Thursday, 17 October 2019

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மெயின் ரோட்டில் பழுதடைந்த சாலைகளை சரி செய்த நத்தம் ஹைவே காவல்துறையினர்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மெயின் ரோட்டில் பழுதடைந்த சாலைகளை சரி செய்த நத்தம் ஹைவே காவல்துறையினர்

 நத்தம் பலமுறை நெடுஞ்சாலைத்துறை இடம் குறைகளைக் கூறி சரி செய்யாததால் நத்தம் ஐ வே காவலர்களே அவர்களது சொந்த செலவில் ரோட்டில் விழிப்புணர்வு படங்கள் மற்றும் சொந்த செலவில் வேகத்தடையில் வெள்ளை பெயிண்ட் அடித்து விழிப்புணர்வு குறிகள் படங்கள்  சிறப்பாக செய்து மக்களிடம் பாராட்டுகள் பெற்று வருகின்றனர்

தூத்துக்குடி மாவட்டம் சேரகுளத்தைச் சேர்ந்தவர் எம்.சங்கர சுப்பிரமணியன். இவர் நாங்குநேரி இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அவர் இன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரி மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம் சேரகுளத்தைச் சேர்ந்தவர் எம்.சங்கர சுப்பிரமணியன். இவர் நாங்குநேரி இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அவர் இன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரி மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அவரது மனுவில், “நாங்குநேரி தொகுதியில் அக். 21-ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தொகுதியில் அமைச்சர்கள், ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் முகாமிட்டுள்ளனர். அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா ரூ.2 ஆயிரம் வழங்க அதிமுகவினர் முடிவு செய்துள்ளனர்.

தொகுதி முழுவதும் உலா வரும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஆளும் கட்சியினர், சமூக விரோதிகள், குண்டர்களால் தொகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர். இவர்களைத் தொகுதியில் இருந்து வெளியேற்ற தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, நாங்குநேரி இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் செப். 21-ல் வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து, தேர்தலை அக். 21-க்குப் பிறகு ஒத்திவைக்க உத்தரவிட வேண்டும். தேர்தல் பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்துக்குத் தடை விதிக்க வேண்டும்” என்று கோரியுள்ளார்.

Monday, 15 April 2019

அரசியல் வாதிகளோ அதிகாரிகளோ தன் நிலைஉணர்ந்து திருந்துவது நல்லது. -மு. ச. கிருஷ்ணவேணி

நாடு எங்கே போகிறது.

தமிழகத்தில் எங்கும் குழப்பமும், போராட்டமும் நடந்தவண்ணம் உள்ளது, இதை காணும் போது நமக்குள் தமிழகம் அமைதிநிலைக்கு திரும்பாதா என்ற ஒரு எண்ணமே நமக்குள் வருகிறது. இங்குள்ள அரசியல் வாதிகள் அரசியலை வியாபாரமாக மாற்றிக்கொண்டு வருகிறார்கள், 

தங்களுக்குள் நல்ல புரிதலுடனே எல்லா ஆர்ப்பாட்டமும், உண்ணாவிரதமும் நடத்தப்படுகின்றன. இங்கு பொது மக்கள் நலனை விட, தன் மக்கள் நலனை விட சுயநலனும், பேராசையும் தான் தலைவிரித்து ஆடுகிறது. 

இதனால் மக்கள் நாம் யாரை நம்புவது, என்ற குழப்பத்திலேயே பயத்திலேயும் இருப்பதை பார்க்கும் போது ஜனநாயக நாட்டில்தான் நாம் வாழ்கிறோமா என்கின்ற குழப்பம் நமக்கும் வருகிறது. 

மேலும் சுதந்திரமான இந்த நாட்டில் அரசியல்வாதிகளையோ ஆளும் ஆட்சியாளர்களையோ அவர்களது குறைகளை எடுத்துசொல்ல அரசுக்கு கடிதம் மூலமாகவோ, அல்லது பத்திரிகைகள் மூலமாகவோ சுட்டிக்காட்ட விரும்பினாலோ கூட அவர்கள் மீது வழக்குபதிவது இப்போது வாடிக்கையாகிவிட்டது . இதையும் மீறி சில பத்திரிகைகளும், சில செய்தியாளர்களும் தன்பணியைசெய்துவிட்டு கம்பி எண்ணிவிட்டு வந்தவர்களும் உண்டு. 

ஏனென்றால் ஒருவர் சுட்டிக்காட்டும் போது மற்றவர்களுக்கும் அந்த உண்மை தெரிந்தால் அவர்களும் கொடிபிடிக்க ஆரம்பித்து விட்டால் நமது அரசியல் வாழ்க்கை, வியாபாரம் பாதிக்கப்படும் என்பதால் தானோ என்னவோ, ஆரம்பத்திலேயே, அவர்களை கண்டிப்பதாக நினைத்து அவர்கள் மீது காவல்துறை துணையுடன் கடுமையான தாக்குதல்களையும், வழக்குகளையும் அதிகாரவர்க்கம் ஏவுகிறது . இது நேர்மையானவர்கள் அனைவரையும் ஒன்றுசேர்த்து போராட தோன்றும் உணர்வுகளை தோற்றுவிக்கிறது . 

தவிர சில சுயநலவாதிகளும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு தங்களுக்கேற்ற வகையில் மக்கள் மத்தியில் பிரச்சனைகளை புதிது புதிதாக தோற்றுவித்து, பலனடைகிறார்கள். 

இவ்வாறாக மற்றவர்களின் சுயநலத்திற்கும் ஆடம்பர வாழ்க்கைக்கும் மட்டுமே பொதுமக்கள் தவறான வாழ்க்கைக்கு தள்ளப்படுகின்றனர். 

இதில் வேதனை என்னவென்றால் படித்தவர்களும், அரசு அதிகாரிகளும் அதிக பேராசையால் அடுத்தவனை கெடுக்கின்றனர், இதனால் மக்களுக்கு கிடைக்கவேண்டிய அரசு சலுகைகளை அரசியல்வாதிகளுக்கு ஜால்ரா தட்டுவதுபோல், மக்களின் வரிப்பணம் மற்றும்பிற சலுகைகளை விழுங்கி ஏப்பம் விட்டுவருகின்றனர். 

இதில் கொடுமை என்னவென்றால் இந்த கேடுகெட்டவர்கள் மீதும் சட்டம் கடுமையாக பாய்வது போல நடிக்கும் அனால் பணத்தை பார்த்ததும் பயந்து பின் வாங்கும் நிலையில் தான் நாடு தற்போது உள்ளது. இதே நிலை நீடித்தால் கண்டிப்பாக மக்கள் இறங்கி போராடவும், தயங்க மாட்டார்கள். தற்போது நம் செய்தித்தாள்களில் அடிக்கடி சில, பல பகுதி மக்கள் தங்களின் அடிப்படை பிரட்சகனைக்காக போராட்டம் நடத்துவதையும், பல அதிகாரிகள் மக்களால் சிறைபிடிக்கப்படுவதும் நாம் காண்கின்றோம், அறிகின்றோம். 

எனவே அதிகாரிகள் இதை உணர்ந்து திருந்த வேண்டும் , இல்லையெனில் மக்களால் திருத்தப்படுவார்கள், நாடு இதை நோக்கியே செல்கிறது. மக்களே தங்கள் தேவைகளுக்காக இவர்களின் கள்ளத்தனம் உணர்ந்து நேரிடையாக போராட இறங்கி விட்டனர். எனவே அரசியல் வாதிகளோ அதிகாரிகளோ தன் நிலைஉணர்ந்து திருந்துவது நல்லது. 

-மு. ச. கிருஷ்ணவேணி -ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர்

2016 சட்டப்பேரவை தேர்தலைவிட தற்போது அதிகளவில் பணம் பிடிபட்டுள்ளது.

2016 சட்டப்பேரவை தேர்தலைவிட தற்போது அதிகளவில் பணம் பிடிபட்டுள்ளது.

வாக்காளர்கள் வாக்கு செலுத்தும் பொழுது செல்போன் எடுத்து செல்ல அனுமதியில்லை - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ.

நாளை மாலை 6 மணி முதல் 18-ம் தேதி வாக்குப்பதிவு முடிவடையும் வரை தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக் கூடாது.

நாளை மாலை 6 மணி முதல் திரைப்படம், தொலைக்காட்சி, வானொலி மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக பிரசாரம் செய்யக் கூடாது -தேர்தல் ஆணையம்

8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றுவோம் -மாஃபா பாண்டியராஜன் பேட்டி.

விவசாயிகள் ஒத்துழைப்போடு 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றுவோம் - பூந்தமல்லியில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி.

ரூ.499.47 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல்

நாடு முழுவதும் தேர்தல் பறக்கும்படை சோதனையில் இதுவரை ரூ.2550.75 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல்

தமிழகத்தில் இதுவரை ரூ.499.47 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல்

யார் தடுத்தாலும் எட்டு வழிச்சாலை அமையும்" - பொன்.ராதாகிருஷ்ணன்

"யார் தடுத்தாலும் எட்டு வழிச்சாலை அமையும்" - பொன்.ராதாகிருஷ்ணன்

      சென்னை- சேலம் இடையிலான எட்டு வழிச்சாலை அமைய, மக்கள் விரும்பினால், யார் தடுத்தாலும், அந்த திட்டம் நிறைவேற்றப்படும் என கன்னியாகுமரி மக்களவை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் திட்டவட்டமாக தெரிவித்தார். கிருஷ்ணன்கோவில் பகுதியில் திறந்த வாகனத்தில் வீதி வீதியாகச் சென்று வாக்குசேகரித்த போது பேசிய அவர், சிலரின் தூண்டுதலால் இந்த திட்டத்தை மக்கள் எதிர்ப்பதாக கூறினார். மேலும், கன்னியாகுமரியில் துறைமுகம் அமைந்தால் மீனவர்கள் உட்பட 20 லட்சம் மக்களின் வாழ்வு மேம்படும் எனவும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

ரயிலில் வழங்கப்படும் உணவு மற்றும் குடிநீரின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை.

இந்தாண்டு இறுதிக்குள் அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த வேண்டும் - தென்னக ரயில்வேக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

ஊழியர்களின் வருகையை உறுதி செய்ய ரயில் நிலையங்களில் பயோ மெட்ரிக் வருகை பதிவு முறையை அமல்படுத்த வேண்டும் - நீதிமன்றம்.

ரயில் நிலையங்களில் உள்ள சட்டவிரோத பேனர்களை ரயில்வே டிஜிபி, ஐஜி ஆகியோரின் பாதுகாப்புடன் உடனடியாக அகற்ற வேண்டும், ரயில் நிலைய சுவர்களில் உள்ள விளம்பரங்களையும் அகற்றி தூய்மைப்படுத்த வேண்டும் - நீதிமன்றம்.

ரயிலில் வழங்கப்படும் உணவு மற்றும் குடிநீரின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை.

அரசியல் கட்சிகள் மீது 746 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனகாவல்துறை தேர்தல் சிறப்பு பிரிவு

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக சென்னை மாநகர காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகளில் அரசியல் கட்சிகள் மீது 746 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - காவல்துறை தேர்தல் சிறப்பு பிரிவு

சென்னை மாநகர காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் பணப்பட்டுவாடா குறித்து ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை - காவல்துறை தேர்தல் சிறப்பு பிரிவு

தலைமை செயலாளர், குடும்ப நலன் மற்றும் சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

தமிழகத்தில் குட்கா, பான் மசாலா, புகையிலை பொருள் விற்பனைக்கு நிரந்தர தடை விதித்து புதிய அரசாணை வெளியிட கோரிய வழக்கு.

தலைமை செயலாளர், குடும்ப நலன் மற்றும் சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

லோக் ஆயுக்தா தலைவர் நியமனம். நியமன ஆணையை வழங்கினார், ஆளுநர் பன்வாரிலால்.

லோக் ஆயுக்தா தலைவர் நியமனம். நியமன ஆணையை வழங்கினார், ஆளுநர் பன்வாரிலால்.

லோக் ஆயுக்தா தலைவராக நீதிபதி தேவதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

நீதித்துறை உறுப்பினர்களான கிருஷ்ணமூர்த்தி, ஜெயபாலன் ஆகியோரும் நியமன ஆணைகளை பெற்றனர்

லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க வேண்டும் - லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
அரசு பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவை எதிர்த்து தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
அரசுப்பணியில் தொடர நினைத்தால் அரசின் கொள்கைகளையும், பணி விதிகளையும் பின்பற்றி தான் ஆக வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

சட்டவிரோத மணல் குவாரி தொடர்பாக சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் பொதுப்பணித்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

அதிமுக நிர்வாகிகள் மீது வழக்கு

கன்னியாகுமரி: தக்கலையில் கட்சி தொண்டர்களுக்கு பணம் விநியோகித்த புகாரில் அதிமுக நிர்வாகிகள் மீது வழக்கு

அதிமுக ஒன்றிய செயலாளர் மெர்லின்தாஸ், பொதுக்குழு உறுப்பினர் மணிகண்டன் ஆகியோர் மீது வழக்கு

தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரி தாஜி நிஷா கொடுத்த புகாரில் போலீசார் நடவடிக்கை

Wednesday, 20 February 2019

மனிதநேய ஜனநாயக கட்சி இடம்பெறாது-தமிழன் அன்சாரி.

பா.ஜ.க இடம்பெறக் கூடிய கூட்டணியில்மனிதநேய ஜனநாயக கட்சி இடம்பெறாது.

சென்னையில் நடக்கும் கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் முடிவு எடுக்கப்படும்.
ம.ஜ.க.வின் அரசியல் நிலை குறித்து பிப்.28-ல் முடிவு - தமிழன் அன்சாரி.

அதிமுக-பாமக கூட்டணி 40 மக்களவைத் தொகுதிகளிலும் தோல்வியடையும்: காங்கிரஸ் கருத்து

அதிமுக-பாமக கூட்டணி 40 மக்களவைத் தொகுதிகளிலும் தோல்வியடையும்: காங்கிரஸ் கருத்து

சென்னை: அதிமுக-பாமக கூட்டணி 40 மக்களவைத் தொகுதிகளிலும் தோல்வியடையும் என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது. அதிமுக-பாமக கூட்டணியை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்றும், அதிமுக, பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்தவர் ராமதாஸ் எனவும் தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணா கூறியுள்ளார். 

ஒப்பந்தம் கையெழுத்தானது அதிமுக பாமக இடையில்

முதல் ஒப்பந்தம் கையெழுத்தானது அதிமுக பாமக இடையில்
ஜெயலலிதா நினைவிடம் கட்ட கூடாது என்று எதிர்த்தவர் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
அதிமுக ஆட்சிக்கு எதிராக ஆளுநரிடம் ஊழல் பட்டியல் கொடுத்தவர் அன்புமணி.
இன்று மாசி மகம். ஜெ பிறந்த நட்சத்திரம்.
மிகவும் பொருத்தம்.

எச்.ராஜா தென்சென்னையில் தான் போட்டியிட விரும்புகிறார்

பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தென்சென்னையில் தான் போட்டியிட விரும்புவதாகவும், தனக்கு அங்கு சீட் வழங்க வேண்டும் என்று பாஜக தலைமையை வற்புறுத்தி வருகிறார்
அதே வேளையில். எச்.ராஜாவுக்கு சீட் வழங்கினால்..அது கூட்டணிக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தும் என்று அதிமுக தரப்பில் பாஜக தலைமையிடம் தெரிவிக்கப் பட்டுள்ளது
அதனை,ஏற்றுக்கொண்ட பாஜக தலைமை,வேறு மாநிலத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்க ஏற்பாடு செய்வதாக எச்.ராஜாவிடம் உறுதியளித்துள்ளது

அதிமுகவிடம், பாமக சார்பில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்:

அதிமுகவிடம், பாமக சார்பில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்:

1. காவிரி பகுதியை  பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்.

2. தமிழ்நாட்டின் 20 பாசனத் திட்டங்கள்.
& கோதாவரி, காவிரி இணைப்புத் திட்டம்

3. இடஒதுக்கீட்டை காக்க சாதிவாரிக் கணக்கெடுப்பு.

4. ஏழு தமிழர்கள் விடுதலை.

5. படிப்படியாக மதுவிலக்கு.

6. நீர்வளம் காக்க மணல் குவாரிகள் படிப்படியாக மூடல்.

7. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்.

8. காவிரியில் மேகதாது அணைக்கு தடை.

9. வேளாண் கடன்கள் தள்ளுபடி
& உழவர் ஊதியக்குழு அமைத்தல்

10. நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு.

நாடாளுமன்ற தேர்தலில் 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு தீர்மானம்

நாடாளுமன்ற தேர்தலில் 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு தீர்மானம்

 7 மக்களவை தொகுதியுடன் 1 மாநிலங்களவையும் ஒதுக்கீடு

 21 தொகுதி இடை தேர்தலில் அதிமுகவிற்கு பாமக முழு ஆதரவு

துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேட்டி
                                                    அறிவிப்பு



டி.ஜே.யூ                                                                                   TVR /510                   


தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ்  யூனியன்  அவசரசெயற்குழு  கூட்டம் இன்று 18.2.2019 கூட்டப்பட்டது. 

 இதில் மாநில தலைவர் கி.காளிதாஸ் அவர்கள் தலைமையில் மாநிலபொதுசெயலாளர் மு.ச.கிருஷ்ணவேணி
வடக்கு மண்டல மாநில செயலாளர் சூரியநாராயணன், மண்டலசெயலாளர் சரவணன்  கலந்துக்கொன்டு

 நமது யூனியனிலிருந்து நீக்கப்பட்ட மாநில செயலாளர் பொறுப்பிலிருந்த ஜுபிடர் ரவி மற்றும் கோபிநாத் இவர்களின் ராஜினாமா கடிதம்  தலைவர் அவர்களால் ஏற்கப்பட்டது. 

மேலும் தென்சென்னை மாவட்ட தலைவர் பொறுப்பிலிருந்து சிவகுமார் நீக்கப்பட்டார். மண்டலதலைவர் பொறுப்பிலிருந்து ரவிந்திரகுமார் விலகுவதாக அறிவித்ததும் ஏற்கபட்டது.  


உடனடியாக இக்கூட்டத்தில் தென் சென்னை மாவட்ட தலைவராக முன்னால் செயலாளராக இருந்த பாக்கியராஜ்  நியமிக்கப்பட்டார். இதற்கு தென் சென்னை மாவட்ட செயலாளர் ஹரிகிருஷ்ணன்,மாவட்டபொருளாளர்  ஞான மாணிக்கம் வழிமொழிந்தனர்.  இக்கூட்டத்திற்கு  வடசென்னை மாவட்ட தலைவர் தட்சனா மூர்த்தி கலந்துக்கொண்டு ஆதரவளித்தார், 

 மற்றும் நமது தெற்கு மண்டல மாநில செயலாளர் பரணிகுமார்,மத்திய சென்னை மாவட்ட தலைவர் சிரஞ்சீவி அணிஸ்  ,  காஞ்சிபுரம் , திருவள்ளூர், கோவை,  மாவட்ட  நிர்வாகிகளும்  தலைமை எடுத்த முடிவிற்கு ஆதரவளித்தனர்.

பொதுப்பணித்துறைக்கு நோட்டீஸ்

ஆதிதிராவிட உண்டு உறைவிட பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகோரும் வழக்கில் பொதுப்பணித்துறைக்கு நோட்டீஸ்

மதுரை: ஆதிதிராவிட உண்டு உறைவிட பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகோரும் வழக்கில் பொதுப்பணித்துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நெல்லையை நேர்ந்த பாண்டியன் என்பவர் தொடர்ந்த வழக்கில் பொதுப்பணித்துறை செயலர், நகர நிர்வாகத்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.