Monday, 21 December 2015

சென்னையில் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: தா.பாண்டியன்

கோவை, டிச. 20–சென்னையில் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: தா.பாண்டியன்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினரும், ஏ.ஐ.டி.யூ.சி. மாநாட்டின் வரவேற்பு குழு தலைவருமான தா.பாண்டியன் கோவையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:–
ஏ.ஐ.டி.யூ.சி.யின் அகில இந்திய மாநாடு கோவையில் கடந்த 15–ந்தேதி முதல் 18–ந்தேதி வரை நடைபெறுவதாக இருந்தது.
மழை வெள்ள பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இந்த மாநாடு வருகிற பிப்ரவரி 25 முதல் 28–ந்தேதி வரை கோவையில் நடைபெறும்.
இந்த மாநாட்டில் ஏ.ஐ. டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., எச்.எம்.எஸ். உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.
தொழிலாளர்களுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசை கண்டித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.
தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ளசேதத்தால் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இவை மீண்டும் உற்பத்தியை தொடங்கும் வகையில் அனைத்து உதவிகளையும் மத்திய – மாநில அரசுகள் செய்ய வேண்டும்.
கடந்த 100 ஆண்டுக்கு பிறகு சென்னை பேரழிவை சந்தித்துள்ளது. நிவாரண வேலைகளில் நிறை, குறை உண்டு. தமிழக அரசு இன்னும் திறம்பட செயல்பட்டிருக்கலாம். பல இடங்களில் தொலை தொடர்பு, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. காவல்துறையும் திறமையாக செயல்படவில்லை. பெரும்சேதத்துக்கு பல காரணங்கள் உள்ளன. முக்கிய காரணம் பிளாஸ்டிக் கழிவுகள் தான். பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக வகுக்க வேண்டும்.
பிளாஸ்டிக் உபயோகத்தை தமிழக அரசும், உற்பத்தியை மத்திய அரசும் தடை செய்ய வேண்டும். பனை ஓலைபொருட்கள் உற்பத்தியை ஊக்கப்படுத்த வேண்டும். புதிய நோய்கள் பரவாமல் தடுக்க வேண்டும். காஞ்சீபுரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அதேபோல் சென்னையிலும் பாரபட்சமில்லாமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தமிழக அரசு கேட்கும் அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து கொடுக்க வேண்டும். மேற்கண்டவாறு தா.பாண்டியன் கூறினார்

No comments:

Post a Comment