புதுடெல்லி,
ரெயில்வே வாரியத்தில் பணப்புழக்கம் அதிகம் உள்ள பிரிவில் உறுப்பினராக பணி மாற்றம் செய்ய ரூ.10 கோடி லஞ்ச பேரம் பேசப்பட்டு, முன்பணமும் வழங்கப்பட்டது. அப்போது ரெயில்வே மந்திரியாக இருந்த பவன்குமார் பன்சால் இதன்காரணமாக பதவியை ராஜினாமா செய்தார். வழக்கில் முக்கிய குற்றவாளியான அவரது மருமகன் விஜய்சிங்லா மற்றும் 9 பேரை சி.பி.ஐ. கைது செய்து வழக்குப்பதிவு செய்தது.
டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய்சிங்லா உள்பட 10 பேர் மீதும் ஊழல் தடுப்பு சட்டத்துடன் தொடர்புடைய குற்றச்சதியில் ஈடுபட்டதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கை ஆகஸ்டு 25&ந்தேதிக்கு நீதிபதி சுவர்ண காந்தா சர்மா ஒத்திவைத்தார். அப்போது அரசுதரப்பு சாட்சியங்கள் பதிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment