Tuesday, 31 October 2017

டெங்கு தடுப்புக் குழுவினரை எதிர்த்து பேசியவருக்கு ரூ.5000 அபராதம்

டெங்கு தடுப்புக் குழுவினரை எதிர்த்து பேசியவருக்கு ரூ.5000 அபராதம்


வாழப்பாடி: கொடம்பைகாடு கிராமத்தில் டெங்கு பரவல் குறித்து வீடு வீடாக சென்று டெங்கு தடுப்புக் குழு ஆய்வு மேற்கொண்டது. தனது வீட்டுக்குள் நுழைந்து ஆய்வு செய்ய முயன்ற குழுவினரை பாலமுருகன் என்பவர் தடுத்து நிறுத்தியுள்ளார். எதிர்த்து பேசிய பாலமுருகனுக்கு டெங்கு தடுப்புக் குழுவினர் ரூ. 5000 அபராதம் விதித்தனர்.

குண்டர் சட்டத்தில் 2-பேர் கைது

குண்டர் சட்டத்தில் 2-பேர் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அதன் சுற்று வட்டார பகுதியில் தொடர்  கொலை மற்றும் கொள்ளை வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த வல்லம் பகுதியை சேர்ந்த பூபதி மற்றும் மாறன் ஆகிய இரண்டுபேரையும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில் கைது.

வீட்டு வாடகை 5 சதவீதம் உயர்வு

வீட்டு வாடகை 5 சதவீதம் உயர்வு

கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் சென்னை உட்பட முக்கிய எட்டு நகரங்களில் வீட்டு வாடகை உயர்ந்துள்ளதாக ரியல் எஸ்டேட் நிறுவன புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் வீடுகள் விலை 2 சதவீதம், வாடகை 5 சதவீதம், உயர்ந்துள்ளது. பெங்களூருவில் வீட்டு விலை 1 சதவீதம் குறைந்தாலும் வாடகை 3 சதவீதம் உயர்ந்துள்ளது. டெல்லி என்சிஆர் பகுதியில் பெரிய மாற்றம் இல்லை. மும்பையில் வீட்டு விலை மாற்றம் இல்லாவிட்டாலும் வாடகை 2 சதவீதம் அதிகரித்துள்ளது.சென்னையில் வீட்டு விலை ஒரு சதவீதமும், வாடகை 2 சதவீதமும் உயர்ந்துள்ளது. இதுபோல் கொல்கத்தா, புனேயில் வாடகை 2 சதவீதம் அதிகரித்துள்ளது என புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளது

கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மீனவர்கள் 3வது நாளாக கடலுக்கு செல்லவில்லை

கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மீனவர்கள் 3வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. கடலூரில் சாமியார்பேட்டை, புதுக்குப்பம், பெரியகுப்பம் உட்பட 64 கிராம மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. நாகையில் பூம்புகார், தரங்கம்பாடி உட்பட 54 கிராம மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. 

சென்னையில் குடிநீர் ஏரியான செம்பரம்பாக்கம் ஏரிக்கு மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது

சென்னையில் குடிநீர் ஏரியான செம்பரம்பாக்கம் ஏரிக்கு மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த இரு தினங்களாக பெய்துவரும் கன மழையை அடுத்து செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது. ஏரியின் நீர்வரத்து விநாடிக்கு 1,919 கனஅடியில் இருந்து 1,970 கனஅடியாக உயர்ந்துள்ளது.

சென்னையில் மழை குறையும்

சென்னையில் மழை குறையும்




சென்னை: சென்னையில் ஓரிரு இடங்களில் மட்டுமே இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நடுநிலைபள்ளியின் பழைய கட்டிடம்தொடர் மழை காரணமாக இடிந்து விழுந்தது என தகவல்

காஞ்சிபுரம் -  செங்கல்பட்டு -   ஒழலூர் கிராமத்தில் அரசு நடுநிலைபள்ளியின் பழைய  கட்டிடம் இடிந்து விழுந்தது.1982ல் கட்டப்பட்ட இரண்டடுக்கு  கட்டிடம்  சில ஆண்டுகளாக பயன்படுத்தாத நிலையில் தொடர் மழை காரணமாக இடிந்து விழுந்தது என தகவல்

கந்துவட்டிக்கு புகார் கொடுக்க எண்கள்

கந்துவட்டிக்கு புகார் கொடுக்க எண்கள்


கரூர் மாவட்டத்தில் கந்துவட்டி வசூலிப்பதை தடை செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது

கரூர் மாவட்டத்தில் கந்துவட்டி வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

 அவர்களை பற்றி பொதுமக்கள் 04324-256508 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்' என ஆட்சித்தலைவர் தெரிவித்தார்

பேரிடர் உதவிக்கு தொடர்பு கொள்ளதொலைபேசி எண்கள் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு பேரிடர் கால தொலைபேசி

காஞ்சிபுரம் மாவட்டம்  தாம்பரம், அனகாபுத்தூர்,பம்மல்,பல்லாவரம்,பரங்கிமலை, சிட்லபாக்கம், உள்ளிட்ட பகுதி பொது மக்கள் மழைகால பேரிடர் உதவிக்கு தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு


பேரிடர் கால தொலைபேசி  044- 22410050
வாட்ஸ் அப் எண்
9445051077

மர்மக்காய்ச்சலால் பள்ளி மாணவிஉயிரிழந்துள்ளார்

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே மர்மக்காய்ச்சலால் பள்ளி மாணவி உயிரிழந்துள்ளார். அத்திங்கிகாவனூர் கிராமத்தைச் சேர்ந்த ராணி(15) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

மக்கள் வெளிவர முடியாமல் அவதி

காஞ்சிபுரம் - செங்கல்பட்டு - வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால் நீஞ்சல் மதகில் நீர் மட்டம் உயர்ந்து தண்ணீர் வெளியேற வழியின்றி மகாலட்சுமி நகர் முழுவதும் சூழ்ந்து  முதல் தெருவில் உள்ள மக்கள் வெளிவர முடியாமல் அவதி.

22 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

 சென்னையில் 22 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

 சென்னையில் 22 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை இடம் மாற்றம் செய்து காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்


சேலம்: 12 பேர் இன்ஸ்பெக்டராக நியமனம்


சேலம்:

சேலம் சரகத்தில் காத்திருப்போர் பட்டியிலில் இருந்த 12 பேரை இன்ஸ்பெக்டர்களாக நியமனம் செய்து காவல் துணை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்

கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை


சென்னை: கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

கடந்த 2 நாட்களாக தொடர்ந்து தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பலத்து மழை பெய்து வருகிறது

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளர்

திமுக தலைவர் கருணாநிதியை, பாமக நிறுவனர் ராமதாஸ் சந்தித்து நலம் விசாரித்தார்.

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை, பாமக நிறுவனர் ராமதாஸ் சந்தித்து நலம் விசாரித்தார்.


இல்லம் வந்த ராமதாஸை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வரவேற்றார்.


ரேஷன் கடையில் சர்க்கரை இன்று முதல் கிலோ ரூ.25

சென்னை: தமிழக ரேஷன் கடைகளில், கிலோ சர்க்கரை, 13.50 ரூபாய் என்ற குறைந்த விலைக்கு விற்கப்பட்டது. அனைத்து ரேஷன் கார்டுதாரர்களும், சர்க்கரை வாங்கினர்.
இந்நிலையில், இன்றுமுதல், சர்க்கரை விலையை, 25 ரூபாயாக உயர்த்த, தமிழக அரசு, சமீபத்தில் உத்தரவிட்டது. அதன்படி, இன்று முதல், சர்க்கரை விலை உயர்வு அமலுக்கு வருகிறது.

உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சர்க்கரை விலை உயர்வால், ரேஷன் ஊழியர் - மக்கள் இடையில், பிரச்னை ஏற்படக் கூடாது என்பதற்காக, கடைகளில் உள்ள, 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில், புதிய விலை பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

மிகவும் வறுமையில் உள்ள, 'அந்தியோதயா' ரேஷன் கார்டுதாரர்களுக்கு, கிலோ சர்க்கரை, 13.50; காவலர் கார்டுகளுக்கு, 12.50; மற்ற அனைத்து கார்டுதாரர்களுக்கும், 25 ரூபாய்க்கு விற்கப்படும். இந்த விலை உயர்வு, இன்று நடைமுறைக்கு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

காஞ்சிபுரத்தில் அரசு பேருந்து குமரகோட்டம் அருகே உள்ள சென்டர் மீடியனில் இடித்து விபத்து

 காஞ்சிபுரத்தில் அரசு பேருந்து குமரகோட்டம் அருகே உள்ள சென்டர் மீடியனில் இடித்து விபத்து

காஞ்சிபுரம்
மேற்கு ராஜ வீதி குமரகோட்டம் முருகன் கோவில் அருகே உள்ள சென்டர் மீடியனில் அரசு பேருந்து இடித்து  விபத்து அரக்கோணத்தில் இருந்து பட்டுக்கோட்டை வரை செல்லும் அரசுப்பேருந்து அரகோணத்தில் நேற்று இரவு 11.30 மணியளவில் காஞ்சிபுரம் நோக்கி வந்த அரசுப்பேருந்து காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் 12.30 மணியளவில் பலத்த மழை பெய்ததில் தூக்க கலகத்தில் சென்டர் மீடியனில் இடித்து பஸ் கண்டெக்டர் ரவி (45) சென்னையை சேர்ந்தவர் தலையில் படுகாயம் அடைந்தார் பேருந்தில் 28 பயணிகள் பயணித்தனர் அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் அடிப்படவில்லை பேருந்து சென்னையை சேர்த வை ஆகும் TN01AN0651தகவல் அறிந்து ஓரிக்கை பணிமனைக்கு தெரிவிக்கப்பட்டன

கடலோர மாவட்டங்களில் ரேஷன் பொருட்கள் அதிகரிப்பு

தமிழகத்தில், வட கிழக்கு பருவ மழை சீசன் துவங்கியதால், சில தினங்களாக, கன மழை பெய்கிறது. குறிப்பாக, கடலோர மாவட்டங்களில், தொடர்ந்து மழை இருக்கும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அம்மாவட்டங்களில் உள்ள கிடங்குகளுக்கு, ரேஷன் பொருட்களை அதிகளவில் அனுப்ப, உணவுத் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மழை சீசனை முன்னிட்டு, 11 கடலோர மாவடங்களில் உள்ள சேமிப்பு கிடங்கு மற்றும் ரேஷன் கடைகளுக்கு, முழு அளவில் உணவுப் பொருட்களை அனுப்பும்படி, ஒரு மாதத்திற்கு முன், நுகர்பொருள் வாணிப கழகத்திடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அப்போது, கிடங்குகளில் போதியளவில் பொருட்கள் இல்லாததால் அனுப்பவில்லை. நவம்பர் மாத சப்ளைக்கான, ரேஷன் பொருட்கள் வழங்கல், தற்போது நடந்து வருகிறது. அதில், கடலோர மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கி, அதிக பொருட்கள் அனுப்பும்படி, வாணிப கழக அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Wednesday, 11 October 2017

சசிகலாவை எந்த அமைச்சரும் தொடர்பு கொள்ளவில்லை - அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை

 உடல் நலக்குறைவால்  ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கணவர் நட ராஜனை பார்ப்பதற்காகவே சசிகலாவுக்கு பரோல்  வழங்கப்பட்டது.  234 நாட்கள் சிறை வாசத்துக்கு பின்னர் கடந்த 5- ந்தேதி  பரோலில் சசிகலா  வந்தார்.

பரோலில் வந்த  சசிகலாவுடன் 8 அமைச்சர்களும்  பல எம்.எல் ஏக்களும் 
தொடர் பு கொண்டு பேசியதாக கூறப்பட்டது.

இது குறித்து  அமைச்சர் ஜெயக்குமார்  கூறியதாவது:-

சசிகலாவை அமைச்சர்கள் தொடர்பு கொண்டு பேசியதாக வந்த தகவல் தவறு; அவரை தொடர்பு கொள்ளும் எண்ணம் யாருக்கும் இல்லை . குட்கா விவகாரத்தில் முகாந்திரம் உள்ள 17 பேர் மீது தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஊழலில் திளைத்த கட்சி திமுக அரசை விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை. டெங்குவை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்ற ஸ்டாலினின் குற்றசாட்டை ஏற்க முடியாது. டெங்குவை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசின் நடவடிக்கைகளுக்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம். தமிழக அரசோடு பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால், டெங்கு இல்லாத தமிழகத்தை உருவாக்கலாம்.

அரசு ஊழியர்களின் ஊதியம் குறைந்த பட்சம் ரூ.15 ஆயிரமாகவும் அதிகபட்சம் ரூ.2.25 லட்சமாக உயர்வு

சென்னை,

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

# 7வது ஊதிய குழு பரிந்துரைகள் -  1.10.2017 தேதி முதல் பணப்பயனுடன் அமல்படுத்தப்படும்.

# குறைந்த பட்ச ஊதியம் ரூ.15 ஆயிரமாகவும் அதிகபட்ச ஊதியம் ரூ.2,25,000 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

# தமிழக அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் ரூ 6, 100-ல் இருந்து ரூ 15,700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

# தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் உள்ள பணியாளர்களுக்கு 30 % ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

# அதிகபட்ச ஊதியம் ரூ. 77,000 லிருந்து ரூ 2.25,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

# ஓய்வு பெறும் போது வழங்கப்படும் பணிக்கொடைக்கான வரம்பு ரூ 10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும்.

# இந்த ஊதிய உயர்வு 2016-ம் ஆண்டில் இருந்து கருத்தியலாக அமல்படுத்த முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

ஊதிய உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.14, 719 கோடி கூடுதல் செலவாகும்.  அரசு அறிவித்துள்ள ஊதிய உயர்வால் 12 லட்சம் அரசு ஊழியர்களும், 7 லட்சம் ஓய்வுதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் பயன்பெறுவர்.

சபாநாயகரை மிரட்டும் விதமாக தினகரன் பேசி வருகிறார். இவ்வாறு பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாத செயல்.


மதுரையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பேரணி நடத்த காவல் துறை அனுமதி மறுத்திருந்த நிலையில் ஐகோர்ட்டு மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது.

மதுரையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பேரணி நடத்த காவல் துறை அனுமதி மறுத்திருந்த நிலையில் ஐகோர்ட்டு மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது.