புதுடெல்லி,
பாராளுமன்றத்தில் இன்று காலை அவை தொடங்கியதும், ஆந்திரா மாநில உறுப்பினர்கள் தெலுங்கானா விவகாரத்தை முன்வைத்து கடும் அமளியில்
ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சியினர் ராஜீவ்காந்தி கொலை கைதிகள் விடுதலை தொடர்பான தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
12 மணிக்கு மீண்டும் அவை கூடியதும், எதிர்க்கட்சியினர் அமளியினால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரையில் ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவையில் பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் தம்பித்துரை கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார் என்று வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment