Tuesday, 4 March 2025

விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றும் விவகாரம்.. மதுரை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு.

      கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் அருள்ஞானபுரத்தைச் சேர்ந்த தினகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தினகரன் கூறுகையில், கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தாலுகாவிற்கு உட்பட்டது புத்தேரி ஊராட்சி. இந்த கிராமத்திற்கு உள்பட்ட நஞ்சை விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற சட்டவிரோதமாக அதிகாரிகள் அங்கீகாரம் அளித்திருக்கிறார்கள். அதன் காரணமாக அங்குள்ள விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன.


    இதனால் அப்பகுதியில் சுற்றுச்சுவர் எழுப்பப்படுவதால், விவசாய பணிகள் தடைப்பட்டிருக்கின்றன. எனவே விவசாய நிலத்தையும், பாசன நீர் நிலைகளையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் மீட்க உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். சட்டவிரோதமாக வீட்டுமனை அங்கீகாரம் அளித்ததை ரத்து செய்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு தினகரன் தனது மனுவில் கூறியிருந்தார். இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் நிஷாபானு, விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த மனு குறித்து நகர் ஊரமைப்பு ஆணைய இயக்குனர், கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர், பொதுப்பணித்துறை கோதையாறு நீர்ப்பாசன உதவி செயற்பொறியாளர் ஆகியோர் 12 வாரத்தில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்கள்..

No comments:

Post a Comment