Friday, 2 July 2021

வேலூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை! அதிகாரிகள் சமரசம் !!

 

வேலூர்: வேலூர், அரசு மருத்துவமனை கொரோனா வார்டிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட, 100 செவிலியர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கடந்த சில மாதங்களாக, கொரோனா இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டவர்கள் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதற்காக, 100 செவிலியர்கள் கொரோனா வார்டில் தற்காலிக பணியில் இருந்தனர். தற்போது, கொரோனா தாக்கம் குறைந்ததால், தற்காலிக பணியில் இருந்த செவிலியர்களுக்கு பணி இல்லாததால், அவர்கள் நேற்று முன்தினம் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதனால், மீண்டும் பணி வழங்கக்கோரி நேற்று காலை, 11:00 மணிக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதிகாரிகள் மனுவை பெற்றுக்கொண்டு அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினர்.

No comments:

Post a Comment