Saturday, 27 March 2021

திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்.

 முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக, திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்.



ஆ.ராசா மீது நடவடிக்கை எடுத்து அவர் பிரசாரம் மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் எனவும் ,ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சுக்கு பல்வேறு தரப்பினர், தங்களின் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

Friday, 26 March 2021

முலாம்பழம் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் பலன்கள்

 

முலாம்பழம் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் பலன்கள்


கோடைகாலங்களில் முலாம் பழங்களை துண்டுகளாக்கி, தண்ணீரில் சர்க்கரை அதிகம் சேர்த்து கரைத்து, அதில் முலாம் பழ துண்டுகளை ஊறவைத்து பருகி வந்தால் உடல் உஷ்ணம் தணியும்.
 
முலாம்பழத்தை பழச்சாறாக குடித்தால் கண் எரிச்சல், கண் சூடு போன்றவை குறைந்து கண் குளிர்ச்சி பெறும். கல்லீரல் வீக்கத்தைக் குறைக்கும். பழச்சாறு தாகம் தீர்த்து தொண்டை வலியை குணப்படுத்தும்.

வேர்க் கசாயம் வாந்தியை நிறுத்தும். இருமல், ஆஸ்துமாவை குணப்படுத்தும். பழச்சாறுடன் இனிப்பு கலந்து உண்டால் சொறி, சிரங்கு நீங்கும். பால் சுரப்பை அதிகரிக்கும். பழத்தை கூலாக்கி எக்சிமா எனப்படும் தோல் நோய் மேல் தேய்த்தால் நல்ல பலன் கிடைக்கும். மலச்சிக்கல் நீங்கும். சிறுநீரகக் கோளாறுகள், நீர்க்  கடுப்பு போன்றவை குறையும்.
 
முலாம் பழங்களில் நார்ச்சத்து, நீர் சத்து அதிகம் உள்ளது. இதை அதிகம் சாப்பிடுவதால் மலக்கட்டு இளகி, மலம் வெளியேறும். நீண்ட நாள் மலச்சிக்கல் பிரச்சனை  தீரும்.
 
விதைகளை பொடித்து உண்ண வயிற்றுப் புழுக்கள் மாறும். இதன் விதைகளை அரைத்து நச்சுப் பூச்சிகள் கடித்த இடத்தில் சேர்த்தால் நல்ல பலன் கிடைக்கும்.  பழச்சதையை சீரகம், இஞ்சி சாறு, உப்பு சேர்த்து பிசைந்து சாப்பிட வயிற்று கோளாறுகள், குடல் நோய்கள் குணமாகும்


எலும்பு தேய்மானத்தை தடுக்க உதவும் உணவுகள் என்ன…?

 



எலும்பு தேய்மானத்தை தடுக்க உதவும் உணவுகள் என்ன…?

அகத்திகீரை, முருங்கைகரை, அரைக்கீரை, பசலைக்கீரை, கறிவேப்பிலை, தண்டுக்கீரை, குப்பைமேனி மற்றும் வெற்றிலையில் அதிகம் கால்சியம் உள்ளது.

அதிக புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் உடலில் அமிலத்தன்மையை அதிகரிக்கும். அதனால் எலும்புகள் வலுவை இழக்கும். உணவில் சேரும் அதிகப்படியான உப்பும் எலும்பின் வலிமைக்கு எதிராக அமையும்.

பால் மற்றும் பால் பொருட்களில் கால்சியம் அதிகம் உள்ளது. குழந்தைகள் ஒரு நாளைக்கு குறைந்தது 400 மிலி. பால் அருந்த வேண்டும். வயதானவர்களுக்கு பால் அதிகம் ஜீரணமாவதில்லை.

கால்சியம் சத்துகள் நிறைந்த காய்கறிகள், கீரைகள் மற்றும் சிறு தானியங்களை உண்ணலாம். காய்கறிகளில் பீட்ரூட், வெண்டைக்காய், முருங்கைகாய், சுண்டைக்காய், தாமரைத்தண்டு போன்றவற்றில் கால்சியம் அபரிமிதமாக உள்ளது.

எள், கால்சியம் சத்துக்கள் நிறைந்தது. எனவே எள்ளை வெல்லம் உருண்டைகளாக செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இரண்டு எள்ளு உருண்டையில் 1400 மி.கி. கால்சியம் உள்ளது. எள்ளை பொடியாக செய்து உணவுடன் சாப்பிடலாம். தினமும் 5 பாதம் பருப்புகளை ஊறவைத்து அரைத்து, அதை பாலுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

கேழ்வரகில் பாலை விடை அதிக கால்சியம் உள்ளது. குழந்தைகளுக்கு கேழ்வரகு மாவில் முருங்கை கீரை கலந்து அடையாக செய்து கொடுக்கலாம். இது கால்சியம் சத்துள்ள முழுமையான சிற்றுண்டி. பெரியவர்கள் கஞ்சி அல்லது கூழாக செய்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

காலிப்ளவர் பயன்கள்- உடல் எடையை வேகமாக குறைக்க உதவுகிறது.

 காலிப்ளவர் பயன்கள்



காலிப்ளவரில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் காலிபிளவரில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது.

இது ரத்தத்தில் கெட்ட கொழுப்புகளை அதிகம் சேரவிடாமல் தடுத்து, இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுத்து இதயத்தின் நலனை பாதுகாக்கிறது.

 காலிபிளவரில் கோலைன் எனப்படும் ஒரு வேதிப்பொருள் அதிகம் நிறைந்திருக்கிறது. இந்த கோலின் எனப்படும் வேதிப்பொருள் வைட்டமின் டி சத்தை  சேர்ந்ததாகும். கோலைன் சத்து மூளையின் வளர்ச்சி மற்றும் செயலாக்க திறனுக்கு மிகவும் உதவுகிறது.

 காலிபிளவரில் பியூரின் வேதிப்பொருள் அதிகம் இருக்கின்றன. உடலில் மூட்டுக்களில் வலி, வீக்கம் போன்ற பிரச்சினை ஏற்பட்டவர்கள் காலிபிளவரை தொடர்ந்து சாப்பிட்டு வர, அதிலிருக்கும் பியூரின் வேதிப்பொருள் அவர்களின் மூட்டுவலி, வீக்கம் போன்றவற்றை குணமாக்குகிறது.

 உடல் எடையை சீக்கிரம் குறைக்க குறிப்பிட்ட சில சத்துக்கள் அடங்கிய உணவுகளை அடிக்கடி சாப்பிட வேண்டும். காலிபிளவரில் சல்பராபேன் மற்றும் வைட்டமின்  சி சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன. 

  காலிபிளவரில் இருக்கின்ற ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் லெப்டின் எனப்படும் வேதிப்பொருளை சுரக்கச் செய்து, உடலின் வளர்சிதை மாற்றப் திறனை அதிகரித்து, உடல் எடையை வேகமாக குறைக்க உதவுகிறது.


வேப்பம் பூ நன்மைகள்


 வேப்பம் பூ நன்மைகள் 

பித்தம், வாதம், கபம் ஆகிய மூன்று நோய்களையும் சமன்படுத்த வேப்பம்பூ பயன்படுகிறது. ஒரு கைப்பிடியளவு வேப்பம்பூவை எடுத்து உலர்த்தி பொடி செய்து கால்  டம்ளர் நீரில் சிறிது தூளைக் கலந்து சாப்பிட்டு வந்தால் பித்தம், வாதம், கபம் சமனப்படும்.


வேப்பம்பூவை நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு வற்றல்குழம்பு, மிளகுரசம் தயார் செய்யும்போது சிறிது வேப்பம்பூவைச் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர வயிறு  உப்பிசம்,பித்தம், வாதம் தொடர்புடைய நோய்கள் நீங்கும். கல்லீசரல் பாதுகாக்கப்படும்.

 

வேப்பம்பூ பொடியில் தேன் கலந்து தினம் 2 வேளை வீதம் மூன்று நாட்கள் உட்கொண்டு வந்தால் பித்தம் காரணமாக எற்படும் வாய்க்கசப்பு, வாந்தி, மயக்கம்,  போன்ற தொல்லைகள் நீங்கும். உலர்ந்த வேப்பம்பூவை கறிவேப்பிலையோடு துவையலாக்கி சாப்பிட, பித்தம் தொடர்பான சகல பிணிகளும் நிவர்த்தியாகும்.


வேப்பம்பூவை தண்ணீரில் ஊறவைத்து அதனை குடித்து வர உடல் பருமன் குறையும். இது அல்சரையும் குணமாக்கும். உடலை வலுவாக்குவதில் வேப்பம்பூக்களின் பங்கு முக்கியமானது. தினம் இருவேளை வேப்பம்பூ பொடியை சாப்பிட முறைக்காய்ச்சல் நீங்கும்.

 

வேப்பம் பூவை வாட்டி தலையில் கட்டி வைத்தால் தலையில் உள்ள பேன், ஈறு, பொடுகு முதலியவை தீரும். இதை தலையின் உச்சியில் வைத்துக் கட்டினால் தலைபாரம் நீங்கி சுகமாக இருப்பதோடு கூந்தலும் செழித்து வளரும்.

திமுக ஒன்றிய செயலாளர் மாமல்லன் பாஜகவில் இணைந்தார்…


கடலூர் மாவட்டம், குமராட்சி திமுக ஒன்றிய செயலாளர் மாமல்லன் பாஜகவில் இணைந்தார்.நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்த நிலையில்.திமுக கூட்டணி சார்பில் இ.யூ.மு.லீக்கிற்கு சீட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனால் அதிருப்தியில் இருந்து வந்த மாமல்லன் இன்று பாஜகவில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

வாக்குப்பதிவு முறையில் எந்த குறைபாடும் இருக்கக் கூடாது - உயர்நீதிமன்றம்.

 தபால் வாக்குப்பதிவு முறையில் எந்த குறைபாடும் இருக்கக் கூடாது - உயர்நீதிமன்றம் உத்தரவு .


தபால் வாக்குகளை சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட அறையில் பாதுகாக்க  உயர்நீதிமன்றம் உத்தரவு.திமுக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

தேர்தல் பணியில் உயிரிழந்த காவலர்களுக்கு ரூ.15 லட்சம் நிதியுதவி - தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவிப்பு நிதியுதவி- தலைமை தேர்தல் அதிகாரி

 

தேர்தல் பணியில் உயிரிழந்த இரண்டு காவலர்களுக்கு தலா ரூ.15 லட்சம் நிதியுதவி - தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவிப்பு.

சிவகங்கையில் இன்று தேர்தல் பணியில் இருந்த இரண்டு காவலர்கள் மீது பேருந்து மோதியது.அதன் தொடர்பாக, பணியில் உயிரிழந்த இரண்டு காவலர்களுக்கு தலா ரூ.15 லட்சம் நிதியுதவி - தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவித்தார்.

நீட் தேர்வை கொண்டு வந்ததே காங்கிரஸ் - தி.மு.க.கூட்டணிதான்-முதல்வர்பழனிசாமி ஆவேசம்

 “காங்கிரஸ் திமுக கூட்டணியில் தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. இதை மறுக்கும் துணிவு யாருக்காகிலும் உண்டா? சாமானிய மக்களின் நிலையை அறிந்த நான் 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி, போன வருடம் 6 மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பிற்கு சென்றிருந்த நிலை மாறி, இந்த வருடம் 435 பேர் மருத்துவ கல்லூரியில் சேர்ந்திட வழிவகுத்துள்ளேன்.” - முதல்வர் எடப்பாடி பழனிசாமி .


