Monday, 21 December 2015

தமிழகம் முழுவதும் நீதிமன்றங்கள் நாளை செயல்படும் ஐகோர்ட்டு அறிவிப்பு

சென்னை,
ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் பொன்.கலையரசன் நேற்று ஒரு அறிவிக்கை வெளியிட்டார். அதில், ‘மிலாது நபி பண்டிகை வருகிற 23–ந் தேதி (புதன்கிழமை) என்று முன்பு அறிவிப்பு வெளியிடப்பட்டதால், 23–ந் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த பண்டிகை வருகிற 24–ந் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, 23–ந் தேதி (நாளை) வழக்கம்போல் சென்னை ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை கிளை மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் செயல்படும். மிலாது நபி பண்டிகைக்காக 24–ந் தேதி அனைத்து நீதிமன்றங்களும் விடுமுறை விடப்படுகிறது’ என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment