Monday, 28 April 2025

தமிழக அரசு சார்பில் இதழியல் மற்றும் ஊடகவியல் கல்வி நிறுவனம் தமிழக அரசு அறிவிப்பு- தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

 



தமிழக அரசு சார்பில் இதழியல் மற்றும் ஊடகவியல் கல்வி நிறுவனம் தமிழக அரசு அறிவிப்பு- தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

சென்னையில் இதழியல், ஊடகவியல் கல்வி நிறுவனம் தொடங்கப்படும்

சட்டப்பேரவையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு


சென்னையில் இதழியல், ஊடகவியல் கல்வி நிறுவனம் இந்தக் கல்வியாண்டு முதல் தொ டங்கப்படும் என செய்தித்துறை அமைச்சர் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப் பேரவையில் செய்தி, விளம்பரம் மற்றும் எழுது பொருள் அச்சு துறையின் மானிய  கோரிக்கைகள் மீது நடைபெற்ற விவாதங்களுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மு.பெ.சாமி நாதன், “இனி ஒவ்வொரு ஆண்டும்  கருணாநிதி பிறந்த நாள் செம் மொழி நாளாக கொண்டாடப்படும்” என்றார்.

இதழியல் துறையில் பயிற்சி,  ஆராய்ச்சி மற்றும் ஊடகக் கல்வி  மேம்பாட்டிற்கு ஒரு முதன்மை யான கல்வி நிறுவனத்தை நிறுவி, அதன்மூலம் ஆர்வம் மிகுந்த இளம் திறமையாளர்களை ஊக்கு விக்கவும், இதழியல் மற்றும் ஊடக  ஆய்வியலில் தரமான கல்வியை வழங்கிடும் வகையில், இதழியல் மற்றும் ஊடகவியல் கல்வி நிறுவனம் இந்த கல்வியாண்டு முதல் தொடங்கப்படும் என்று புதிய அறி விப்புகளை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பிற்கு தமிழ்நாடு அரசுக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் நன்றியை தெரிவிக்கப்பட்டது.


Friday, 25 April 2025

மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத் துறை அமைச்சகத்தின் கண்காணிப்புக் குழு தமிழ்நாடு வருகை – துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு .

 மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத் துறை அமைச்சகத்தின் கண்காணிப்புக் குழு தமிழ்நாடு வருகை – துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்கிறது.மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வள அமைச்சகத்தின் தேசிய அளவிலான கண்காணிப்புக் குழு தமிழ்நாட்டுக்கு வந்துள்ளது. 


இக்குழு நாளை முதல் (24.04.2025) மத்திய அரசின் நிதியுதவியுடன் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் பால்வளத் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறது. ராஷ்டிரிய கோகுல் மிஷன் தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் கால்நடை மேம்பாட்டுக்கான திட்டங்கள் குறித்து இக் குழுவினர் ஆய்வு செய்கின்றனர். செயற்கை கருத்தரித்தல் மற்றும் கருமாற்ற ஆய்வகங்கள் தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரின் மத்திகிரி உள்ள கால்நடைப் பண்ணையில் அவர்கள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.


செம்மறியாடு, வெள்ளாடு, கோழி இனங்கள் மேம்பாடு,  பசுந்தீவன அபிவிருத்தி ஆகியவற்றை உள்ளடக்கிய தேசிய கால்நடை இயக்கத்தின் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் 50 சதவீத மானியத்துடன் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் குறித்தும் குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர்.


கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில் உணவு, பால், மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் போன்றவையும் கறிக்கோழி வளர்ப்புக்கு 3 சதவீத வட்டியில் வங்கிக் கடன் உதவியும் வழங்கப்படுகிறது.





245 நடமாடும் கால்நடை மருத்துவப் பிரிவு 2024 ஆகஸ்ட் முதல் களப்பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகிறது.                                                       தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்கள் தொடர்பாகவும் இக்குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.


புள்ளியியல் இயக்குநர் திரு.வி.பி.சிங் தலைமையிலான தேசிய உயர்நிலை கண்காணிப்புக் குழு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் இயக்குநர் அலுவலகத்தில் அதன் இயக்குநர் திரு ஆர்.கண்ணன், தலைமையில் ஆலோசனை கூட்டத்தை நடத்தியது.


இக்கூட்டத்தில் கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் இயக்குநர், கூடுதல் இயக்குநர், இணை இயக்குநர் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவி இயக்குநர், ஆவின் மேலாண்மை இயக்குநர் திரு.அண்ணாதுரை, மத்திய கால்நடைப் பராமரிப்புத் துறை புள்ளியியல் இயக்குநர் திரு.வி.பி.சிங், புள்ளியியல் உதவி இயக்குநர் திரு.எம்.டி.சர்மா, கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தேசிய உயர்நிலை கண்காணிப்புக் குழுவின் மூன்று உறுப்பினர்கள் நாளை (24.04.2025) முதல் வரும் 27.04.2025 வரை நான்கு நாட்கள் கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்குச் சென்று மேற்கண்ட அனைத்து திட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்ய உள்ளனர்.

இந்தியாவின் படைப்பாற்றல் திறனை அடுத்த கட்டத்திற்கு வேவ்ஸ் உச்சி மாநாடு எடுத்துச் செல்லும்: மத்திய இணையமைச்சர்.

 

 இந்தியாவின் படைப்பாற்றல் திறனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக வேவ்ஸ் உலக ஒலி, ஒளி, மற்றும் பொழுதுபோக்கு) உச்சி மாநாடு அமையும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தெரிவித்துள்ளார்
. சென்னையில் இன்று நடைபெற்ற தூர்தர்ஷன் சென்னை (டிடி தமிழ்) தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் இதனைத் தெரிவித்தார். மேலும் படைப்பாற்றல் பொருளாதாரம் இந்திய பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும் அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், பேசிய அவர், டிடி தமிழ் தொலைகாட்சி, தமிழ்நாட்டின் கலை , கலாச்சாரம், பண்பாட்டு மதிப்பீடுகளை காக்கும் அரும்பணியை செய்துவருவதாகவும் காலத்தால் அழியாத பல நினைவலைகளை நம்முள்ளே விதைத்துள்ளது என்றும் கூறினார். மேலும், தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் செய்திகள் நூறு சதவீதம் உண்மைத் தகவல்களையும் நம்பகத்தன்மையையும் கொண்டவை என்றும் அவர் பாராட்டுத் தெரிவித்தார். 

இன்றைய நவீன காலத்துக்கு ஏற்றார்போல் தொழில்நுட்ப வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

இந்திய அரசின் பொது சேவை ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்ஷன் அரசின் செய்திகளையும், மக்களுக்கான நலத் திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் மிக முக்கிய  பங்காற்றுவதாக அவர் தெரிவித்தார். குடியரசுத் தலைவர் நிகழ்ச்சிகள், பிரதமரின் நிகழ்ச்சிகள், குடியரசு தின விழா, சுதந்திர தின விழா போன்ற நிகழ்ச்சிகளை நேரலையில் தூர்தர்ஷனில் மட்டுமே காண முடியும் என்றும் அவர் கூறினார். இந்திய பாரம்பரியத்தையும், இந்திய பெருமையும், இந்திய கலாச்சாரத்தையும் நிலை நிறுத்தும் வகையில் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருவதாக அவர் தெரிவித்தார்.டிடி தமிழ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளான, என்றும் நினைவில் நிற்கும் ஒளியும் ஒலியும், வயலும் வாழ்வும், கண்மணிப் பூங்கா, பூவையர் பூங்கா, விநாடிவினா, ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிபரப்பப்படும் திரைப்படங்கள் போன்றவை நம் நினைவில் நிற்கின்றன என்றும் இது இன்னும் பல்லாண்டுகள் தொடர்ந்து சிறந்த சேவையை நாட்டு மக்களுக்கு வழங்கும் என்றும் அவர் கூறினார். இதற்கு உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் அமைச்சர் தெரிவித்தார்.

டிடி தமிழ் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பொன்விழா கொண்டாட்ட நிறைவு நிகழ்ச்சி பெரிய அளவில் நடத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

 இந்தியாவின் படைப்பாற்றல் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் மும்பையில் வரும் மே 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை, உலக ஒலி, ஒளி, பொழுதுபோக்கு உச்சி மாநாடான வேவ்ஸ் உச்சி மாநாடு நடத்தப்பட உள்ளதாக அவர் கூறினார். இந்நிகழ்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஒரு நாள் முழுவதும் பங்கேற்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஹாலிவுட் திரைப்படங்களின் தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளை மேற்கோள்ளும் அளவிற்கு இந்திய திரைத் துறை தற்போது சிறப்பான வளர்ச்சி அடைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். படைப்பாற்றல் திறன் கொண்ட இளைஞர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் ஊக்குவிக்கும் விதமாகவும், அவர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் விதமாகவும் வேவ்ஸ் உச்சி மாநாடு நடத்தப்பட உள்ளதாக அவர் கூறினார். 


இது ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறை சார்ந்த அனைவரையும் ஒருங்கிணைக்கும் என்றும் இந்த மாநாடு, நாட்டின் படைப்பாற்றல் திறனை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் என்றும் இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் தெரிவித்தார்.நிகழ்ச்சியில், தூர்தர்ஷன் தலைமை இயக்குநர் கே பி சதிஷ் நம்பூதிரிபட், பரதநாட்டியக் கலைஞர் பத்ம விபூஷண் பத்மா சுப்ரமணியம், தொழிலதிபர் நல்லி குப்புசாமி, சென்னை டிடி தமிழ் தொலைக்காட்சியின் துணைத் தலைமை இயக்குநர் ஆர். கிருஷ்ணதாஸ் மற்றும் செய்திப்பிரிவு இயக்குநர்
 குருபாபு பலராமன் உள்ளிட்டோரும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.




 



பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது – நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் !

 




உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தியது தொடர்பாக பேசிய அவர், சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தத்தை எதிர்த்து பாகிஸ்தான் உலக வங்கியிடம் முறையிட்டால் அதை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் எனகூறினார்.

இந்தியா மேற்கொள்ள உள்ள 3 திட்டங்களால் பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது எனவும் சி.ஆர்.பாட்டீல் தெரிவித்தார். நீண்ட கால திட்டமாக அணைகளில் துார்வார முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் புதிய அணை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன் புதிய நீர் மின் திட்டத்தை விரைந்து செயல்படுத்துவது உள்ளிட்ட பல முடிவுகள் எடுக்க இந்த கூட்டத்தில் திட்டமிடப்பட்டதாகவும்  சி.ஆர்.பாட்டீல் கூறினார்.














10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை:போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது .

 தேனி, தேனி மாவட்டம் சின்னமனூர் புதுகிணறு தெருவை சேர்ந்தவர் மச்சப்பாண்டி (வயது 25). இவர், 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர், சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இந்த புகார், போடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மச்சபாண்டியை கைது செய்தார். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




கர்நாடகாவுக்கு சுற்றுலா சென்ற ; தமிழக மருத்துவக்கல்லூரி மாணவிகள் கடலில் மூழ்கி பலி.

 பெங்களூரு, திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு படித்து வந்தவர்கள் கனிமொழி ஈஸ்வரன் (வயது 23), இந்துஜா நடராஜன் (23). இறுதியாண்டு தேர்வுகள் நிறைவடைந்தபின் இவர்கள் உள்பட மருத்துவ மாணவிகள் 23 பேர் கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் தாண்டேலி, கோகர்ணா, முருடேஸ்வருக்குசுற்றுலா சென்றனர். அவர்கள் நேற்று முன்தினம் கோகர்ணாவில் உள்ள குட்லே கடற்கரை அருகே ஜடாயுதீர்த்த கடற்கரைக்கு சென்றுள்ளனர். 

மாலை 6.20 மணி அளவில் மாணவிகள்கடலில் இறங்கி குளித்து மகிழ்ந்தனர். அந்த சமயத்தில் ஏற்பட்ட ராட்சத அலையில் மாணவிகள் இந்துஜாவும், கனிமொழியும் சிக்கிக்கொண்டனர். அவர்கள் ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். இதனால் சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர்.


அப்போது அந்த பகுதியை சேர்ந்த மணிராஜ் என்பவர், கடலில் குதித்து 2 மாணவிகளையும் காப்பாற்ற முயன்றார். ஆனாலும் அவரும் ராட்சத அலையில் சிக்கி கொண்டு கடலில் மூழ்கி தத்தளித்தார். இதுபற்றி அறிந்ததும் குட்லே கடற்கரையில் இருந்து நீர்சாகச குழுவினர் விரைந்து வந்து கடலில் மூழ்கி தத்தளித்த 3 பேரையும் காப்பாற்ற தீவிர முயற்சி மேற்கொண்டனர். அப்போது அவர்கள் மணிராஜை மட்டும் உயிருடன் காப்பாற்றினர். ஆனால், மாணவிகள் கனிமொழி, இந்துஜாவை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. அவர்கள் 2 பேரும் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மாணவிகள் 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






Saturday, 19 April 2025

மதிமுக முதன்மை செயலாளர் பதவியிலிருந்து திருச்சி எம்பி துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார்.

 மதிமுக முதன்மை செயலாளர் பதவியிலிருந்து திருச்சி எம்பி துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார்.

மல்லை சத்யாவுடன் ஏற்பட்ட மோதலை அடுத்து அவர் கட்சி பதவியிலிருந்து விலகியதாக தெரிகிறது. நிர்வாக குழு கூட்டத்திலும் பங்கேற்பேன், திருச்சி எம்பி என்ற முறையில் திருச்சி மக்களுக்கு செய்ய வேண்டியதை செய்வேன் என்றும் தெரிவித்துள்ளதாக  தகவல் .



Thursday, 17 April 2025

வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும்: காடேஸ்வரா சுப்பிரமணியம்இந்து முன்னணி மாநிலத்தலைவர் வலியுறுத்தல்

     இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றிய வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என இந்து முன்னணி மாநிலத்தலைவர்  வலியுறுத்தியுள்ளார்.

         அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சமீபத்தில் வக்பு வாரிய திருத்தத் சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் வேலூர் மாவட்டம் இறைவங்காடு என்ற கிராமத்தில் வசிக்கும் 150 இந்து குடும்பங்களின் பூர்வீக சொத்துக்கள் வக்பு வாரியத்திற்குச் சொந்தம் எனவும் அவர்கள் வெளியேற வேண்டும் எனவும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    இத்தகைய அநீதியை எதிர்த்து எந்த அரசியல் கட்சியும் வாயைத் திறக்கவில்லை. ஆனால் வக்பு வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஊர் ஊராக ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். ஆனால் வேலூர் இறைவங்காடு கிராமத்து அப்பாவி இந்துக்களின் சொத்தின் உரிமையை பாதுகாக்க எந்த அரசியல்வாதிகளும் போராட முன்வரவில்லை. இந்து முன்னணி முன்னின்று போராடி வருகிறது.

    ஓட்டு வங்கி அரசியலுக்காக சிறுபான்மையினர் தாஜா என்பது மாறி இந்துக்களின் சொத்து, வியாபாரத்தை அபகரிப்பதற்கு துணைபோவது, மதமாற்றத்தால் இந்து குடும்பங்களை சீரழிப்பது, கல்வி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு சலுகையில் சிறுபான்மையை திணிப்பது என அக்கிரம செயல்களுக்கு அரசியல்வாதிகள் துணைப்போகின்றனர். இதனை இந்துக்கள் இன்னமும் உணரவில்லை என்றால் நாளை நாம் அகதிகளாக அடைக்கலம் தேடி திரியவேண்டி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    வக்பு வாரியத்தின் அநியாயமான செயல்பாடு குறித்து தமிழகத்தில் தான் முதலில் வெளிச்சத்திற்கு வந்தது. திருச்சி - திருச்செந்துரை கிராமத்தில் 1500 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் மற்றும் பல நூறு ஏக்கர் இந்துக்களின் பரம்பரை சொத்துக்கள் வக்பு வாரிய சொத்து என சொந்தம் கொண்டாடியது. இஸ்லாம் தோன்றுவதற்கு பல நூறு ஆண்டுகள் முன்பே இருந்த சிவன் கோயில் வக்பு வாரியச் சொத்து என்று கூறியதை திமுக எம்.பி.க்கள் மழுப்பினார்கள்.

    ஆனால் இதே திமுக அரசு மாவட்ட ஆட்சியர் மூலம் தற்காலிகமாக வக்பு வாரிய தடையில்லா சான்றிதழ் இல்லாமல் சொத்து விற்பனையை பதிவு செய்ய வாய்மொழி உத்தரவு கொடுக்க வைத்தார்கள். உண்மையை சில நாட்களுக்கு மறைக்கலாம். எப்போதும் முடியாது. இந்துக்கள் தங்களது சொத்துக்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால் இந்துக்களின் சொத்துக்களை அபகரிக்கும் வக்பு வாரியத்தை ஆதரிக்கும் எந்த அரசியல்வாதிளையும் தார்மீக ரீதியாக எதிர்க்கத் துணிய வேண்டும்.

    மேற்கு வங்கத்தில் வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை எதிர்த்து முஸ்லிம்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இது இந்திய பிரிவினை காலத்தில் நடந்த மனித வேட்டையை நினைவுபடுத்துகிறது. இதன் ஆபத்தை நாடு முழுவதிலும் உள்ள இந்துக்கள் உணர வேண்டும். திருச்சி - திருச்செந்தூரை, திருப்பூர் - மங்கலம், சென்னை - திருவல்லிக்கேணி என பல மாவட்டங்களில் இந்துக்களின் சொத்துக்களை வக்பு வாரியச் சொத்து எனக்கூறி வக்பு வாரியம் சொந்தம் கொண்டாடி வருகிறது. ஏன் திருப்பரங்குன்றம் முருகன் மலையே வக்பு சொத்து என்று திமுக எம்பி நவாஸ் கனி கூறினார்.

    இன்று வேலூர் இறையங்காடு கிராமமே வக்பு வாரியச் சொத்து என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இன்னமும் இந்துக்கள் யாராவது வந்து நம்மையும் நமது சொத்துக்களையும் காப்பாற்றுவார்கள் என்று சும்மா இருந்தால் இந்த சிறுபான்மை ஓட்டு வங்கி அரசியல்வாதிகள் இந்துக்களை அனாதைகளாக, அகதிகளாக ஆக்கிவிடுவார்கள். இலங்கையில் நடந்தது போல் இனப் படுகொலை நடந்தாலும் இந்துக்களின் சொத்துக்கள் பறிபோனாலும் இந்த அரசியல்வாதிகள் வேடிக்கை தான் பார்ப்பார்கள்.

    வேலூர் - இறைவங்காடு இந்துக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி, அக்கிரமம் முடிவுக்கு கொண்டு வருவதுடன் இனி வருங்காலத்தில் இந்துக்கள் சொத்தினை அபகரிக்க வக்பு வாரியம் கைகளை நீட்டாது இருக்க புதிய வக்பு வாரிய திருத்தச்சட்டம் தமிழகத்தில் உடனடியாக அமல்படுத்தப்பட இந்துக்கள் தமிழக அரசை வலியுறுத்த வேண்டும்.

    கேரளாவில் உள்ள மக்களின் விழிப்புணர்வால் அங்கு ஆளுகின்ற கம்யூனிச அரசு புதிய வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. எனவே இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றிய வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை இந்து முன்னணி வலியுறுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளார்.




தவெக கட்சிக் கொடியில் யானை சின்னம்.. விஜய் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு!




தவெக கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்தை பயன்படுத்த பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தடை கோரிய வழக்கில் அக்கட்சியின் தலைவர் விஜய் பதில் அளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தவெக கொடியில் இருபுறமும் யானை, வாகை மலர் இடம்பெற்றிருந்தது. கட்சிக் கொடி சிவப்பு, மஞ்சள் நிறத்தில் அமைந்திருந்தது. இந்நிலையில் விஜய் அறிமுகப்படுத்தியதவெக கொடியில் பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் சின்னமான யானை இடம்பெற்றிருந்தது சர்ச்சை ஏற்படுத்தியது. 

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் பெரியார் அன்பன் என்கிற இளங்கோவன் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் விஜய் தலைமையிலான தவெக கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனு சென்னை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சக்திவேல் முன் விசாரணைக்கு வந்தது. 

அப்போது பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.ஆனந்தன், பகுஜன் சமாஜ் கட்சி தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்றும் அந்தக் கட்சிக்கு யானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த சின்னத்தை அசாம் தவிர மற்ற மாநிலங்களில் பகுஜன் சமாஜ் கட்சி மட்டுமே இந்த சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார்.

வக்பு சட்டத்துக்கு இடைக்கால தடை-உச்சநீதிமன்றம் அதிரடி! ஒரு வாரத்தில்; மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

டெல்லி: மத்திய அரசின் வக்பு சட்டத்துக்கு இடைக்கால தடை-உச்சநீதிமன்றம் அதிரடி! ஒரு வாரத்தில்; மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு! 

வக்பு (திருத்த) சட்டம் (ஒருங்கிணைந்த வக்பு மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாடு) கடந்த 8-ம் தேதி அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, ஏஐஎம்ஐஎம், சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் மொத்தம் 73 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில், இந்த சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிராக உள்ளது என்றும் இதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

வக்பு (திருத்த) சட்டத்துக்கு எதிரான மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்து மத அறக்கட்டளையில் முஸ்லிம்கள் உறுப்பினராக அனுமதிப்பீர்களா என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பெஞ்ச் முன்பாக இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது இன்று வரை வக்பு சட்டத்தின் மீதான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இன்று பிற்பகல் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வக்பு சட்டத்துக்கு எதிரான வழக்கு விசாரணை நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது, வக்பு சட்டத்துக்கு எதிராக 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதனால் 6 ரிட் மனுக்களை மட்டுமே விசாரணை எடுத்துக் கொள்வதாக நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் வக்பு சட்டத்துக்கு எதிரான மனுக்களுக்கு மத்திய அரசு, வக்பு வாரியம் உள்ளிட்டவை ஒருவாரத்துக்குள் பதிலளிக்கவும் உத்தரவிட்டது.

 வக்பு சட்டத்துக்கு எதிரான வழக்கில் மத்திய அரசு ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வக்பு சட்டத்துக்கு எதிரான வழக்குகள் மீதான விசாரணை அடுத்த மாதம்

 மே 5-ந் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம்.

Tuesday, 15 April 2025

6 மாதத்தில் 25,000 பேருக்கு எச்ஐவி! -தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்


தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று கேள்வி நேரம் நடைபெற்றது. அப்போது கடையநல்லூர் எம்எல்ஏ கிருஷ்ண முரளி, எச்ஐவி நோய் தொற்றாளர்களுக்கு ஓய்வூதியத்தை அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.


அப்போது பேசிய தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தமிழகத்தில் ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 908 நபர்கள் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் கூட்டு மருந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்காக 76 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள் மூலம் மருந்துகள் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எச்ஐவி தோற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு ஓய்வூதிய திட்டம் எதுவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் செயல்படுத்தப்படவில்லை. அதே நேரத்தில் எச்ஐவி பாதிக்கப்பட்டோரின் குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு அரசு சார்பில் இதுவரை 1.81 கோடி ரூபாய் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்காக செலவிடப்பட்டு இருக்கிறது.

தமிழகத்தில் ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 908 பேருக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் தமிழ்நாட்டில் 25,000 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. எச்ஐவி தொற்றாளர்களின் குழந்தைகளின் கல்வி மருத்துவ செலவுக்காக தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி 5 கோடி ரூபாய் நிதியை வைப்பு நிதியாக கொடுத்தார், அந்த நிதி தற்போது 25 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது, அந்த நிதியின் மூலம் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட 18க்கு வயதுக்கு உட்பட்ட 7618 குழந்தைகளின் கல்வி மருத்துவச் செலவுக்கு 1.81 கோடி செலவிடப்பட்டிருக்கிறது கல்விக்கும் நிதி வழங்கப்படும் எனக் கூறியிருக்கிறார்.

தமிழகத்திலும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் ஆரம்பித்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து அதன் மூலம் பள்ளி கல்லூரிகள், லாரி ஓட்டுனர்கள், பாலியல் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு நிலையில் எச்ஐவி பாதிப்பு வெகுவாக குறைந்தது. இந்த நிலையில்ஆறு மாதத்தில் 25 ஆயிரம் பேருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது என அமைச்சர் கூறி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.





டாஸ்மாக் முறைகேடு! முதல் தகவல் அறிக்கை தாக்கல்- அமலாக்கத் துறைக்கு ஹைகோர்ட் உத்தரவு

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நடத்தப்பட்ட சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தாக்கல் செய்த வழக்கு வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வில் 15.4.2025  மீண்டும் விசாரணைக்கு வந்தது.



அப்போது டாஸ்மாக் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் விக்ரம் சவுத்ரி, விகாஸ் சிங் ஆகியோர், விசாரணையை துவங்கிய அன்றே அமலாக்கத் துறை நேரடியாக டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தியதின் நோக்கம் என்ன என கேள்வி எழுப்பினர். சோதனைக்கு வந்த நாளில் முதல் தகவல் அறிக்கையை தவிர, வேறு எந்த ஆதாரங்களும் அமலாக்கத் துறை வசம் இல்லை எனவும் மத்திய விசாரணை அமைப்புகளுக்கு தமிழக அரசு வழங்கியிருந்த ஒப்புதல் 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் திரும்ப பெற்றதை அடுத்து மாநில அரசின் அனுமதி இல்லாமல் சிபிஐ வழக்கு பதிவு செய்ய முடியாது என்றனர். எந்த வழக்கின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது என்பதை அமலாக்கத் துறை தெரிவிக்கவில்லை எனவும் இந்த முதல் தகவல் அறிக்கைகள் இல்லாமல் வாதங்களை முன்வைப்பது இயலாத காரியம் எனவும் குறிப்பிட்டனர்.


நாட்டில் உள்ள 29 மாநிலங்களில் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் ஏதேனும் ஒரு துறையை தேர்ந்தெடுத்து அமலாக்கத் துறை விசாரணை நடத்த துவங்கினால் அந்த அபாயத்தை புரிந்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டனர். தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், அமலாக்கத் துறையின் நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும், டாஸ்மாக்கில் ஏதேனும் முறைகேடு நடந்தால் அது தொடர்பாக மாநில அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் தவறு செய்தவர்கள் தூக்கி எறியப்படுவார்கள் எனவும் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், டாஸ்மாக் முறைகேடு விசாரணைக்கு மாநில அரசு அமலாக்கத் துறைக்கு உதவலாமே? என கேள்வி எழுப்பினர்.


அமலாக்கத் துறையின் சோதனை நடந்து கொண்டிருந்த போதே, டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் மோசடி என ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் பேட்டியளித்தார். அதற்கு என்ன அர்த்தம் எனவும் கேள்வி எழுப்பினார். இதனையடுத்து, டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழக காவல்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தனர்.

பாமகவில் நடப்பது உட்கட்சி விவகாரம்.. எங்களுக்குள் பேசிக் கொள்வோம்.. அன்புமணி ராமதாஸ்

 சென்னை: பாமகவுக்குள் நடப்பது உட்கட்சி விவகாரம் என்றும், இதனை எங்களுக்குள் பேசிக் கொள்வோம் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இனி அன்புமணி ராமதாஸ் பாமகவின் செயல் தலைவராக செயல்படுவார். பாமகவின் தலைவர் பொறுப்பை நானே எடுத்து கொள்கிறேன். 2026 சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்களை வழிநடத்தவே இந்த முடிவு எடுத்துள்ளேன். பாமக தலைவராக நான் பொறுப்பேற்றதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு.
அனைத்தையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது. கூட்டணி உள்ளிட்ட விஷயங்கள் குறித்து கட்சியின் நிர்வாகிகளை அழைத்து பேசி முடிவெடுப்போம் என்று தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதனைத் தொடர்ந்து தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் வீட்டிற்கு பாமக நிர்வாகிகள் பலரும் படையெடுத்தனர். ஆனால் ராமதாஸ் எடுத்த முடிவில் பிடிவாதமாக இருந்து வருகிறார்.

இதனிடையே பாமக தொண்டர்கள் யாரும் தன்னை பார்க்க வர வேண்டும் என்று கேட்டு கொண்டதாக தகவல் வெளியாகியது. நேற்று இரவு அன்புமணி ராமதாஸ் தரப்பில், பாமகவின் தலைவராக தொடர்ந்து செயல்படுவேன் என்று பதிலடி கொடுத்தார். அதேபோல் மே 11ஆம் தேதி மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டை வெற்றிகரமாக நடத்த பணிகள் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

பாமகவில் தந்தை மற்றும் மகனுக்கு இடையிலான மோதல் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் 12 ஆண்டுகளுக்கு பின் நடக்கவுள்ள சித்திரை நிலவு மாநாட்டு பணிகளை அன்புமணி ராமதாஸ் ஆய்வு செய்தார். அவருடன் பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் இருந்தனர்.

அன்புமணி ராமதாஸ் பேட்டி 

இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து அன்புமணி ராமதாஸ் பேசுகையில், வரும் மே 11ஆம் தேதி மாமல்லபுரம் அருகே சித்திரை நிலவு வன்னியர் இளைஞர் திருவிழா மாநாடு நடக்கவுள்ளது. இந்த மாநாட்டின் முக்கிய கோரிக்கைகள் சமூக நீதி அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்டவை உள்ளன. இந்த மாநாட்டிற்கு இளைஞர்கள், பெண்கள் பங்கேற்க உள்ளனர். 

உட்கட்சி விவகாரம் 

இந்த மாநாடு மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடக்கவுள்ளது. அதேபோல் தற்போது பாமகவுக்குள் நடப்பது உட்கட்சி விவகாரம். எங்களுக்குள் பேசிக் கொள்வோம். ராமதாஸ் வழிகாட்டுதலில் பாமகவை தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியாக மாற்றுவதற்கு கடுமையாக உழைப்போம் என்று தெரிவித்துள்ளார்.

வேளாண்மை கூட்டுறவு வங்கியில், அடகு வைக்கப்பட்ட நகைகளை திருப்பி கொடுக்கவில்லை என்று மக்கள் போராட்ட ம்

 தருமபுரி: தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே மோதூர் கிராமத்தில் அமைந்துள்ள வேளாண்மை கூட்டுறவு வங்கியில், அடகு வைக்கப்பட்ட நகைகளை திருப்பி கொடுக்கவில்லை என்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே மோதூர் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி 1952 முதல் இயங்கி வருகிறது. இந்த வங்கியில் இப்பகுதியை சேர்ந்த 3300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது வங்கிக் கணக்கினை தொடங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
வங்கியில் விவசாயம், மகளிர்குழுகடன், பயிர் கடன், விவசாய பொருட்கள் கடன், மேலும் தங்க நகை கடன் உள்ளிட்டவைக்கு, இந்த வங்கியில் இருந்து பொதுமக்கள் கடன்பெற்று தங்களது அவசர தேவைக்கு பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டில் தங்க நகை கடன் ஐந்து பவுனிற்கும் குறைவாக உள்ளவர்கள் அனைவருக்கும் தமிழக அரசால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த தங்க நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு தற்போது 15 ஆண்டுகள் ஆகியும் இதுவரை உரிய நகை வழங்கவில்லை என கூறி, வாடிக்கையாளர்கள் வங்கி முன்பு இன்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டு வங்கி அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதுகுறித்து வாடிக்கையாளர்களிடம் கேட்டபோது வங்கியில் தங்களது நகையை வங்கி அதிகாரிகள் ஊழல் செய்து, தங்களது நகையை தர மறுப்பதாகவும், மேலும் தங்க நகைக்கு பதிலாக பணம் பெற்றுக் கொள்ளுமாறு வங்கி அதிகாரிகள் கூறியதாகவும் வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய மேலதிகாரிகளை இந்த வங்கியில் பணி அமர்த்தி தங்களது கோரிக்கையை நிறைவேற்றாமல், 15 ஆண்டுகளாக விசாரணை என்ற பெயரில் நாடகம் நடத்தி வருவதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வங்கி மேலார்களிடம் கேட்டபோது, இந்த வங்கியில் 2015-ஆம் ஆண்டில் வேலை செய்த ஊழியர்கள் சிலர் இங்கே விவசாயிகள் அடகு வைத்த சுமார் 1-கோடி மதிப்புள்ள 134 கிராம் நகைகளை கையாடல் செய்துள்ளதாகவும், அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு தற்போது அந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதாகவும் விளக்கம் கூறினர். தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து தங்களது நகையை பெற்றுத் தரும்படி தள்ளுபடி செய்யப்பட்ட வங்கி வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Thursday, 10 April 2025

டாஸ்மாக் வழக்கில்அதிகாரிகளை காப்பாற்ற பாக்குறீங்களா?தமிழக அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்

  தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கீழ் இயங்கும் டாஸ்மாக் தமிழகத்தில் தற்போது சில்லறை மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இங்கு பல்வேறு தனியார் மது உற்பத்தி நிறுவனங்களின் மது வகைகள் விற்கப்படுகிறது.


இந்த நிலையில், நிர்ணயத்தை விலையை விட கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், மேலும் கணக்கில் காட்டாமல் தனியார் மது உற்பத்தி நிறுவன உரிமையாளருடன் சேர்ந்து முறைகேடு நடப்பதாக புகார் கூறப்பட்டது

இதனையடுத்து அந்த தகவலின் அடிப்படையில் சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 6ஆம் தேதி முதல் சோதனை நடத்தினர். ஒரு சில இடங்களில் சோதனை முடிவடைந்த நிலையில், சென்னை, புதுக்கோட்டை, கோவை ஆகிய பகுதிகளில் சோதனை 8ஆம் தேதி வரை நீடித்தது. சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம், அம்பத்தூர் டாஸ்மாக், திமுக எம்பி ஜெகத்ரட்சகன் சொந்தமான அக்காடு டிஸ்டிலர்ஸ் மதுபான நிறுவனம் அக்கார்டு ஹோட்டல், ஆயிரம் விளக்கு உள்ள எஸ்என்ஜெ டிஸ்டிலரீஸ், டி நகரில் உள்ள கால்ஸ் மதுபானம், சிவா டிஸ்டிலரீஸ், மயிலாப்பூர் ஆர் கே சாலையில் உள்ள எம்ஜிஎம் மதுபானம் நிறுவனம் ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை வரை சோதனை நடைபெற்ற நிலையில், சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை மதுபான கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் 1000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், அமலாக்கத் துறையின் இந்த சோதனையை அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது என அறிவிக்கக் கோரியும், அரசு அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரியும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளை துன்புறுத்த கூடாது என அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி தமிழக உள்துறை செயலாளரும், டாஸ்மாக் நிர்வாக இயக்குனரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில், டாஸ்மாக் வழக்கை நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வு விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதால், வழக்கை தள்ளிவைக்க வேணடும் என கோரிக்கை வைக்கபட்டது. அப்போது நீதிபதிகள் வழக்கு விசாரணைக்கு வந்த போதே உச்ச நீதிமன்றம் செல்வதாக கூறியிருந்தால் வழக்கை நாங்கள் பட்டியிலிட்டிருக்க மாட்டோம் என்றும், இதன் மூலம் நீங்கள் நீதிமன்றத்தை இழிவுபடுத்தியுள்ளதாகவும், குறைந்தபட்சம் நீதிமன்றத்திற்காவது நேர்மையாக இருக்க வேண்டும் என அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், இந்த மனு பொது நலத்துக்காக தாக்கல் செய்யப்பட்டதா? அல்லது சில டாஸ்மாக் அதிகாரிகளை காப்பாற்றுவருவதற்கு செய்யபட்டதா என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர். மாநில அரசின் உரிமைக்காகவே மனுத்தாக்கல் செய்யப்பட்டதாகவும், மனு தாக்கல் செய்ய எங்களுக்கு உரிமை உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கபட்டது. இதையடுத்து நீதிபதிகள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படவில்லை என்றால் பிற்பகல் 2.15 மணிக்கு வாதங்களை முன்வைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.




Wednesday, 9 April 2025

தஞ்சை மாவட்டத்தில் குரூப்-4 தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 53 பேர் ஒரே நாளில் கிராம நிர்வாக அதிகாரிகளாக நியமனம் .

 கடந்த ஆண்டு (2024) ஜூன் மாதம் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் அவர்களுடைய சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது. இதையடுத்து தஞ்சை மாவட்டத்துக்கு 53 கிராம நிர்வாக அதிகாரிகள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்டார்கள்.


அதன்படி நேற்று முன்தினம் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து, தங்கள் பணியாற்ற உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான ஆணையை பெற்றுக் கொண்டு, கலெக்டர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகளிடம் வாழ்த்துகளை பெற்றுச் சென்றார்கள்.

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு மூலம் கிராம நிர்வாக அதிகாரியாக பணியில் சேர்ந்துள்ள பலர் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.. தஞ்சை மாவட்டத்தில் தற்போது ஒரே நாளில் கிராம நிர்வாக அதிகாரிகள் பணியில் சேர்ந்துள்ளார்கள். 10 பெண்கள் உள்பட 53 பேர் பணியில் சேர்ந்துள்ளதாக தகவல்.