பாஜகவிற்கு எதிரான புகாரை விரைவாக விசாரிக்க வேண்டும் - ஆதார் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

  பாஜக மீதான புகாரை விசாரித்து முடிக்கும் வரை புதுச்சேரியில் தேர்தலை ஏன் தள்ளிவைக்க கூடாது?.புதுச்சேரி வாக்காளர்களின் தெலைபேசி எண்கள் பாஜகவினருக்கு எப்படி கிடைத்தது? - சென்னை உயர்நீதிமன்றம்

பாஜகவிற்கு எதிரான புகாரை விரைவாக விசாரிக்க வேண்டும் - ஆதார் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.புதுச்சேரியில் வாக்காளர்களின் தொலைபேசி எண்களை பெற்று பாஜக பிரசாரம் செய்ததை எதிர்த்த வழக்கில் உத்தரவு

Friday, 19 March 2021

மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி

 "மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி"

மக்கள் நீதி மய்யம் வேளச்சேரி தொகுதி வேட்பாளர் சந்தோஷ் பாபுவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக,தனது டுவிட்டர் பக்கத்தில் சந்தோஷ் பாபு பதிவு போட்டுள்ளார் .அவர் டிஜிட்டல் முறையில் தனது பிரசாரத்தை தொடருவேன் என பதிவிட்டுள்ள சந்தோஷ் ,நேற்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, 18 March 2021

#விஜய்வசந்த் நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில்வேட்புமனு








 #கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் சார்பில்  முன்னாள் கன்னியாகுமரி பாராளுமன்ற  உறுப்பினர் மறைந்த வசந்தகுமார் எம் .பி   மகனும் நடிகருமான விஜய்வசந்த் நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம்  வேட்புமனு தாக்கல் செய்தார்.










#தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

 

# கொரோனா 2-ம் அலை நாடு முழுதும் வேகமாக பரவி வரும் இந்த சூழலில் பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பதினரை காத்திடும் முயற்சியாக தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது..
சென்னையில் உள்ள பத்திரிகையாளர்கள் & குடும்பத்தினர் இந்த முகாம் மூலமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்..
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள விருப்பம் உள்ளவர்கள் பயன்படுத்தி கொள்ளவும்..
முன்பதிவு அவசியம்.. கட்டணமில்லா சேவை..

என்றும் பத்திரிகையாளர் நலனில்..
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்
9840035480

நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில்நேற்று குஷ்பு வேட்புமனு தாக்கல்

 


 

நேற்று சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி, அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளராக நடிகை குஷ்பு, திமுக வின் வேட்பாளர்,  Dr.எழிலனை எதிர்த்து களமிறங்கி உள்ளார்.

நேற்று நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

 வேட்பு  மனுவில்  8ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதாக வேட்பு மனுவில் கூறியுள்ளார்.இந்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம்  மொழிகளில் பேசவும் எழுதவும் தெரிந்தவர்

சொத்து பட்டியலையும் இணைத்துள்ளார். அத்துடன் அவர் மீதான வழக்கு விவரங்களையும் குறிப்பிட்டுள்ளார். குஷ்பு தன் மீது தமிழகம் முழுவதும் 4 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

குஷ்பு சொத்துபட்டியலில், தனது கையிருப்பாக ரூ.2 லட்சத்து 15 ஆயிரத்து 600ம், அவரது கணவர் சுந்தர்.சி கையிருப்பாக ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று, குஷ்பு தன் பெயரில் 8.55 கிலோ தங்கம், 78 கிலோ வெள்ளி, 2 கார்கள் மற்றும் கணவர் பெயரில் 3 கார்கள், 495 கிராம் தங்கம், 9 கிலோ வெள்ளி உள்ளன என்றும் கூறியுள்ளார்.

குஷ்பு தனது பெயரில் ரூ.4 கோடியே 55 லட்சத்து 45 ஆயிரத்து 693 மதிப்பில் அசையும் சொத்துக்களும், தனது கணவர் பெயரில் ரூ.1 கோடியே 83 லட்சத்து 98 ஆயிரத்து 58 மதிப்பிலான அசையும் சொத்துக்களும் உள்ளது என்று வேட்பு மனுவில் கூறியுள்ளார். அத்துடன் தனது முதல் குழந்தை பெயரில் 11 லட்சத்து 89 ஆயிரத்து 304 மதிப்பிலும், இரண்டாவது குழந்தை பெயரில் ரூ.12 லட்சத்து 560 மதிப்பில் அசையும் சொத்துக்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

குஷ்பு தன் பெயரில் செங்கல்பட்டு முட்டுக்காடு பகுதியில் சொகுசு பங்களா, திருக்கழுகுன்றத்தில் பங்களா, கணவர் பெயரில் மேடவாக்கத்தில் பங்களா, கோயம்புத்தூரில் பங்களா என தனது பெயரில் ரூ.17 கோடியே 99 லட்சம் 87 ஆயிரத்து 500 மதிப்பிலான அசையா சொத்துக்களும், கணவர் பெயரில் ரூ.16 கோடியே 57 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துக்களும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது பெயரில் ரூ.3 கோடி 45 லட்சம், 13 ஆயிரம் 950 மதிப்பிலும், கணவர் பெயரில் 55 லட்சம் 55 ஆயிரம் 939 மதிப்பில் கடன்கள் உள்ளதாகவும் குஷ்பு வேட்பு மனுவில் கூறியுள்ளார்.


 

Wednesday, 10 March 2021

1,322 நிறுவனங்கள் மூடல்.. இந்தியாவில் 3வது இடத்தில் தமிழ்நாடு..!

 இந்தியாவில் கொரோனா தொற்றுக் காரணமாக நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் நிறுவனங்கள் வர்த்தகம் இல்லாமலும், உற்பத்தி பணிகள் செய்ய முடியாமலும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனால் லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்பும் பல நிறுவனங்களால் மீண்டு வர முடியாமல் தவித்து வந்தது.

இதன் எதிரொலியாகத் தமிழ்நாட்டில் மட்டும் லாக்டவுன் அறிவிப்புச் செய்யப்பட்ட பின்பு 1000த்திற்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் முழுமையாக மூடப்பட்டு, வர்த்தகத்தை விட்டு வெளியேறியுள்ளது.


லாக்டவுன் எதிரொலி லாக்டவுன் பாதிப்புகளில் இருந்து இன்று வரையில் மீள முடியாமல் பல கோடி நிறுவனங்கள் தவித்து வரும் நிலையில், வர்த்தகச் சரிவை எதிர்கொள்ள முடியாமல் நிறுவனங்களை மொத்தமாக மூடப்பட்டு, வர்த்தகத்தை விட்டு வெளியேறிய நிறுவனங்கள் குறித்து முக்கியமான ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.

10,113 நிறுவனங்கள் மூடல் லோக் சபாவில் லாக்டவுன் பாதிப்புகள் மற்றும் நிறுவன மூடல் குறித்து எழுந்த கேள்விக்கு மத்திய கார்ப்பரேட் விவகாரத் துறை விளக்கம் அளித்துள்ளது. இந்த விளக்கத்தில் லாக்வுடன் அறிவிக்கப்பட்டத்தில் இருந்து அதாவது ஏப்ரல் 2020 முதல் பிப்ரவரி 2021 வரையில் நாடு முழுவதும் சுமார் 10,113 பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளது.

இதுமட்டும் அல்லாமல் பதிவு செய்யப்படாத சிறு, குறு, கைத்தொழில், குடிசை தொழில் எனப் பல ஆயிரம் நிறுவனங்கள் முடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் அதிகம் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்ட மாநிலத்தில் தமிழ்நாடு 3வது இடத்தில் இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கும் விஷயமாக உள்ளது.

3வது இடத்தில் தமிழ்நாடு ஏப்ரல் 2020 முதல் பிப்ரவரி 2021 வரையிலான காலகட்டத்தில் டெல்லியில் 2,394 நிறுவனங்களும், உத்திர பிரதேசத்தில் 1,936 நிறுவனங்களும், தமிழ்நாட்டில் 1,322 நிறுவனங்களும் மூடப்பட்டு முதல் 3 இடத்தைப் பிடித்துள்ளது. கடைசி இரண்டு இடத்தில் அந்தமான் & நிகோபர், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் உள்ளது.