான காரணங்கள் குறித்து ஆணைய வட்டாரங்கள் தரப்பில் கிடைத்த தகவலில், ‘தமிழகம் மற்றும் புதுவையில் புதியதாக ஆட்சி பொறுப்பில் அமைந்துள்ள அரசுகள் ஆணையத்தின் கூட்டத்தில் பங்கேற்கும் நிபுணர்கள், புதிய உறுப்பினர்கள் சிலரை நியமனம் செய்ய வாய்ப்புள்ளதால் தான், தற்போது கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.