புதுடெல்லி,
கடந்த 1974 மற்றும் 1976 ஆகிய ஆண்டுகளில் இந்திய இலங்கை இடையிலான கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து கச்சத்தீவை இந்தியா திரும்பப்பெற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து பதில் அளிக்க மத்திய அரசுக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.
இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்துள்ள மத்திய அரசு கச்சத்தீவை திரும்ப பெறும் பேச்சுக்கே இடம் இல்லை என்று மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இலங்கையுடனான ஒப்பந்தத்தை திரும்ப பெறமுடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 1974 ம் ஆண்டு கடல் எல்லையை வரையறை செய்த போது கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமாகிவிட்டது என்றும் கச்சத்தீவை தாரைவார்க்கவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.
கச்சத்தீவில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கும் உரிமை இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், கருணாநிதியின் மனுவில் பொதுநலன் இருப்பதாக தெரியவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment