Saturday, 3 July 2021

முன்னாள் அமைச்சர் பழனியப்பன் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

 


அமமுக தலைமை நிலைய செயலாளரும், தினகரனின் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்தவர் பழனியப்பன். இவர் அதிமுக ஆட்சிக்காலத்தில் உயர்கல்வித் துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் . மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின்போது உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த பழனியப்பன், ஜெயலிதாவின் மறைவுக்குப் பின்னர் தினகரன் அணியுடன் ஆதரவாக செயல்பட்டு அதனால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து தினகரன் தலைமையில் அமமுகவில் தொடர்ந்து செயல்பட்டுவந்தார்.

கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.அதே நேரத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில், அமமுகவில் இருந்து வெளியேறி திமுகவில் இணைந்தவர்களுக்கு ஸ்டாலின் கௌரவமான பதவிகளை கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் டிடிவி தினகரனின் முக்கிய விசுவாசியும், அவரின் வலதுகரமாக செயல்பட்டுவந்த பழனியப்பன் அமமுகவில் இருந்து விலகி இன்று திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.

No comments:

Post a Comment