நாடு எங்கே போகிறது.
தமிழகத்தில் எங்கும் குழப்பமும், போராட்டமும் நடந்தவண்ணம் உள்ளது, இதை காணும் போது நமக்குள் தமிழகம் அமைதிநிலைக்கு திரும்பாதா என்ற ஒரு எண்ணமே நமக்குள் வருகிறது. இங்குள்ள அரசியல் வாதிகள் அரசியலை வியாபாரமாக மாற்றிக்கொண்டு வருகிறார்கள்,
தங்களுக்குள் நல்ல புரிதலுடனே எல்லா ஆர்ப்பாட்டமும், உண்ணாவிரதமும் நடத்தப்படுகின்றன. இங்கு பொது மக்கள் நலனை விட, தன் மக்கள் நலனை விட சுயநலனும், பேராசையும் தான் தலைவிரித்து ஆடுகிறது.
இதனால் மக்கள் நாம் யாரை நம்புவது, என்ற குழப்பத்திலேயே பயத்திலேயும் இருப்பதை பார்க்கும் போது ஜனநாயக நாட்டில்தான் நாம் வாழ்கிறோமா என்கின்ற குழப்பம் நமக்கும் வருகிறது.
மேலும் சுதந்திரமான இந்த நாட்டில் அரசியல்வாதிகளையோ ஆளும் ஆட்சியாளர்களையோ அவர்களது குறைகளை எடுத்துசொல்ல அரசுக்கு கடிதம் மூலமாகவோ, அல்லது பத்திரிகைகள் மூலமாகவோ சுட்டிக்காட்ட விரும்பினாலோ கூட அவர்கள் மீது வழக்குபதிவது இப்போது வாடிக்கையாகிவிட்டது . இதையும் மீறி சில பத்திரிகைகளும், சில செய்தியாளர்களும் தன்பணியைசெய்துவிட்டு கம்பி எண்ணிவிட்டு வந்தவர்களும் உண்டு.
ஏனென்றால் ஒருவர் சுட்டிக்காட்டும் போது மற்றவர்களுக்கும் அந்த உண்மை தெரிந்தால் அவர்களும் கொடிபிடிக்க ஆரம்பித்து விட்டால் நமது அரசியல் வாழ்க்கை, வியாபாரம் பாதிக்கப்படும் என்பதால் தானோ என்னவோ, ஆரம்பத்திலேயே, அவர்களை கண்டிப்பதாக நினைத்து அவர்கள் மீது காவல்துறை துணையுடன் கடுமையான தாக்குதல்களையும், வழக்குகளையும் அதிகாரவர்க்கம் ஏவுகிறது . இது நேர்மையானவர்கள் அனைவரையும் ஒன்றுசேர்த்து போராட தோன்றும் உணர்வுகளை தோற்றுவிக்கிறது .
தவிர சில சுயநலவாதிகளும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு தங்களுக்கேற்ற வகையில் மக்கள் மத்தியில் பிரச்சனைகளை புதிது புதிதாக தோற்றுவித்து, பலனடைகிறார்கள்.
இவ்வாறாக மற்றவர்களின் சுயநலத்திற்கும் ஆடம்பர வாழ்க்கைக்கும் மட்டுமே பொதுமக்கள் தவறான வாழ்க்கைக்கு தள்ளப்படுகின்றனர்.
இதில் வேதனை என்னவென்றால் படித்தவர்களும், அரசு அதிகாரிகளும் அதிக பேராசையால் அடுத்தவனை கெடுக்கின்றனர், இதனால் மக்களுக்கு கிடைக்கவேண்டிய அரசு சலுகைகளை அரசியல்வாதிகளுக்கு ஜால்ரா தட்டுவதுபோல், மக்களின் வரிப்பணம் மற்றும்பிற சலுகைகளை விழுங்கி ஏப்பம் விட்டுவருகின்றனர்.
இதில் கொடுமை என்னவென்றால் இந்த கேடுகெட்டவர்கள் மீதும் சட்டம் கடுமையாக பாய்வது போல நடிக்கும் அனால் பணத்தை பார்த்ததும் பயந்து பின் வாங்கும் நிலையில் தான் நாடு தற்போது உள்ளது. இதே நிலை நீடித்தால் கண்டிப்பாக மக்கள் இறங்கி போராடவும், தயங்க மாட்டார்கள். தற்போது நம் செய்தித்தாள்களில் அடிக்கடி சில, பல பகுதி மக்கள் தங்களின் அடிப்படை பிரட்சகனைக்காக போராட்டம் நடத்துவதையும், பல அதிகாரிகள் மக்களால் சிறைபிடிக்கப்படுவதும் நாம் காண்கின்றோம், அறிகின்றோம்.
எனவே அதிகாரிகள் இதை உணர்ந்து திருந்த வேண்டும் , இல்லையெனில் மக்களால் திருத்தப்படுவார்கள், நாடு இதை நோக்கியே செல்கிறது. மக்களே தங்கள் தேவைகளுக்காக இவர்களின் கள்ளத்தனம் உணர்ந்து நேரிடையாக போராட இறங்கி விட்டனர். எனவே அரசியல் வாதிகளோ அதிகாரிகளோ தன் நிலைஉணர்ந்து திருந்துவது நல்லது.
-மு. ச. கிருஷ்ணவேணி -ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர்

No comments:
Post a Comment