ஓமலூர், டிச. 21–
சேலம் மாவட்டம் ஓமலூரில் பெரிய மாரியம்மன்கோவில், சின்ன மாரியம்மன் கோவில், கண்ணனூர் மாரியம்மன் கோவில், கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல கோவில்கள் உள்ளன.
எந்த கோவிலுக்கும் இல்லாத சிறப்பு பெரிய மாரியம்மன் கோவிலுக்கு உண்டு. அதற்கு காரணம் மார்கழி மாதங்களில் கோவில் கருவறையில் உள்ள மாரியம்மன் மீது காலையில் சூரிய ஒளிபடும். அப்போது பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்வர். இந்த மாதம் முழுவதும் சூரிய ஒளி மாரியம்மன் சாமி மீது படுவதால் அதை பார்த்து தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது.
இது போன்ற அம்சத்தில் இந்த கோவில் கட்டப்பட்டு உள்ளது. கோவில் கருவறைக்குள் சூரிய ஒளிபட்டு அம்மன் பிரகாசமாக காட்சி அளிக்கிறார். இதனை ஏராளமான பொதுமக்கள் காலையில் கோவிலுக்கு வந்து பார்த்து விட்டு அம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர்.
No comments:
Post a Comment